|
|
உலகநாடுகள்
ஈக்வடார்
அமைவிடம்: தென்அமெரிக்காவின் வட மேற்குப் பகுதி
மொத்தப் பரப்பு: 1,05,037 சதுர மைல் (கேலபெகோஸ் தீவுகள் உள்பட)
தலைநகர்: கீட்டோ
மக்கள் தொகை: 13,547,510 (2002 கணக்கெடுப்பு) (இதில் 5இல் ஒரு பங்கினர் இந்தியர்கள்)
மக்கள் தொகை வளர்ச்சி: 5 சதவிகிதம்
மொழி: ஸ்பானிஷ்
மதம்: ரோமன் கத்தோலிக்கம்
நாணயம்: அமெரிக்க டாலர்
கல்வியறிவு: 92.5 சதவிகிதம் (ஆண்கள் 94 சதவிகிதம், பெண்கள் 91 சதவிகிதம்)
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளோர்: 41 சதவிகிதம்
இருப்புப்பாதை: 966 கி.மீ.
சாலைகள்: 43,197 கி.மீ.
தொலைபேசிகள்: 1,612,300 (2004)
இணையதள குறியீடு: .cc
 |
சிறப்புத் தகவல்கள்: உலகின் மிக உயர்ந்த எரிமலையான கோட்டோபாக்ஸி இந்நாட்டில் அமைந்துள்ளது. இதன் உயரம் 5,897 மீட்டர். நிலநடுக்கோட்டின் இடப்புறம் அமைந்துள்ளது. எனவே இந்நாடு முழுவதும் பூமத்திய ரேகை மண்டலத்தை சார்ந்த காலநிலைகளை உடையதாகும்.
வரலாறு: 1450இல் இன்காக்கலாஸ் கைப்பற்றப்பட்டது.
1534இல் ஸ்பானியர்களின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. பெருநாட்டு வைசிராய் தனது ஆட்சி மண்டலத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்.
1740இல் ஸ்பானியர்களிடமிருந்து விடு தலை பெற்று கிரான் கொலம்பியா குடியரசின் ஒரு பகுதியானது.
1830இல் தன்னாட்சி பெற்ற நாடானது.
1941இல் பெரு நாட்டுடன் போர் மூண்டது
2000 முதல் சகர் என்னும் அவர்களது நாணயம் மாற்றப்பட்டு அமெரிக்க டாலர் அமலுக்கு வந்தது.
வருவாய்: சேவைத் துறை மற்றும் வேளாண்மை. கச்சா பெட்ரோலியம், வாழைப் பழங்கள் மற்றும் ஷெல் மீ முதலியன முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.
அரசு முறை: குடியரசு நாடு (குடியரசு தலைவர் நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்கிறார்)
சுதந்திர நாள்: மே 24, (1822, ஸ்பெயின்)
தற்போதைய குடியரசுத் தலைவர்: ஆல்பர்டோ பாலசியோ. |