ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

உலக நாடுகள்

உஸ்பெகிஸ்தான் - வை.கலை

 

பரப்பளவும் அமைவிடமும்

- உஸ்பெகிஸ்தான் மத்திய ஆசியாவில் அமைந் துள்ளது. ஆப்கனிஸ்தான் நாட்டிற்கு வட பகுதியில் அமைந்துள்ளது.

- தலைநகர் தாஷ்கண்ட்

- தன்னாட்சிப் பகுதியான கரகல்பாக்ஸ்தான் இந்த நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ளது.

- உஸ்பெகிஸ்தான் அமு டார்யா நதிக்கும் சிர்டார்யா நதிக்கும் நடுவில் உள்ளது.

- ஏரல் கடலின் மூன்றில் இரண்டு பங்கு இந்நாட்டில் அமைந்துள்ளது.

- நாட்டின் பரப்பளவு 4,47,400 சதுர கிலோ மீட்டர்

மக்கள் தொகை

- 2006 கணக்கெடுப்பின்படி இந்நாட்டின் மக்கள் தொகை 2,73,07,134 பேர்.

- நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர் உஸ்பெக் இனத்தவர்கள்

- தேசிய மொழியாக உஸ்பெக் மொழி உள்ளது. அதனுடன் இரஷ்யன் மற்றும் தங்ஜித் மொழிகளும் பேசப்படுகின்றன.

- இஸ்லாம், மற்றும் இரஷ்ய பழைமை வாதம் ஆகிய மதங்கள் உள்ளன.

- இந்நாட்டில் 99.3 விழுக்காடு பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

- சராசரி வாழ்நாள் 64.58 ஆண்டுகள்

பொருளாதார தகவல்கள்:

- உஸ்பெகிஸ்தான் நாட்டின் நாணயம் உஸ்பெகிஸ்தானிசம் (Uzbekistanism)

- நாட்டின் இயற்கை வளங்கள் இயற்கை எண்ணெய், பெட்ரோலியம், நிலக்கரி, தங்கம், யுரேனியம், காரீயம், துத்தகாகம், தாமிரம்.

- 2.8 விழுக்காடு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்.

- முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் பருத்தி, தங்கம், கனிம உரங்கள் (மத்திய ஆசியாவி லேயே பருத்தி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு).

- இந்நாட்டு மொத்த சாலைகளின் நீளம் 82,600 கி.மீ.

- மொத்த இருப்புப் பாதையின் நீளம் 3,950 கி.மீ.

அரசு முறை:

- இது ஒரு குடியரசு நாடு. நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவரும் அரசாங்கத்தின் தலைவராக பிரதமரும் உள்ளனர்.

- சோவியத் நாட்டின் சிவில் சட்டம் பின்பற்றப்படுகிறது.

வரலாற்றுச் சுவடுகள்:

- கி.பி. 13ஆம் நூற்றாண்டில் செங்கிஸ்தான் பேரன் ஷிபாகான் இப்பகுதியினை வாரிசு உரிமையாகப் பெற்றான்.

- மங்கோலிய மற்றும் துருக்கி இனக் கலப்பால் உஸ்பெக் என்னும் புதிய இனம் தோன்றியது.

- 19ஆம் நூற்றாண்டில் புகாரா மற்றும் கொக்கான் இனத்தவர்கள் ஆண்டனர்.

- 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யா இப்பகுதியைக் கைப்பற்றியது.

- 1924இல் உஸ்பெக் சோவியத் அய்க்கிய குடிரசு உருவானது.

1990இல் உஸ்பகிஸ்தான் தனது இறையாண்மையை பிரகடனம் செய்தது.

- 1991இல் முழுச் சுதந்திரம் பெற்றது.

- மத்திய ஆசிய நாடுகளில் இது மிகவும் பொருளாதார பலம் பெற்ற நாடாகக் கருதப் படுகிறது.

ஏரல் கடல் (Aral Sea)

கஸாகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள மிகப்பெரிய உப்பு ஏரி. ஒரு காலத்தில் 66,457 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இக்கடல் உலகிலேயே நான்காவது பெரிய உள்நாட்டு நீர்நிலையாக இருந்தது. இதில் கலக்கும் ஆறுகளான சிர் டார்யா மற்றும் அமு டார்யா ஆறுகள் பாசனத்துக்கு திருப்பி விடப்பட்டதால் இதன் உப்புத்தன்மை அதி கரித்துள்ளது.