உலக நாடுகள்

இரான் (Iran) குடியரசு

- வை. கலையரசன்

புவியியல்:

- ஆசியாக் கண்டத்தின் மத்திய கிழக்கு நாடாகும்.
- பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் காஸ்பியன் ஆகியவற்றை எல்லைகளாக ஈராக் - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமைந்துள்ளது.
- நாட்டின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேலான பகுதிகள் உப்பு பாலை வனங்களாகவும், உவர் நிலங்களாகவும் அமைந்துள்ளன.
- இந்நாட்டின் இயற்கை வளங்கள் பெட்ரோல், இயற்கை எரிவாயு, தங்கம், கந்தகம், குரேமியம், தாமிரம், இரும்பு, காரீயம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம்.
- பரப்பளவு 1.648 மில்லியன் சதுர கிலோ மீட்டர்.

மக்கள் தொகை:
- 2006 ஜூலை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,86,88,433 பேர்.
- மக்கள் தொகையில் பாதியளவு பாரசீகர்கள், மீதி, குர்துக்கள், லூர்கள் பக்தியாரிகள் மற்றும் பலோச்சிகள் ஆகியோர் அடங்குவர்.
- 2006 கணக்கெடுப்பு படி மக்கள் தொகை வளர்ச்சி 1.1 சதவிகிதம்; பாலியல் விகிதம் 1000 பெண்களுக்கு 1040 ஆண்கள்.
- நாட்டின் மொத்த கல்வியறிவு 79.4 சதவிகிதம். ஆண்கள் 85.6 சதவிகிதம்; பெண்கள் 73 சதவிகிதம்.
- சராசரி வாழ்நாள் 70.26 ஆண்டுகள், ஆண்கள் 68.86 ஆண்டு பெண்கள் 71.74 ஆண்டுகள்
- மொத்த மக்கள் தொகையில் 89 சதவீதம் பேர் சியா முஸ்லிகளாக உள்ளனர். சன்னி முஸ்லிம்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர்.
- மொழி பாரசீகம் அதிகாரபூர்வ மொழியாகும். துருக்கி, குர்திஷ், லூரி, பலோச்சி அராபிக் போன்றவை பேசப் படுகின்றன.
அரசு முறை:
- இதன் தலைநகர் டெக்ரான்
- இது ஒரு இஸ்லாமிய ஒற்றை ஆட்சி குடியரசு நாடு
- நாட்டின் தலைவரே அரசாங்கத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். ஆனாலும் மதகுருமார்களின் அதிகாரம் செலுத்தும் பல அமைப்புகள் உள்ளன.
- மத குருமார்களின் தலைவரான ரஹ்பார் உயர் அதிகாரத்தை செலுத்துகிறார்.
- தற்போதைய குடியரசுத் தலைவர் முகமது அக்மாதி நஜீத், 3.8.2005 முதல் பதவியில் இருக்கிறார். துணைக் குடியரசுத் தலைவரான பர்வீஸ் தவுதி 11.9.2005 முதல் பதவியில் இருக்கிறார்.
- மதக்குருக்களின் தலைவராக அயத்துல்லா அலி ஹூசைன் 4.6.1989 முதல் இருந்து வருகிறார்.
- இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கொண்ட அரசமைப்புச் சட்டம் அமுலில் இருக்கிறது.
பொருளாதாரமும் - தகவல் தொடர்புகளும்
- ரியால் என்பது இந்நாட்டின் நாணயமாகும்
- 2006ன் கணக்கின்படி மொத்த வளர்ச்சி விகிதம் 6.1 சதவிகிதம் ஆகும்.
- 40 சதவிகிதம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கின்றனர்.
- 11.2 சதவிகிதம் பேர் வேலை வாய்ப்பின்றி வாழ்கின்றனர்.
- 1,78,152 கிலோ மீட்டர் இரயில் பாதைகளும் 1,67,157 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
- 1,45,71,100 தொலைபேசிகளும், 4.3 மில்லியன் செல்பேசிகளும் பயன்படுத்தப்படுகின்றன (2004 கணக்கெடுப்பு)
வரலாறும் - முக்கியப் பதிவுகளும்
- 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மனிதர்கள் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது.
- கி.மு. 3000 வாக்கில் ஈலமியர் காலத்திலிருந்துதான் பதிவு செய்யப்பட்ட வரலாறு தொடங்குகிறது.
- கி.மு. 728லிருந்து கோலோச்சிய மீட் மக்கள் கி.மு. 550இல் பாரசீகர்களால் வீழ்த்தப்பட்டனர்.
- கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மாவீரன் அலெக்ஸாண்டர் பாரசீகர்களை வீழ்த்தினான்.
- பின்னர் இஸ்லாமிய மரபுகளைச் சார்ந்த பல வம்சங்கள் ஆண்டன.
- 19ஆம் நூற்றாண்டில் இந்நாட்டின் பொருளாதாரமும் அதிகாரமும் பிரிட்டன் மற்றும் இரஷ்ய பேரரரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தன.
- 1921ஆம் ஆண்டு ரேஸா கான் ஒரு புரட்சியின் மூலம் நாட்டை கைப்பற்றினார்.
- இவரது மகன் ரேசா ஷா பஹ்லவி நவீன திட்டங்களை தீட்டியதன் மூலம் சமயத் தலைவர்களை விரோதித்துக் கொண்டதால் 1979இல் ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்டார்.
- 1979இல் ஷியா முஸ்லிம் மதக் குருக்களின் தலைவர் கோமேனி இஸ்லாமிய குடியரசை நிறுவினார்.
- இந்நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்த இரான் - ஈராக் போர் வெற்றி தோல்வியன்றி முடிந்தது.
- 1990இல் அரசு தாராள மயக்கொள்கைகளை ஏற்று செயல்படுத்தியது.