திருக்குறள் மார்கழி விழா ஊர்வ லத்தை கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார் திருக் குறள் தூதர் இரா. வரலட்சுமி. உலகத் திருக்குறள் மைய விருகம்பாக்கம் (சென்னை) வட்டக் கிளையின் சார்பில், ஸ்ரீவெங்கடேஷ் நகர், கம்பர் தெருவிலுள்ள 6/8 எண்ணுள்ள இல்லத்திலிருந்து காலையில் 6.00 மணி அளவில் பல பள்ளிகளில் படிக் கும் மாணவர்கள் மேற்கண்ட இல்லத் தில் ஒன்று கூடுகிறார்கள். குறிப்பாக காவேரி உயர்நிலைப் பள்ளி, கரியப்பா உயர்நிலைப் பள்ளி, அரசினர் பெண் கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி யைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் இதில் பங்கேற்கின்றனர். தினமும் மாலை அணிவித்த திருவள்ளுவர் படத்தை கையில் ஏந்தி, திருக்குறள் அட்டைகளைக் கையில் பிடித்துக் கொண்டு, காலை 6 மணி அளவில் ஊர்வலம் புறப்பட்டு பல தெருக்கள் வழியாக, திருக்குறளைப் படித்துக் கொண்டு வருகிறார்கள். இடையி டையே படிப்போம், படிப்போம் திருக் குறளைப் படிப்போம் நடப்போம், நடப்போம் குறள் வழி நடப்போம், திருக்குறள் நெஞ்சம் தீமைக்கு அஞ் சும், உலகத் திருக்குறள் மையம் வாழ்க என்று முழக்கமிடுகிறார்கள். ஊர்வலம் 7 மணியளவில் முடிவ டைந்து உணவு வழங்கப்படுகிறது. உணவு உண்ணும் முன்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
என்ற குறளை கூறுகிறார்கள். ஜனவரித் திங்களில் பல பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து பலவிதமான திருக்குறள் போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கும், மார்கழி விழா ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பொங்கல் விழா எடுத்து பரிசுகளும் சான்றிதழும் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்வு தொடர்ந்து கடந்த பதினான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பயனுள்ள மார்கழியாக பள்ளி மாணாக்களுக்குப் பயிற்றுவிக்கும் இரா.வரலட்சுமி பாராட்டுக்குரியவர்.

- புலவர் சி. சங்கரலிங்கம்