அறிவியல் ஆய்வு

தேவையான பொருட்கள்
புனல், ப்ளாஸ்டிக் பந்து.
செய்முறை :
புனலின் உள்ளே பந்தை வைத்து புனலின் நீண்ட சிறிய துளை உள்ள பகுதியை வாயில் வைத்துக் கொள்ளவும். இடது கையால் புனலையும், வலது கையின் ஆள்காட்டி விரலால் பந்தையும் அழுத்தி கீழே விழாமல் பிடிக்கவும். பிறகு தலையை கீழே சாய்த்து வாயால் வேகமாக ஊதிக்கொண்டே பந்தை பிடித்துக் கொண்டிருக்கும் வலது கையின் ஆள்காட்டி விரலை படத்தில் உள்ளதுபோல் எடுத்துவிடவும்.
காண்பன :
பந்து கீழே விழாமல் ஒரு சில வினாடிகள் சுழன்றுகொண்டே இருக்கும்.
காரணம் :
வாயால் வேகமாக ஊதும் போது புனலின் அகலமான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள காற்று வேகமாக சென்றுவிடும். இதனால் அந்த பகுதியில் குறைந்தக் காற்றழுத்தம் ஏற்படும். இதை நிரப்ப வளிமண்டலக் காற்று வந்து புனலின் எல்லாப் பகுதியிலும் இடிக்கும். புனலின் அகலமான பகுதியில் பந்து இருப்பதால் காற்று அணுக்கள் கீழிருந்து பந்தை இடிக்கின்றன. அதனால் பந்து கீழே விழாமல் இருக்கிறது. |