மனித இன வரலாறு-36

மங்கோலியர் ஒரு நாடோடிக் கூட்டத்தார். அவர்கள் மத்திய ஆசியாவில் யூரல் மலைத் தொடருக்கும், கோடா பாலைவனத்திற்கும் இடையே உள்ள, மரங்கள் அற்ற பரந்த புல்வெளியில் வாழ்ந்தனர். அவர்கள் மிகச் சிறந்த குதிரை வீரர்கள். அவர்கள் தங்களுடைய ஆடு, மாடு மந்தைகளுடன் இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் கூடாரங்களில் வசித்தனர். அந்த கூடாரங்களின் துணி பருத்தி, கம்பளி மற்றும் மயிர் கற்றைகளை வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் பதனிடப்பட்ட தோல் போன்றது. பாதுகாப்பானது. மங்கோலியர் இடம் விட்டு இடம் பெயர்ந்தபோது அவ்வகைக் கூடாரங்கள் எளிதில் கொண்டு செல்லப்பட்டன.
மங்கோலியர் மூர்க்கத்தனம் மிக்க போர் வீரர்கள். செல்வத்தையும் செல்வாக்கையும் பெற அவர்களின் பல்வேறு குழுக்கள் தங்களுக்குள்

தாக்குதல் நடத்துவர். எனினும் கி.பி. 1200ஆம் ஆண்டு வாக்கில் தெமுஜின் (Temujin) என்றும் பின்னர் செங்கிஸ்கான் என்றும் அழைக்கப்பட்ட மங்கோலியப் பெருவீரன் மங்கோலியக் குழுக்கள் அத்தனையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். இவன் தன் பதின்மூன்றாம் வயதிலேயே ஆட்சிக்கு வந்தான் என்பது வியப்பான செய்தி. இவனும் இவன் படைத் தலைவர்களும் ஓயாது புதுப்புது நாடுகளை வென்றனர்.
வடக்கே சைபீரிய வெளிகளிலிருந்து தெற்கே அரேபியா, பாரசீகம், சிந்து நதிக்கரை வரையுள்ள நாடுகள் யாவும் சேர்ந்த மிகப் பெரிய பேரரசாக இவன் அரசு திகழ்ந்தது.
இவனுக்குப் பின் கி.பி. 1264இல் பட்டத்திற்கு வந்த குப்ளைகான் (Kublai Khan) இவனின் பேரனாவர். இவன் கி.பி. 1279இல் சைனா முழுவதையும் வென்று தன் கனவை நினைவாக்கினான்.
வரைபடம்

கி.பி. 1279இல் மங்கோலியப் பேரரசு புள்ளியிட்ட கோடுகளால் எல்லையிடப் பட்டுள்ளது. உலக வரலாற்றில் சீனா முதல் போலந்து வரை பரந்து விரிந்த மிகப் பெரிய பேரரசு இதுவேயாகும்.
முன்பக்கப் படம் : மங்கோலியக் குதிரை வீரன் தன் கூடாரத்தை விட்டு வெளியே வந்து ஆசியப் புல்வெளியில் பயணம் செய்தல்
படம் செங்கிஸ்கான் (1162-1227)
இவர் இளமையில் ஏழ்மையில் வாடினார். கி.பி. 1240இல் எழுதப்பட்ட மங்கோலியர்களின் இரகசிய வரலாறு என்னும் நூலிலிருந்து இவரைப் பற்றி அறியலாம்.