|
|
விடாமுயற்சி
தண்ணியர்ரைட்ஸ்
 |
தலைப்பில் சொல்லப்பட்டுள்ள திண் ணியர், திருச்சி மாவட்டம், திண்ணியம் கிராமத்திற்கு மாறாக, வானூர்திகளுக்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உலகில் மனித வரலாற்றை வானோக்கி எழுச்சியுற வைத்த;
பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்
கவிஞர் கண்ணதாசனை எழுத வைத்த;
வில்பர் ரைட், ஆல்வில் ரைட் சகோதரர் களின் கதையைச் சொல்லும் தலைப்பு தான் அது.
அந்த உடன் பிறப்புகளின் எண்ணமும், திண்ணமும் தான். தோல்வி கண்டு துவண்டு விடாத உர நெஞ்சமும் உற்சாகமும் தான், வானூர்திக் கண்டுபிடிப்பு என்னும் இலக்கை ஈடேற்ற உதவியது. அவர் தம் கடும் உழைப் பின் விளைவுதான், மனித இனத்தின் முதன் முதல் பறக்கும் எந்திரம். ரைட் சகோதரர் களின் கண்டுபிடிப்பினை மனித இனம் முழுவதுக்குமே சொந்தமாக்குவதன் ஊடாக, பார்ப்பனர்கள், தமது இராமாயணத் தொல்கதை அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளின் உச்சமாகி,
சீதையை, அவள் உடன்பாட் டோடு, கவர்ந்து சென்ற இராவணன், புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான் என்றும், பார்ப்பன வில்லாதிக்கக் கொத்தடிமைக் கயவனான கம்பன், சீதையை அவளி ருந்த பர்ணசாலை நிலத் தோடு தூக்கிச் சென்றான் (அது என்ன கம்பா! ஜஜஜம்போ ஜெட் விமானமா?) இந்தத் தொல்கதை விமான (புஷ்பகம்)ப் புளுகுக்கு ஏதோ ஆதாரம் இருப்பதைப் போல பம்மாத்துப் பண்ண வந்த பெங்களூரு பார்ப்பானின் எத்துவாளித் தனத்தை, ஆந்திர மாநில பெரியார் பற்றாளர் விசாகப்பட்டினம் டாக்டர். ஜெயகோபால் அவர்கள், ஆதாரங்களோடு புட்டுப்புட்டு வைத்து, பார்ப்பனர்கள் தலையிலொரு குருதிக் குட்டு வைத்ததை, அதன் தமிழாக்கம், ஒரு கட்டுரையாக விடுதலை நாளேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிவந்து, பார்ப்பனப் புளுகு வெளிப்பட்டுப் போனதை, திராவிடர் கழகத் தொண்டர்கள் நன்கறிவர்.
இனி, 1903ஆம் ஆண்டில்தான், அமெரிக்கா வில், ரைட் சகோதரர்களின் காற்றைவிடக் கனமான முதன் முதல் வானூர்த்தி தொடர்பான சில விவரங்களை, திருவள்ளுவர் சொன்னதற் கிணங்க,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப-எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
என்ற குறள் இலக்கணத்திற்கு ஏற்ப, வெற்றி நடைபோட்ட வில்பர்-ஆர்வில் ரைட் உடன் பிறப்புகள் குறித்த குறிப்புகளைக் கீழே காணலாம்.
அமெரிக்காவிலுள்ள ஓஷியோ மாகாணத் தில், வில்பர்-ரைட் உடன் பிறப்புகள், தமது தந்தையார் மில்டன் ரைட்டுடன் வசித்து வந்தனர்.
மில்டன் எப்போதும் தம் மக்களை செயற்கரிய செய்திட, ஊக்கப்படுத்தி வந்தார்.
சிற்சில முயற்சிகளால் இயலாமல் போனா லும், கொண்ட இலட்சியத்தைக் கைவிட்டு விடக் கூடாதென மில்டன் வலியுறுத்துவார். ரைட் உடன்பிறப்புகளின் புதிய கண்டுபிடிப் புக்கு அவர்தம் பாட்டனாரின் பரந்து விரிந்த பண்ணையே சோதனைக் களம் ஆயிற்று.
தந்தையார் மில்டன் ரைட், கிளைடர் பொம்மை ஒன்றை வாங்கித் தந்ததையடுத்து, ரைட் உடன் பிறப்புகளின் வானூர்திக் கண்டு பிடிப்பு ஆர்வத்துக்கு கால்கோள் நாட்டப் பட்டது. மொம்மை இயங்கிய விதம், ரைட் சிறார்களின் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டிவிட்டது.
அது வரையிலும், கால் பகுதிக்கும், கைகளுக்குமிடையே சிறகுகளைக் கட்டிக் கொண்டு பறக்க முயன்று, தோல்வியும், மரணமும் பரிசாகக் கிடைத்திருந்தாலும், ரைட் சிறார்களின் வானூர்திக் கண்டுபிடிப்பு முயன்று, சீதை-இராவணர்களை உண்மை யிலேயே ஏற்றிச் செல்லும் புஷ்பக விமான முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. இரும்பு-மரம் ஆகியவற்றைக் கொண்டு ரைட் பாட்டனாரின் பண்ணைக் களப் பணிகள் சுறுசுறுப்படைந்தன. மேலெழும்பக் கூடிய சிறு சிறு கருவிகளை, முதன் முதலில், ரைட் உடன் பிறப்புகள் வெற்றிகரமாக உருவாக்கினர்.
ஒரு கிறிஸ்துமஸ் நாளன்று, குடை வுக் கருவிப் பொட்டலமொன்று ரைட் உடன் பிறப்புகளுக்குப் பரிசாக அனுப்பித் தரப்பட்டது. (நம்மாட்கள் விசேட நாட்களில், காலில் விழுந்து கடையனாவது தவிர வேறு எதுவும் உருப்படியாக நடப்பது கிடையாது.) உடன் பிறப்புகளிருவரும் குடைவுக் கருவிகளின் துணைகொண்டு அச்சிடல் முறைகளுக்கு உருவம் கொடுத்தனர். உருவாக்கப்பட்ட அச்சுக் கருவி, வருமானத்தைத் தந்தாலும், வானூர்திக்கனவே அவர்களிடம் விஞ்சி ததும்பி நின்றது.
நாட்கள் செல்லச் செல்ல, எண்ணற்ற எந்திரங்கள் குறித்தும் அவை செயல்படும் விதம் குறித்தும் ரைட் உடன்பிறப்புகள் அறிந்து கொண்டனர். குடைவுக் கருவிகளை வைத்துக் கொண்டு பல்வேறு பணிகளைச் செய்வது எப்படி? எனவும் தெரிந்து தெளிந்து கொண்டனர். கிளைடர் தயாரிப்பாளர்கள் மற்றும் வேறு பல கண்டுபிடிப்பாளர்களின் பணி, செயல்பாடுகள் குறித்து பலப்பல ஆய்வுகளையும் மேற் கொண்டனர்.
மிதிவண்டி தயாரிப்பு-பழுது நீக்கம் குறித்து அனைத்துச் செய்திகளையும் அறிந்து கொண்டதோடு, உலோகம் - மர வேலைப் பாடுகளிலும் ரைட் உடன் பிறப்புகள் கற்றுத் துறைபோகினர். பணிகளுக்கிடையே கற்றும், கற்பித்துக் கொண்டும், வழிகாட்டியும் முன் னேறிய தம் மக்களை, தந்தை நெடுகிலும் ஊன்றிக் கவனித்து வந்தார்.
பறவையைக் கண்டு விமானம் படைக்கும் முறைமையில் வில்பர்-ஆர்வில் இரு வரும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். முதன்முதலாக கிளைடர் ஒன்றை உருவாக்கி, வானூர்தித் தொழில்நுட்பத்துக்கு ஒரு துவக் கத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஜெர்மானியர் ஓட்டொ விலியென்தால் பற்றிய புத்தகங்களை யும் ஊன்றிப் படித்தனர். தமிழ்நாடு முதல மைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பண்டித நேருவின் பெயரன் ராஜிவ் காந்தி எனும் வலவனின் அரசியல் துவக்கம் (Take-off) வியக்கத்தக்க வகையிலும், தரையிறங்கல் (முடிவு) (Landing) மோதிச் சிதறியதுமாக முடிந்து போனதை முன்னரே சுட்டிக் காட்டியது போல, ஜெர்மானியர் ஒட்டொலின் தரையிறங் கலும் மோதிச் சிதறினார் என்பதும் ரைட் உடன் பிறப்புகளின் காதுக்குச் சேதியாக வந்தது.
எனினும், இந்த அதிர்ச்சிச் செய்தியால், அவர்களிருவரும் தம் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. மாறாக, மனிதனை, மிக வும் பாதுகாப்பாக, வானூர்தியில் விண்ணில் பறக்க விட வேண்டும் என்கிற உறுதிப் பாடு மேன்மேலும் வலுப்பெற்றது. இதே கனவுகளோடு, இரவு-பகல் பாராமல் உழைத்துழைத்து உயர்ந்தனர் புகழ் வானிலே...
மெய் வருத்தம் பாரார்;
பசி நோக்கார்;
கண் துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்
கருமமே கண்ணாயினர் ரைட் உடன் பிறப்புகள்.
உச்சகட்டமாக, ரைட் உடன் பிறப்புகளின் சொந்தக் கிளைடர் இறுதி வடிவம் பெற்றது; இடையறாத ஆய்வுகளும் கடும் உழைப்பும் வானூர்தித் தயாரிப்புக்கு முன்னோடி ஆயின. மண்மேடாக பரவிக் கிடந்த கிட்டி ஹாக் என்ற இடம் சோதனைக் களமாகத் தெரிவாயிற்று.
வில்பர், முதன் முதல் மனிதப் பறவையானார், மிகவும் வடிவாக அந்த விண்ணேற்றம் அமைந்தது. கிளைடர், ஒரு குறுகிய தொலைவுக்கு விண்ணில் பாய்ந்து சென்றாலும், நிலை தடுமாறி, மண்மேட்டின் மீது மோதியது, வில்பர் விழுப்புண் பெறாமல் தப்பினார்.
இருந்த போதிலும், உடன் பிறப்புகள் தமது விடாமுயற்சியைக் கைவிடுவதாக இல்லை (இந்தியாவில் மட்டும் தான் வேதாளம்-முருங்கை மரம்-விக்கிரமாதித்தர்களின் அம்புலி மாமா பிள்ளை விளையாட்டுகள்). தந்தையார், பொறுமைக்கும்-உறுதிக்கும் சிறந்த எடுத்துக் காட்டாக, அவர்களுக்குக் காட்சி தந்தார். தந்தை யின் இரண்டு நற்குணங்களுமே ரைட் உடன் பிறப்புகளைத் தோல்விகளைக் கண்டு துவளாத இயல்பினராக்கியது.
அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகள், வெற் றிப் படிக்கட்டுகளாயின; இருவரும் விடாக்கண் டர் கொடாக் கண்டராயினர். வெவ்வேறு பொருட்கள் கொண்டு பல்வேறு வடி வமைப்புகள் அணியப்படுத்தப்பட்டன. தவறுகளே இங்கு படிப்பினைகளாயின. தங்களது உழைப் பு(க்கு) இன்றில்லா விட்டாலும், நாளைக்கு மெய்வருந்தக் கூலி தரும் என்பதில் ரைட் உடன்பிறப்பு கள் உறுதிமிகக் கொண்டிருந்தனர். ஒன்றன் பின் ஒன் றாக, தொடர்ந்து வானூர்திகள் வடிவமைக்கப் பட்டு, மிகவும் இலேசான எஞ்சினுடன் கூடிய வானூர்தி இறுதிக்கட்டமாக அணியமானது. வானூர்தியின் நெடுங்கிடை உடலும், இலகுரகப் பொருளி லிருந்து உருவாக்கப்பட்டது. எண் ணற்ற களச் சோதனைகளுக்கு அப்பால், எஞ்சின் முழுமையாக அணியப்படுத்தப்பட்டு, வானூர்தி விண்ணில் சீறிப் பயணித்தது, கூடி நின்ற கூட் டத்தினர், உற்சாகத்தில் ஆர்ப்பரித்து-மகிழ்ச்சி வெள்ளத்தில், தாங்கா மகிழ்ச்சியில் திளைத் தனர். ஆண்டுக் கணக்கில் காத்திட்ட பொறுமையும், தன்னம்பிக்கையும், சலிப்பறியா கடும் உழைப்பும் ரைட் உடன்பிறப்புகளுக்கு இறுதி வெற்றியை வரலாற்றுப் புகழைத் தேடித்தந்தன.
உழைப்பின் வாரா
உறுதிகள் உளவோ?
-கோரா |