பறக்கும் தட்டு பூமிக்கு வந்ததா?

பறக்கும் தட்டு பார்த்திருக்கிறீர்களா? வீட்டில் சண்டை வந்தால் ஒருவர் மேல் ஒருவர் எறிந்து கொள்வார்களே அதுவன்று. விளையாடுவதற்காக நாம் வாங்கி பறக்க விடுவோமே வட்டு அதுவுமன்று. அப்புறம்?
பல ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்களே! பெரிய தட்டாக, மின்னும் வெள்ளி நிறத்தில் அல்லது கருப்பு வண்ணத்தில் வண்ண வண்ண விளக்குகளோடு இருட்டில், காட்டில் வந்து இறங்கி, உள்ளிருந்து வித்தியாசமான உருவம் கொண்ட உயிரினம் இறங்குமல்லவா? அதற்குத்தான் பறக்கும் தட்டு என்று பெயர். இங்கிலீஷில் Flying Saucer என்று அழைக்கிறார்கள்.

மேலும்...


தமிழறிஞர்

இயல் இசை நாடகம் எனும் மூன்றில், இயல் உரைநடையைக் குறிக்கும். உரை நடைக்கு ஈர்ப்பை - கவர்ச்சியை - அளித்தார்; எளிமையும் தெளிவும் இனிமையும் கொண்ட நடையில் பயன் நிறைந்த செய்திகளையும், கருத்து களையும் கற்கண்டாய்க் கொடுத்தார்; தம் எழுத்துகளைக் கொண்டு இளைஞர்தம் உள்ளங்களில் ஆட்சி செய்தார். அவர்தாம், டாக்டர் மு.வ. எனத் தமிழ் உலகுக்கு அறிமுகமான அறிஞர் மு.வரதராசனார் ஆவார்.
பிறப்பு - கல்வி:
திருப்பத்தூர் எனும் பெயரில் நன்கு அறியப்பட்ட இரண்டு ஊர்கள் தமிழகத்தில் உண்டு; ஒன்று தென்பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. மற்றொன்று

மேலும்...

அறிந்து கொள்ளுங்கள்

1989 நவம்பர் மாதம் குழந்தைகள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை அய்.நா. சபை அறிவித்தது.
54 சரத்துக்களை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும்.
1992 டிசம்பர் மாதம் நம் நாடும், அய்.நா. உடன்படிக்கையில் கையொப்பமிட்டு நம் குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்கப் பொறுப்பேற்றது.
குழந்தைகள் என்பவர் யார் என்பதற்கு அய்.நா. கொடுத்துள்ள விளக்கம்.
குழந்தைகள் என்பவர்கள், ஜாதி, மதம், பால், மொழி, சொத்து, நிறம், பிறப்பு, ஊனம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள்தான்.

மேலும்...


உடல் அறிவோம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்பது வள்ளுவர் வாக்கு, பகுத்துண்டு என்ற சொல்லுக்கு இரு அர்த்தம் உண்டு. பகிர்ந்து உண்ணுதல் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எது நம் உடலுக்கு ஏற்ற உணவு என்பதை அறிந்து உண்பது மற்றொன்று. உணவு சுவைமிகுந்து இருந்தால் மட்டும் போதாது. சத்தானதாக இருக்க வேண்டும். சத்தான உணவே நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.
உணவில் உள்ள சிக்கலான, கரையாத, பெரிய மூலக்கூறுகள் எளிமையான, கரையும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் செயலே செரிமானம் ஆகும்.

மேலும்...

உலக நாடுகள்

அமைவிடமும் நில அமைப்பும்:
- உகாண்டா கிழக்கு ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் கென்யாவிற்கு கிழக்கே அமைந்துள்ளது.
- இதன் மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர்.
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலத்தால் சூழப்பட்டுள்ளது.
- இதன் பெரும்பகுதி பீடபூமியில் அமைந்துள்ளது. எரிமலைத் தொடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

மேலும்...

மனித இன வரலாறு-39

கி.பி. 858இல் ஜப்பானின் ஒன்பது வயது அரசிளங்குமரன் சார்பாய் ஃப்யூஜிவாரா யோஷிஃப்யூசா (Fugiwara Yoshifusa) அந்நாட்டை ஆட்சி புரிந்தார். அரசிளங்குமரன் இளைஞனான பின்னரும் அவரே ஆட்சித் தலைவராய் நீடித்தார். பல நூற்றாண்டுகளாக வலிமை மிக்கப் படைத் தலைவர்களால் ஜப்பான் ஆட்சி புரியப்பட்டது. கி.பி. 1192இல் மினா மோடோ யோரிடோமோ (Minamoto Yritomo) ஆட்சித் தலைவரானார்.

மேலும்...


அறிவியல் ஆய்வு

தேவையான பொருள்கள்: ஒரு டம்ளர், நீர், ஒரு சிறிய நாணயம்
செய்முறை: டம்ளரை நாணயத்தின் மேல் வைக்கவும். (நாணயம் முழுவதும் அடியில் இருக்குமாறு டம்ளரை வைக்க வேண்டும். பக்க வாட்டிலிருந்து நாணயத்தை பார்க்கும்போது நாணயத்தை தெளிவாக பார்க்கலாம். இப்போது டம்ளரில் நீர் நிரப்பவும். பிறகு பக்கவாட்டிலிருந்து நாணயத்தை பார்க்கவும்.
காண்பன: நீர் நிரப்பிய டம்ளரின் பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது நாணயம் தெரிவதில்லை.

மேலும்...

சின்னக்கதை

அயல் நாடுகளுடன் நட்பு பாராட்டுவதில் அக்பருக்கு ஈடு இணை கிடையாது. பீர்பாலைப் போன்ற மதியூக மந்திரிகள் இருப்பதால் அக்பரின் புகழ் மேலும் ஓங்கி வளர்ந்தது. அதிலும் பாரசீக சக்ரவர்த்தியுடன் நல்ல வண்ணம் நட்பு கொண்டிருந்தார். இரண்டு சக்கரவர்த்திகளும் அவ்வப்போது ஏதாவது புதிர்களை தொடுத்து அதை விடுவித்து மகிழுவர்.

மேலும்...