உலகநடப்புஉங்களுக்குத்தெரியுமா?

1. அண்மையில் காலமான, எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் ஏறி சாதனை படைத்த எட்மண்ட் ஹிலாரி (வயது 88) எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
(அ) இங்கிலாந்து (ஆ) பின்லாந்து (இ) நியூசிலாந்து

2. 2007 இறுதி மாதங்களில் தமிழகத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக தமிழக அரசு, நடுவண் அரசிடம் எவ்வளவு தொகை கோரியுள்ளது?
(அ) ரூ. 1,510 கோடி (ஆ) ரூ. 1,100 கோடி (இ) ரூ. 900 கோடி

3. ஹேப்பி பொங்கல் என்று இங்கிலீசில் சொல்லாதீர்கள்; பொங்கல் வாழ்த்துகள் எனச் சொல்லுங்கள் என்று கூறிய தமிழக அமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் எந்தெந்தத் துறைகளுக்கு அமைச்சராக உள்ளார்?
(அ) வருவாய்த் துறை (ஆ) பொதுப்பணித் துறை (இ) ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை

4. கடந்த மாதம் இந்தியா வந்திருந்த இங்கிலாந்து பிரதமரின் பெயர் என்ன?
(அ) டோனி பிளேர் (ஆ) கார்டன் பிரவுன் (இ) மார்க்ரெட் தாட்சர்

5. இந்து மதச் சம்பிரதாயப்படி இந்து அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி, கேரள மாநிலம் கடம்புழா தேவி கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட, இந்து மதக் கடவுள் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ள பிரபல பாடகர் யார்?
(அ) எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (ஆ) ஜெயச்சந்திரன் (இ) கே.ஜெ. யேசுதாஸ்

6. இந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின சிறப்பு விருந்தினராக எந்த நாட்டின் அதிபர் (நிக்கோலஸ் சர்கோசி) கலந்து கொண்டார்?
(அ) பிரான்ஸ் (ஆ) உகாண்டா (இ) இங்கிலாந்து

7. 2007ஆம் ஆண்டில் சேது சமுத்திரத்திட்டம் நிறைவேறியிருந்தால் எத்தனை கப்பல்கள்அந்த வழியே சென்றிருக்கும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார்?
(அ) 1345 (ஆ) 16,442 (இ) 10,113

8. தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன்வரைவை மாண்புமிகு - மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த நாள் எது?
(அ) 2008 ஜனவரி 29 (ஆ) 2008 ஜனவரி 31 (இ) 2008 பிப்ரவரி 1