|
|
தெரிந்து கொள்வோம்
 |
1714இல் ஹென்றி மில்லர் என்ற பொறியாளர்தான் முதன் முதலில் டைப்ரைட்டரை உருவாக்கினார்.
1718இல் ஜேம்ஸ் பக்கின் என்ற பிரிட்டன் நாட்டவர் எந்திர துப்பாக்கியை கண்டுபிடித்தார்.
1730இல் ரினை ரியூமூர் என்பவர் ஆல்கஹால் வெப்ப அளவு என்ற வெப்ப அளவியை கண்டுபித்தார்.
1735இல் ஜான் ஹரிசன் எனும் பிரிட்டன் நாட்டு விஞ்ஞானி குரோனோ மீட்டரை கண்டுப்பிடித்தார்.
1769இல் நிக்கோலஸ் குனாட் எனும் அமெரிக்கர் முதன் முதலில் நீராவியால் இயங்கும் கார் கண்டுபிடித்தார்.
1773இல் அண்டார்டிகா கண்டத்தை கப்பலியே சுற்றிவந்தவர் ஜேம்ஸ்குக்
1780இல் பெஞ்சமின் பிராங்ளின் இரட்டைக் குவி லென்ஸ் கண்டுப்பிடித்தார்.
1885இல் வானமாரம் என்ற விஞ்ஞானி ஓசோன் வாயுவைக் கண்டுபிடித்தார்.
1787இல் எம்.லால் மோண்ட் என்ற பிரான்சு நாடடவர் தான் முதன்முதலில் தந்தியை கண்டுபிடித்தார்.
1789இல் மார்டின் ஹெயின்ரிச் கிளாப்ரோத் என்ற ஜெர்மன் நாட்டு வேதியியலர் யுரேனியம் என்ற தனிமத்தை கண்டுப்பிடித்தார்.
1795இல் என்.ஜே.கொண்டே என்பவர் தற்போதைய அமைப்புள்ள (நாம் பயன்படுத்தும்) பென்சில் கண்டுப்பிடித்தார்.
1796 மே 14இல் பெரியம்மை நோயை தடுக்க எட்வர்ட் ஜென்னர் என்ற விஞ்ஞானியால் அம்மைப்பால் கண்டுபிடித்தார்.
1803இல் எஸ்.டென்னன்ட் என்ற விஞ்ஞானி ஆஸ்மினியம் என்ற தனிமத்தை கண்டுப்பிடித்தார்.
1819இல் ரினிதியோபில் ஹயசிந்த் லென்னக் என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவர் ஸ்டெத்தஸ்கோப் கண்டுப்பிடித்தார்.
1820இல் மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி காந்தத்திற்கும், மின்சாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுப்பிடித்தார்.
1823இல் கம்ப்யூட்டர்களின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் என்பவர் டிபரன்ஸ் என்ஜின் என்ற கருவியை கண்டுப்பிடித்தார்.
1824இல் ஜோசப் ஆஸ்ப்தின் என்னும் பிரிட்டன் அறிவியலார் போட்லாந்து சிமெண்ட் கண்டுப்பிடித்தார்.
1827இல் கார்ல் ஏர்னஸ்ட் வான்பேயர் பாலூட்டிகளில் சினை அனுவைக் கண்டுப்பிடித்தார்.
1828 முதல் ரக்ஷ்யா அரசு பிளாட்டினத்தினாளான நாணயங்களை வெளியிட்டது.
1838இல் ஹைப்போலைட் பிக்சை என்ற பிரான்ஸ் நாட்டு அறிஞரால் டைனமோ கண்டுப்பிடிக்கப்பட்டது.
1846இல் ஜோஹன் காலே என்ற விஞ்ஞானி நெப்டியூன் என்ற புதிய கோளைக் கண்டுப்பிடித்தார்.
1846இல் ரிச்சர்டு ஹோ என்ற அமெரிக்க விஞ்ஞானி உருட்டல் முறை அச்சிடும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
1847இல் ஜேம்ஸ் சிம்சன் என்ற பிரிட்டன் நாட்டு வேதியியலர் குளோரோபார்ம் என்ற மருந்தை கண்டறிந்தார்.
1878இல் கிராமபோன் இசை தட்டை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தார்.
1883இல் விப்ரியோ காலரா கிருமிகளைக் ராபர்ட் கோக் கண்டுபிடித்தார்.
- தொகுப்பு: த.மு. யாழ்திலீபன், வேப்பிலைப்பட்டி, தருமபுரி மாவட்டம். |