பிரதி எடுக்க

உலக அதிசயம்

சுதந்திர தேவி சிலை

- சமா.இளவரசன்

அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 120 வருடங் களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்தி ருப்பீர்களே? ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி, இன் னொரு கையில் புத்தகம் ஏந்திய படி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா? உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும், சுதந் திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புற வின் அடையாளம் என்பது தெரியுமா உங்களுக்கு? ஆம் பிரான்சு, அமெரிக்காவுக்கு வழங்கிய பரிசு தான் சுதந்திர தேவி சிலை.
1776, ஜூலை 4ஆம் நாள் சுதந்திரப் பிரகடனம் செய்து குடியரசானது அமெரிக்கா அதன் நூற்றாண்டு விழாவான 1876ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு பரிசு தர எண்ணியது மற்றொரு குடியரசான பிரான்சு.
அதற்கான வடிவமைப்பை மேற்கொள்ள பிரடெரிக் அகஸ்டே பார்த்தோல்டியை நியமித்தது. மேலும் சிலையின் உட்புறத்தில் மேற்கொள்ளவேண்டிய கட்டுமானப் பணிக்காக அய்பெல் கோபு ரத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் கஸ்டவ் அய்பெல்-லை நியமித்தது. 1876ஆம் ஆண்டு நிறைவு செய்து பரிசளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் முன்கூட்டியே தொடங்கப் பட்டன. பண்டைய உலக அதிசயங்களுள் ஒன்றான ரோட்சில் இருந்த பெரிய சிலையை மனதில் கொண்டு அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1870இல் முதல் மாதிரி சிலை உருவாக்கப் பட்டது.
பண்டைய ரோமின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் லிபர்டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத்துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும் 7 நீட்சிகள் - 7 கடல்களை யும், 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம் அறிவையும், அதிலிருக்கும் தேதி ஜூலை 4, 1887 என்று அமெரிக்கா உருவான நாளையும் குறிக்கும்.
1876ஆம் ஆண்டே பரிசளித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் தொடங்கப்பட்டாலும், அதற்கான நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கு கடுமையாகப் போராட வேண்டியிருந் தது. பிரெஞ்சு மக்கள் கற்பில் சிலையை வழங்கவும். அமெரிக்க மக்கள் சார்பில் பீடம் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது. பிரான்சில் இதற்காக பல வகையிலும் நிதி திரட்டப்பட்டது. புகழ்பெற்ற சார்லஸ் கவ்நாட் என்ற இசையமைப்பாளரைக் கொண்டு பாரீஸ் ஓபேராவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி, நன்கொடைச் சீட்டுகள் ஆகியவற்றின் மூலம் சுமார் 2,250,00 பிரான்குகள் (2,50,000 டாலர்கள்) திரட்டப்பட்டன. அமெரிக்காவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கண்காட்சிகள், போட்டிகள் மூலம் நிதி திரட்டப்பட்டது.
பாள்த்தோல்டிக்கு உட்புற உருவாக்கத்தில் உதவிபுரிய நியமிக்கப்பட்ட அய்பெல், மிகச் சரியான வடிவமைப்பையும் உட்புற கட்டு மானத்தையும் திடமான இரும்புகளைக் கொண்டு உருவாக்கினார். இப்பணியில் அவருக்கு மாரீஸ் கோச்லின் என்ற பொறியியலாளர் உதவினார். 1876 ஜூலை 4இல் முழுச் சிலையை முடிக்க முடியாவிட்டாலும் விளக்கை ஏந்தியிருக்கும் வலுது கை உருவாக்கும் பணி முடிக்கப்பட்டிருந் தது. அதனைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டது. பிலடெல்பியா வில் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் இது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, தலா 50 சென்ட்கள் வசூல் செய்யப்பட்டு அது வீதம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டது.
இச்சிலையை அமைப்பதற்காக இடமாக 1877-ஆம் ஆண்டு நியூயார்க் அருகிலுள்ள அய்சக் பெட்ரோல் தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ் விடம் நியூயார்க் துறைமுகத்தின் முகத்துவாரம் போன்ற பகுதியாகும். (இப்போது இது சுதந்திரத் தீவு என்றே அழைக்கப்படுகிறது) சுதந்திர தேவி சிலையின் வடிவமைப்புக்கு அமெரிக்கக் காப்பு ரிமைச் சட்டப்படி 1877இல் பார்தோல்டி காப்பு ரிமை பெற்றார். பிரான்சில் சிலை உருவாகும் பணி வெகு வேகமாக நடைபெற்று வந்தது. சிலைக்கான நிதி திரட்டல் 1882 ஜூலையில் முடிந்து சிலை 1884 ஜூலையில் பிரான்சில் முழுமையாக தயாராகி விட்டது. பீடத்திற்கான நிதி திட்டலில் புலிட்சர் பரிசை நிறுவிய ஜோசப் புலிட்சர் தனது பத்திரிகை மூலம் கரும் பிரச்சாரம் செய்து திரட்ட முயன்றார். வில்லி யம் எவார்டஸ் தலைமையிலான நிதி திரட்டும் குழு பெரும்பாலான நிதியைத் திரட்டியது. முழு சிலையும் பிரான்சிலிருந்து 350 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கப்பல்களில் அனுப்பி வைக்கப் பட்டது. ஜூன் 17, 1885இல் சிலை நியூயார்க் வந்து சேர்ந்தது. ஏற்கனவே 1876இல் கொண்டு வரப்பட்டிருந்து விளக்கு ஏந்திய வலது கை நியூ யார்க் நகரிலேயே வைக்கப்பட்டிருந்தது. பீடத் தின் கட்டுமானப் பணிகள் 1886 ஏப்ரல் 22 அன்று நிறைவுற்றது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு வெள்ளிக் காசுகள் வாரி இறைக்கப்பட்டன. 151 அடி உயரமுடைய இச்சிலை 65 அடி உயரமுடைய அடித்தளம் மற்றும் 89 அடி உயரமுடைய பீடத்தின் மேல் பிரம்மாண்டமாக நிறுத்தப்பட்டது. இச்சிலையை 90.7 டன் செம்பும், 113.4 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 4 மாதங்களில் அடுக்கடுக்காக மீண் டும் சிலை கோர்க்கப்பட்டது.
ஆரம்ப கட்டத்தில் பீடத்தின் கட்டுமானப் பணிக்காக 50000 டாலர்கள் தொகையை நியூயார்க் அரசு சார்பாக ஒதுக்கியவர் க்ரோவர் க்ளீவ்லாண்ட் என்ற நியூயார்க் கவர்னர். சிலை நிறைவுற்று திறப்பு விழாக் கட்டத்தில் க்ரோவர் க்ளீவ்லாண்ட் அமெரிக்க குடியரசுத் தலைவராக ஆகியிருந்தார். ஆயிரக்கணக்கான பார்வையாளர் கள் முன்னிலையில் 1886 அக்டோபர் 28 அன்று சிலையை க்ரோவர் திறந்து வைத்தார்.
1902ஆம் ஆண்டு வரை இச்சிலை கலங்கரை விளக்காகவும் பயன்பட்டது.
இச்சிலையின் உட்புறத்தில் அமைக்கப்பட் டுள்ள ஒற்றை வளைவு படிக்கட்டுகள் மூலம் (354 படிக்கட்டுகள்) சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தை அடைய முடியும்.
ஒரே நேரத்தில் அங்கிருக்கும் 25 ஜன்னல்கள் வழியாக 30 பேர் நியூயார்க் நகரைப் பார்வையிட லாம். பிரம்மாண்டமான இச்சிலையை அருகிலி ருந்து பார்ப்பதே அலாதி சுகம் என்றால், அதன் உச்சியில் ஏறி நின்று ரசிப்பது எத்தனை அற்புதமான விசயம்.
இதன் நூற்றாண்டு விழா 1986இல் கொண் டாடப்பட்டது. அவ்வப்போது ஏற்படும் சூழல் களால் சில காலம் சிலையின் உள் நுழைவது நிறுத்தப்பட்டாலும், மீண்டும் அது பார்வைக்கு திறக்கப்படுகிறது. இந்த அதிசயத்தில் மேலிருந்து பாராசூட்டில் குதித்த சாதனை 1912 பிப்ரவரி 2இல் நடந்தது. பிரபெரிக்லா என்பவர் இச்சாதனையை மேற்கொண்டு வென்றார். இதிலிருந்து குதித்து முதல் தற்கொலை செய்து கொண்ட சோதனை 1929இல் நடந்தது.
சிலையின் பீடத்தில் புதிய கொலாசஸ் என்ற எம்மா லாஸரஸின் கவிதை செதுக்கி வைக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் அடையாளங் களுள் ஒன்றாக இச்சிலையை வழங்கிய பிரான்சில் இதன் மாதிரி உருவம் வைக்கப் பட்டுள்ளது.