எண்ணங்கள்
மழை என்னும் துளியால் இலைகளின் நிறம் மாறிவிடும்.
அன்பு என்னும் துளியால் மனிதனின் குணம் மாறிவிடும்.
பணம் என்னும் துளியால் வறுமையின் நிலை மாறிவிடும்
மகிழ்ச்சி என்னும் துளியால் துயரம் மாறிவிடும்.
உறவு என்னும் துளியால் தனிமையின் நிலை மாறிவிடும்.
வெளிச்சம் என்னும் துளியால் இருள் அகன்று விடும்.
கனவு என்னும் துளியால் லட்சியத்தை நிறைவேற்ற முடியும்.
மொழி என்னும் துளியால் வார்த்தை வெளிப்படுத்த முடியும்.
நட்பு எனும் துளி நம்மை சாதிக்க வைக்கும் நம்பிக்கை ஒளி
நம் மேல் நட்பு கொண்டு வடியும் கண்ணீர் துளி உயிர்துடிப்பை விட மேலானது.
- எம். சந்தியா, சென்னை
விடுகதை
வெள்ளிப்பிசிறு வாயை மூடும், வெயில் வந்தால் கரைந்து மறையும் அது என்ன?
எண்ணெய்யில் கோலம் போட்டு எடுத்த ஒரு பின்னல் தட்டு அது என்ன?
சின்ன மீசைக்காரன், மியாவ் ஓசைக்காரன், அவன் யார்?
நேற்று பிறந்தவன் இன்று கட்டுகிறான். அது என்ன?
பச்சை செடியில் தயிர் வாசம் அது என்ன?
பகலில் இருபுறமும், இரவில் நடுவிலும் இருக்கும் அது என்ன?
பல்லைப் பிடித்து அழுத்தினால் பதறிப்பதறி அழுவாள். அது என்ன?
பரணில் காய்த்தும் பழுக்காத மரம் அது என்ன?
வீரனுக்கு சோறு போட்டு வீதியில் கிடப்பான் அது என்ன?
ஊருக்கு உழைக்கும் உத்தமன், உரக்க ஊதி குரல் எழுப்புவான் அவன் யார்?
1. பனி, 2. முறுக்கு,
3. பூனை, 4. ஊசி,
5. மல்லிகைப்பூ - செடி,
6. கதவு, 7. ஆர்மோனியப்பெட்டி, 8. இலவமரம், 9. இலை, 10. சங்கு