ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9
சாதனைப் பிஞ்சு - நான்கு வயது பேச்சாளர்
பச்சைத் தமிழர் காமராசரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது. அதனையொட்டி தமிழக மெங்கும் 15.7.2008 அன்று கல்வி வள்ளல் காமராசரின் 106-ஆவது பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பழனிக்குமார் அய்.ஏ.எஸ்., அவர்கள் தலைமையில், கோவை மாநகர மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்திருந்த பள்ளி களின் தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்க கோவை மணி மேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் படிக்காத மேதை காமராசரின் பிறந்த நாள் குதூகலமாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற் புரையாற்றிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்மேகம் அவர்கள் கோவை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை காமரா சருக்கு முன், காமராசருக்குப்பின் என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார். அதன்பிறகு, குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் திராவிடர் கழக இணையர் தமிழ் முரசு, கவிதா ஆகியோரின் மகன் த.க. கவுதமன் (எட்டு வயது) சுமார் அரைமணி நேரம், பெரியார் காமராசர் பற்றி உணர்ச்சி கரமாக உரையாற்றி அனை வரையும் மெய்சிலிர்க்க வைத்தான். கவுதமனின் திறனை வியந்து போற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவனைக் கட்டி யணைத்து தனக்கு வழங்கப் பட்ட நினைவுப் பரிசை அவனுக்கு அளித்து ஆனந்தப்பட்டுக் கொண்டார்.
இணையர் தமிழ்முரசு-கவிதா ஆகியோர் மகனை மட்டுமல்ல, தனது மகள் கவிதா வையும் இவ்வண்ணமே வளர்த்து உள்ளனர். பெரியார் வகுத்துத் தந்த பாதையில் துணிச்சலோடு சென்று கொண்டிருக்கும் இந்தக் குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் போல, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் பிஞ்சு கவுதமனை பாராட்டும்போது, நான் கூட ஒன்பது வயதில் தான் மேடையில் பேசினேன். இவரோ நான்கு வயதிலேயே பேசியிருக்கிறார், கவுதமனின் பெற்றோரின் பணி மிகவும் சிறப்பானது என்று பாராட்டிஸயள்ளார்.
- ச.சிற்றரசு, கோவை