நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



விலங்கு இனங்கள்

உடலமைப்பு, உருவம், குணம் மற்றும் உணவுப் பழக்கத்தைப் பொறுத்து விலங்குகளைக் கீழ்க்கண்ட இனங்களாகப் பிரிக்கலாம்.
1. பூனை இனம்: பூனை, புலி, சிறுத்தை ஆகியவை. இவற்றிற்கு கூர்மையான பற்கள், வலிமையான நகரங்கள். இரவில் வழிகாட்ட உதவும் மீசை ரோமங்கள் ஆகியவை உண்டு.
2. மாட்டு இனம்: ஆடு, மாடு, மான், ஒட்டகம் ஆகியவை. இவை அனைத்திற்கும் பிளவுபட்ட பாதங்கள் அல்லது குளம்புகள் உண்டு. ஒட்டகம் தவிர மற்றவற்றிற்கு கொம்புகள் உண்டு. அசைபோடுதல் இவற்றின் முக்கிய பண்பாகும்.
3. யானை இனம்: யானை, காண்டாமிருகம், கரடி, பன்றி ஆகியவை. இவைகளுக்கு தோல் தடித்திருக்கும். முகம் நீளமாயிருக்கும். கரடி தவிர மற்றவை மாமிசம் தின்பதில்லை.
4. குதிரை இனம்: குதிரை, கழுதை, கோவேறு கழுதை ஆகியவை. இவைகளின் பாதம் பிளவுபட்டிருக்காது.
5. கீரி இனம்: கீரி, மரநாய், புணுகுப் பூனை முதலியவை. இவற்றின் உடல் சிறுத்து நீளமாயிருக்கும்.
6. முயல் இனம்: முயல், அணில், எலி ஆகியவை. இவை உணவைச் கொரித்து திண்பவை.
7. நாய் இனம்: நாய், ஓநாய், நரி ஆகியவை

- கே.மலையரசன்