நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



அறிவியல் ஆய்வு

காணாமல் போன நாணயம்

தேவையான பொருள்கள்: ஒரு டம்ளர், நீர், ஒரு சிறிய நாணயம்
செய்முறை: டம்ளரை நாணயத்தின் மேல் வைக்கவும். (நாணயம் முழுவதும் அடியில் இருக்குமாறு டம்ளரை வைக்க வேண்டும். பக்க வாட்டிலிருந்து நாணயத்தை பார்க்கும்போது நாணயத்தை தெளிவாக பார்க்கலாம். இப்போது டம்ளரில் நீர் நிரப்பவும். பிறகு பக்கவாட்டிலிருந்து நாணயத்தை பார்க்கவும்.
காண்பன: நீர் நிரப்பிய டம்ளரின் பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது நாணயம் தெரிவதில்லை.
காரணம்: சாதாரணமாக, நாணயத்திலிருந்து ஒளி நம் கண்ணுக்கு வருவதால் நாம் நாணயத்தை பார்க்கிறோம். ஒளி விலகலின் தத்துவத்தால் நீர் நிரப்பிய டம்ளரின் வழியாக நாணயத்தை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஒளி விலகல் அடைந்து அதன் பாதை மாறி விடுகிறது. அதனால் ஒளி நம் கண்ணுக்கு வருவதில்லை.