செவ்வாயில் இறங்கிய பீனிக்ஸ்

சூரியக் குடும்பத்தின் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்குமா? மற்ற கோள்களில் இருக்காதா? இருக்க வாய்ப்பில்லையா? இந்தக் கேள்விக்கு ஊகங்களின் அடிப்படையில் எப்படியும் பதில் சொல்லிவிடலாம். அது மிக எளிது. ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும் அல்லவா?
முதலில் கவனிக்க வேண்டிய செய்தி - உயிர் வாழ்வதற்கான சீரான வெப்ப நிலையும் அடிப்படைத் தேவைகளும் கோளில் இருந்தால்தான் உயிரினங்கள்

மேலும்...


கலைஞர் பிறந்தநாள் ஜூன் - 3

90 வயது கிழவன் ஒருவன் தோட்டத்திற்குள்ளே குழிதோண்டி ஒரு மாங்கொட்டையைப் புதைக்கும் போது, என்ன கிழவா? உனக்கு வயதென்ன? இன்னும் இரண் டாண்டோ, அய்ந்தாண்டோ? இருக்கப் போகிறாய், இந்த மாங்கொட்டையைப் புதைக்கிறாயே, என்றைக்கு இது செடியாகி, மரமாகி, கிளை விடுத்து, இலை தழைத்து, பூவாகி, காயாகி, கனியாகி, அந்தப் பழத்தை நீ சாப்பிடப் போகிறாய்? என்று சிலர் கேட்டனராம். அப்போது அந்தக் கிழவன், இப்படி என் தாத்தா எண்ணியிருந்தால் நான் அந்த மாமரத்தின் பழத்தினை சாப் பிட்டிருக்க முடியாது. எனவே, எதிர்காலத்திலே என்னுடைய பேரன் பேத்திக்காக, என்னுடைய சந்ததிக்காக இதைச் செய்கிறேன் என்று சொன் னானாம்.

மேலும்...

தமிழறிஞர்

ஆசிரியப் பணியுடன் இலட்சியப் பாதையை இணைத்து வாழ்ந்தவர், சாலினியார் என அழைக்கப்பட்ட சாலினி இளந்திரையன் அவர்கள். பார்த்தவுடன் அவருடைய எளி மையும், தூய்மையும் எவர்க்கும் தோன்றும்; அறிமுகமானவர்களுக்கு அவருடைய ஆர்வமும் அடக்கமும் வெளிப்படும். தம் வாழ்வு இணை யராகத் திகழ்ந்த தமிழ்ப் பெருந்தகை சாலையாருக்கு, அக வாழ்விலும், புறவாழ்வி லும் துணை நின்றவர்; ஏற்ற பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செய்தவர்; தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசித்து இறுதி மூச்சு நிற்கும் வரை தொண்டாற்றியவர். உற்றாருக்கும் மற்றவருக்கும் சேவையும் உதவியும் செய்து மகிழ்ந்தவர். இவர் தாம் சாலினியார்!

மேலும்...


உலக நாடுகள் - உக்ரைன்

உக்ரைன் நாடு அய்ரோப்பா கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கீவ்.
இந்நாட்டின் பரப்பளவு 6,03,100 சதுர கிலோ மீட்டர்.
போலந்து, ரோமானியா, ரஷ்யா ஆகிய நாடுகளையும், கருங்கடலையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இது சமவெளிகளையும், கார்பாத்திய மலைத் தொடர்களையும் முக்கிய இயற்கையமைப்புகளாகக் கொண்டுள்ளது.
பக், நீப்பர், டெனட்ஸ், நீஸ்ட்டர் ஆகியவை இந்நாட்டின் முக்கிய ஆறுகளாகும்.
குளிர்கால கோதுமை மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை இந்நாட்டில் அதிகம் விளையும் வேளாண் பொருள்களாகும்.

மேலும்...

மனித இன வரலாறு-40

தென் கிழக்கு ஆசியாவை சீன ஆட்சியாளர்களும், உள்ளூர்த் தலைவர்களும் ஆண்டனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவிலிருந்து சென்ற வணிகர்களும், மதப் பிரசாரகர்களும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடையே இந்து மதத்தையும், புத்த நெறியையும் பரப்பினர்.
கம்போடியாவில் 9ஆம் நூற்றாண்டில் சீன ஆட்சி அகற்றப்பட்டு கெமர் (Khmer) ஆட்சி தொடங்கப்பட்டது.
ஆங்கோர் (Anghor) கம்போடியாவின் தலைநகரம். அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன.

மேலும்...

தொழில்நுட்பம்

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்குக் கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற வியப்பு ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்தி காற்றில் பறக்கிறது... அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படை விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
ஒரு பறக்கும் பொருளில் நான்கு விதமான விசைகள் உண்டு,

மேலும்...