பசங்க மற்றும் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்!
என்ன பசங்களா! எல்லாரும் கும்பலா எங்க போயிட்டு வர்றீங்க? என்று தனது விசாரணையைத் தொடங்கினார் கிருஷ்ணசாமி மாமா.
பசங்க படத்துக்கு போயிட்டு வர்றோம் என்றான் புகழேந்தி. அதுதான் தெரியுதே! பசங்கள்லாம் படத்துக்கு போயிட்டு வர்றீங்க... என்ன படத்துக்கு போயிட்டு வர்றீங்கன்னு கேட்டேன்.
அதைத்தான் நாங்களும் சொல்றோம்! பசங்க படத்துக்கு போயிட்டு வர்றோம்!
அடப்பாவிகளா! எல்லாரும் வடிவேலு மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டீங்களா? தெளிவா சொல்லுங்கடா... என்ன படத்து... ஓஹோ... பசங்க படத்துக்கு போயிட்டு வர்றீங்களா?
அதைத்தான் நாங்களும் சொன்னோம். பசங்க படத்துக்கு போயிட்டு வர்றோம்னு
திரும்பவும் ஆரம்பிக்காதீங்கப்பா... தாங்காது. என்ன... படம் நல்லாயிருக்கா? என்று பயப்படுவது போல நடித்தார் கி.மூ.
நல்லா இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு என்றனர் அனைவரும்.
அது சரி... விடுமுறை விட்டாச்சு... உங்களை மாதிரி வாண்டு களுக்காகத்தான் படம் எடுத்து அதையும் விடுமுறைக் காலத்திலேயே வெளியிட் டிருக்காங்க... உங்களுக்கு பிடிக்காம இருக்குமா?
என்ன படம் மாயாஜாலக் கதை மாதிரியா? மந்திரவாதிக் கதையா?
புகழ்பெற்ற மனிதர்கள் - 11 -விடுதலை வீரர் ஆங்சான்
- கு.வெ.கி.ஆசான
இப்பொழுது மியான்மா (MYANMAR) என அழைக்கப்படும் நாட்டின் முந்தைய பெயர் பர்மா (Burma) என்பதாகும். பிரிடிஷ் ஏகாதி பத்திய ஆட்சியில், 1935 வரை இந்தியா வுடன் இணைந்திருந்தது. பர்மாவின் (மியான் மாவின்) விடுதலைக்கு வீரம்செறிந்த போரினை முன்நின்று நடத்தித் தம் 32ஆம் அகவையில் புகழ் அடைந்தவர் ஆங் சான் (Aung San).
பிறப்பு - படிப்பு
மத்திய பர்மாவில், மாக்வெ மாவட்டத் தைச் சேர்ந்த நாட்மாக் நகரியத்தில் 1915 பிப்ரவரி 13இல் பிறந்தவர், ஆங் சான். அவருடைய தாய் jh N (Daw Suu); தந்தை ஊ ஃபா; அவர் ஒரு வழக்கறிஞர். அவர்கள் மரபு வழியில் நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முதலில் ஆங் சான், நாட்மாக் கில் இருந்த தாய்மொழிப் பள்ளியில் படித்தார். அடுத்து எனாங்கியாங் எனும் இடத் தில் தேசிய உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1932இல் மெட்ரிகுலேசன் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றார். பர்மிய மொழியிலும், புத்தரின் அறிவுரைகளைக் கொண்ட பாலி மொழியிலும் அதிக மதிப் பெண்கள் வாங்கினார்.
மாணவர் தலைவர்
|