|
|
எலும்புகள்
 |
நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சி ஜனைச் சுமந்து செல்லும் சிவப்பணுக்கள் தோன்றும் இடம் எலும்பு மஜ்ஜையே ஆகும். நம் உடம்பின் ஒவ்வொரு அசைவிற்கும் காரண மாய் இருப்பவை எலும்புத் தசைகளேயாம். எலும்பும், தசைகளும் இயங்கினால் மட்டுமே நாம் அசைய முடியும்.
பல எலும்புகள் ஒன்று சேர்ந்த கூடு போன்ற அமைப்பிற்கு எலும்புக் கூடு என்று பெயர். இது இல்லாவிட்டால் நம் உடல் சுருங்கிய தோல்பை போல ஆகிவிடும். எலும்புகளே நம் உடலைத் தாங்கி நாம் நேராக இருக்க உதவுபவை. இவையே நம் உடலுக்கு ஒரு வடிவத்தைத் தருகின்றன. மேலும் நம் உடலில் சேரும் கொழுப்புகளையும், தாது உப்பு-களையும் சேமிக்கும் இடமாகவும் எலும்புகள் விளங்குகின்றன.
எலும்புகள் கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட் ஆகிய தாதுப் பொருள் களால் ஆனவை. எலும்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி மிகவும் அவசியமானது. சூரிய ஒளியில் இவ்வைட்டமின் உள்ளது. 22 வயது வரைதான் எலும்புகள் வளரும். அதற்குப்பின் அவை வளரா.
பிறந்த குழந்தையின் உடம்பில் 270 எலும்புகள் இருக்கும். குழந்தை வளர வளர 64 எலும்புகள் மற்ற எலும்புகளோடு சேர்ந்து இறுதி யில் முழு மனிதன் உடம்பில் 206 எலும்புகளே இருக்கும்.
எலும்பை எண்ணுவோம்.
உடல் உறுப்புகள் எலும்புகள் எண்ணிக்கை
1. மண்டை ஓடு 8
2. முகம் 14
3. கை (30 ஒ 2) 60
4. கால் (30 ஒ 2) 60
5. கழுத்து 7
6. முதுகெலும்புத் தொடர் 33
7. விலா எலும்புகள் 24
மொத்த எலும்புகள் 206
1. மண்டையோடு
மண்டையோடு எலும்புகள் தட்டையானவை. அசையாதவை. இவை மூளையைப் பாதுகாக்கின்றன.
எலும்பின் பெயர் எண்ணிக்கை
1. பிராண்டல் 1 நெற்றி எலும்பு
2. எத்மாய்டு 1 மூக்குத் துவார மேல் எலும்பு
3. ஸ்பினாய்டு 1 மேல்குழி மண்டை ஓட்டு எலும்பு
4. டெம்பொரல் 2 பக்க எலும்பு
5. ஆக்ஸிபிடல் 1 கீழ் மண்ட ஒட்டு எலும்பு
6. பெரைட்டல் 2 மேல் மண்டை ஒட்டு எலும்பு
மொத்தம் 8
2. முகம்: முகத்தில் உள்ள எலும்பில் கீழ்த் தாடை எலும்பு மட்டுமே அசையக் கூடியது. காதில் உள்ள ஸ்டேபஸ் என்ற எலும்புதான் நம் உடலில் உள்ள எலும்புகளிலேயே மிகவும் சிறியது.
3. கழுத்து: மனிதன், ஒட்டகச் சிவிங்கி உட்பட பாலூட்டிகள் அனைத்திற்குமே கழுத்தில் உள்ள எலும்புகள் 7 தான்.
4. முதுகெலும்புத் தொடர்: முதுகெலும்புத் தொடரில் 33 முள்ளெலும்புகள் உள்ளன. இவை தண்டு வடத்தை மூடிப் பாதுகாக்கின்றன. இவை 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பகுதியின் பெயர் எலும்பு எண்ணிக்கை
கழுத்துப் பகுதி 7
மார்புப் பகுதி 12
இடுப்புப் பகுதி 5
திரிக முள்ளெலும்புப் பகுதி 5 (முக்கோண வடிவில் இருக்கும்)
வால் முள்ளெலும்புப் பகுதி 4
மொத்தம் 33
5. விலா எலும்புகள்: விலா எலும்புகள் 12 ஜோடியாகக் காணப்படும். இவை மார்புக் கூட்டை உருவாக்குகின்றன. மார்பில் உள்ள முக்கிய உறுப்புக்களான இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புக்களை இவை மூடிப் பாதுகாக்கின்றன.
மார்பெலும்புடன் இணைந்திருக்கும்
உண்மை விலா எலும்புகள் = 7 இணை
7வது விலா எலும்புடன் இணைந்திருக்கும்
பொய் விலா எலும்புகள் = 3 இணை
மார்பெலும்புடன் இணையாத
மிதக்கும் விலா எலும்புகள் = 2 இணை
6. கை எலும்புகள்
எலும்புகள் எண்ணிக்கை
மேல் கை எலும்பு 1
முன் கை எலும்புகள் 2
மணிக்கட்டு 8
உள்ளங்கை 5
கட்டை விரல் 2
மற்ற 4 விரல்கள் (4ஒ3) 12
மொத்தம் 30
7. கால் எலும்புகள்
காலில் உள்ள தொடை எலும்புதான் நம் உடலில் உள்ள எலும்புகளிலேயே மிகவும் பெரியதாகும்.
எலும்புகள் எண்ணிக்கை
தொடை 1
முழங்கால் 1
கீழ்க்கால் 2
கணுக்கால் 7
உள்ளங்கால் 5
கட்ட விரல் 2
மற்ற 4 விரல்கள் (4ஒ3) 12
மொத்தம் 30
இரண்டு எலும்புகள் பொருந்துதலால் ஏற்படுபவை மூட்டுகள் ஆகும். நம் உடம்பில் 68 மூட்டுகள் உள்ளன. பரம்பரையாகவும், விபத்தில் அடிபடுவதாலும், உடலின் அதிக எடையாலும், மன உளைச்சலாலும் மூட்டு களில் ஏற்படும் பாதிப்பே மூட்டு வலி எனப் படும். இது வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
சரியான முறையில் உட்காருவது, நடப்பது, வேலை செய்வது, உடற்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் மிதித்தல் ஆகிய நல்ல பழக்கங்களால் மூட்டு வலி வருவதைத் தவிர்க்கலாம்.
- க. மலையரசன், திருநகரம், அருப்புக்கோட்டை |