> ஆசிரியர் தாத்தாவின்
> பெரியார் தாத்தா 40
> உடல் அறிவோம்
> தமிழறிஞர்

> படக்கதை

> புரட்சிக்கவிஞர்
> குட்டிக்கதைகள்
> அ[ய்]வன்
> உடல் அறிவோம்
> மனித இன வரலாறு
> உலகநாடுகள்
> உலக நடப்பு

தமிழறிஞர்

உயர்ந்த தரத்தில் அமைந்த தமிழ் இலக்கிய அறிவு, ஆங்கில நூல் அறிவு, தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக உரை யாற்றும் ஆற்றல், தெளிவான எழுத்தாற்றல் ஆகிய வற்றின்மூலம் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றியவர், பேராசிரியர் முனைவர் அ.சிதம்பரநாதன் அவர்கள் சிறந்த தமிழ்ப் பேராசிரியராகவும், கல்வியாளராகவும், தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்து புகழ் பெற்றார். பண்பாளர், பழகுவதற்கு இனியவர்; எடுப்பான உயர்ந்த தோற்றமும், புன்னகை பொலியும் முகமும் பெற்றவர்; தம்மிடம் வந்து, தேவையைத் தெரிவித்தவருக்கு உதவி மகிழ்ந்தவர்.
பிறப்பு - படிப்பு
காவிரி ஆற்றின் கரையில் அமைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம்,குடந்தை, குடமூக்கு எனும் பெயர்களால் அறியப்படும் புகழ்பெற்ற நகரில் அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதி அம்மையார் ஆகியோருக்கு 1907 ஏப்ரல் 3இல் பிறந்தவர் சிதம்பரநாதன். இவருக்கு அண்ணன் - தம்பியர் நால்வர்; உடன் பிறந்த பெண்கள் மூவர்.
முதல் இரண்டு வகுப்புகளை, கும்ப கோணம் பேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியில் முடித்த பின்பு, நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார்; பள்ளி இறுதி வகுப்பை அங்கிருந்து முடித்தார்.
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் 1924இல் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்து, ஆங்கிலம் - தமிழ் இரண்டையும் சம அளவில் பயின்ற சிதம்பரநாதன், தமிழ்ப் பற்றின் காரணமாக, கலை இளநிலை (பி.ஏ.) வகுப்பில், சிறப்புப் பாடமாக அம்மொழியைப் பயின்றார். 1926-27ஆம் ஆண்டில், கல்லூரியின் மாணவர் மன்றச் செயலாளராகப் பணியாற்றினார். அதுவரை கல்லூரியின் அனைத்துக் கூட்ட அறிக்கைகளும் ஆங்கிலத்தில் இருந்தன. ஆனால் இவர், முதன் முதலாகத் தமிழ்க் கூட்ட அறிக்கைகளை அம்மொழியிலேயே தருவதற்கு வகை செய்தார். எதிர்ப்புகளுக்கு இடையில், தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோரைக் கல்லூரிக்கு அழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்தார்.
கல்லூரி வரலாற்றுத் துறை நடத்திய போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாகரிகத்தின் தொன்மை எனும் தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றார். 1928இல் பட்டப் படிப்புத் தேர்வில், தமிழில் மாநிலத் திலே முதன்மையாக வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.
பட்டம் பெற்றபின், சென்னைப் பல்கலைக் கழகத்திலும், அரசு தலைமைச் செயலகத் திலும் எழுத்தராகப் பணியாற்றினார். பின்பு கல்லூரியில் தமிழ் கற்பிக்க அரசு சிதம் பரநாதரை நியமித்தது. முதலில் சென்னை யிலும் அடுத்துப் பாலக்காட்டிலும் பணியாற்றினார்.
தமது 26ஆம் அகவை முடிந்த நிலையில், 1933 ஜூனில் சிதம்பரநாதர், பெரிய நாயகி அம்மையாரை மணந்தார். இவருடைய துணைவியார் ஓவியத்திலும், இசையிலும் ஈடுபாடும் திறனும் பெற்றிருந்தார். பிற்காலத் தில் கலையுள்ளம் எனும் நூல் எழுதிப் பெயர் பெற்றார். அவருடைய திறமைகள் வெளிப் படுவதற்குக் கணவர் ஊக்கம் தந்தார்.
பணிகள் - பதவிகள்
திருமணத்தை அடுத்து, சிம்பரநாதர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கலை முதுநிலை (எம்.ஏ.) தமிழ் வகுப்பில் சேர்ந்து, 1935இல் முதல் இடம் பெற்றுத் தேர்ந்தார். தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு, ஆங்கிலத்தில் தம் முடிவுகளைக் கட்டுரையாகத் தொகுத்து 1942இல், பி.எச்டி எனும் முனைவர் பட்டம் பெற்றார். தமிழியலில் ஆய்வுப் பட்டத்தை முதல் முதலில் பெற்றவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை தாங்கிய தமிழ்த் துறையில் 1935இல் சேர்ந்து விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங் கினார்; பேராசிரியராக உயர்ந்தார். 1948இல் சில மாதங்கள் இசை காலத் துணைவேந்தராகப் பொறுப்பு ஏற்றார். நல்லாசிரியர், சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றார்.
பல்கலைக் கழகப் பயிற்று முறை, இயங்கு முறை, ஆட்சித் திறன் ஆகியவற்றை அறிய 1955இல் லண்டன் சென்றார்.
மாநிலத் தமிழாசிரியர் கழகத் தலைவராக 1956இல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிதம்பரநாதர், அவர்களின் உரிமைக்கும் ஊதியத்திற்கும் உழைத்தார். 1958இல் சட்ட மேலவை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துத் துறைகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு, குறிப்பாக கல்வித் துறை பற்றி, அறிவார்ந்த ஆலோசனைகளை நல்கினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில், ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தின் தலை மைத் தொகுப்பாசிரியராக ஆறு ஆண்டு கள் பணி செய்தார். 1963, 1964, 1965 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதன் மூன்று தொகுதி கள் வெளியாயின. குறித்த காலத்தில் சிறப்பாக அப்பணியை முடித்தமைக்குப் பாராட்டுப் பெற்றார்.
1960இல் மாஸ்கோவில் 25ஆவது உலக மொழிப் பேரறிஞர்கள் மாநாடு நடந்தது. அதில் சிதம்பரநாதர் தென்னகத்தின் பேராளராகக் கலந்து கொண்டார். உலகிற்குத் திருவள்ளு வரின் செய்தி எனும் தலைப்பில் ஆங்கில உரை நிகழ்த்தினார். தமது ஆங்கிலப் புலமையைத் தமிழுக்குத் தொண்டாற்றப் பயன்படுத்தினார்.
1965-67ஆம் ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார். 1967இல் பக்கவாதம் ஏற்பட்டுத் தளர்ச்சி அடைந்தார். 1967 செப்டம்பர் 7இல் சிதம்பரநாதருக்கு மணிவிழா நடந்தது. பின்பு 1967 நவம்பர் 22இல் மறைந்தார்.
பொழிவும் எழுத்தும்
தமிழ் அறிவும் உணர்வும் மிக்கப் பல நூறு மாணாக்கர்களை உருவாக்கியவர், சிதம் பரநாதர். தமிழிலும், ஆங்கிலத்திலும் 23 நூல்களுக்குக் குறையாமல் எழுதியவர். இலக்கியம், இலக்கணம், மொழியியல், வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு, வாழ்வியல், மொழி பெயர்ப்பு எனும் வகை களில் அவருடைய எழுத்துகள் அடங்கும். பின் வருவன அவற்றில் சில: இந்திய சரித்திர மாலை (1930), கட்டுரைக் கொத்து (1933), முன்பனிக் காலம் (1951), உழைப்பால் உயர்ந்த ஒருவர் - புக்கர் தி.வாஷிங்டன் (1952), சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954), தமிழோசை (1956), ஒத்தெல்லோ, Advanced studies in Tamil Prosody (1942), Introduction to Tamil Poetry (1958).
கற்றவர்கள் சிதம்பரனாரின் நூல்களை விரும்பிப் படித்துப் பயன்பெற்றனர். அவரு-டைய நேர்த்தியான சொற்பொழிவுகளை அனைவரும் கேட்டு இன்புற்றனர். அவருடைய உழைப்பு தமிழின் கருத்து வளத்தைப் பெருக்கியது. வாழ்க அவர்தம் புகழ்!

Home l Unmai l Periyar pinju l The Morden Rationalist l Viduthalai l Dravidar Kazhagam l Vibgra