நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



முதுகில் ரெக்கை கட்டிப் பறந்து சாதனை

ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கு முன்னர் முதுகில் ரெக்கை கட்டிப் பறந்து பார்த்தனர். பின்னர் அதில் என்ஜினைப் பொருத்திப் பறந்தனர். தொடர்ந்து படிப்படியாக முயன்று விமானத்தை உருவாக்கினர். அண்மையில் ஒரு விமானி முதுகில் ரெக்கை கட்டி சிறிய எஞ்சின்களுடன் பறந்துள்ளார். ஸ்விட்சர்லாந்து இராணுவத்தில் விமானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான யுவெஸ்ரோஸி என்பவர்தான் இந்தச் சாதனையாளர். 5 ஆண்டுகள் இடைவிடாது ஆராய்ச்சி செய்து 4 சிறிய என்ஜின்களுடன் அதிநவீன இறக்கை களை முதலில் உருவாக்கியுள்ளார். சோதனை செய்து பார்க்க 8,200 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து தான் உருவாக்கிய சிறகுகளோடு குதித்தார். வானில் மிதந்ததும், முதுகுச் சிறகில் இருந்த என்ஜினை இயக்கி பறக்கத் தொடங்கினார். ஒரு நிமிடத் துக்கு 300 மீ. வேகம் வரை பறந்தார். இந்த முயற்சிக்காக யுவெஸ்ரோஸி செலவழித்தது ரூபாய் 1.25 கோடி!

- அன்பன்