ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

உலகின் முதல் பறவை

 

23 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் முதல் பறவை எது என்பதை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஒரு விஞ்ஞானிகள் குழு கண்டு அறிந்துள்ளது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த ஆய்வு பழங்கால மக்கள், உயிரின ஆய்வுச் சங்கத்தினால் வெளியிடப் பட்டுள்ளது. 23 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி போன்ற அமைப்பு கொண்ட பறக்கும் பாம்பு ஒன்று வாழ்ந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். பாம்பு இனங்களிலிருந்து 5 கோடி ஆண்டுகள் கழிந்த பின்பு பறவை இனங்கள் தோற்றம் பெற்றன என்றே விஞ்ஞான சமூகம் நம்பி வருகிறது. அவ்வாறு முதன் முதலாக உருவானதுதான் இந்த பறக்கும் பல்லி என்பதைப் பற்றி முதன் முதலாக இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு அடி நீளம் வரை வளரும் இந்த பல்லிகளின் உடலின் இரு பக்கங்களில் உள்ள விலா எலும்புகளைக் கொண்ட இறக்கைகள் போன்ற அமைப்பின் உதவியால் அவை வானில் தவழ்ந்து சென்றுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது போன்ற இரு வகையான பறக்கும் பல்லிகளின் மாதிரிகளை பிரிஸ்டால் பல்கலைக் கழக அறிவியலாளர்கள் உருவாக்கினர். இவை உறுதியான பறக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம் என்று ஜெர்மானிய விஞ்ஞானி கோயன் ஸ்டெயின் கூறுகிறார்.