பிரதி எடுக்க

உலக நடப்பு உங்களுக்குத் தெரியுமா?

1. அண்மையில் செர்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு விடுதலையான நாடு எது?
(அ) கானா (ஆ) கொசாவா (இ) உகாண்டா
2. அண்மையில் அமெரிக்காவால் ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்ட உளவு செயற்கைக் கோளில் இருந்த மனிதர்களை அழிக்கும் விஷவாயுவின் பெயர் என்ன?
(அ) ஹைட்ரசீன், (ஆ) ஹெட்ரோகேஸ் (இ) ஹைட்ரஜன்
3. சென்னை வியாசர்பாடியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கேரம் விளையாட்டில் உலகச் சாம்பியம் பட்டம் வென்ற வீராங்கணையின் பெயர் என்ன?
(அ) ஜெனிலிசா (ஆ) பாத்திமா (இ) இளவழகி
4. கியூபா நாட்டின் அதிபராக 49 ஆண்டுகளாகப் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்த மாதம் ஓய்வு பெற்றயடுத்து அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
(அ) ரவூல் காஸ்ட்ரோ (ஆ) ரிக்சி மார்ட்டின் (இ) ஜழன் குவேரா
5. சென்ற மாதம் முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டிய குடிநீர்த் திட்டம் எது?
(அ) இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டம்
(ஆ) ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்
(இ) பாலாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம்

விடைகள்
1) ஆ 2) அ 3) இ 4) அ 5) ஆ