செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

கண்டுபிடிப்பு - சஹாராவில் கற்கால இடுகாடு - த.க. பாலகிருஷ்ணன்

 

சஹாரா பாலைவனப் பகுதி அதிக பசுமை அற்றது என்றே நாம் அனைவரும் கருதி வரும் நிலையில், இப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வறண்டுபோன ஏரி ஒன்றின் கரையில் உள்ள இடுகாட்டில் மனிதர்கள், மீன் மற்றும் முதலைகளின் எலும்புக் கூடுகளால் நிறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோபரோ என்று துரேக் பெயரில் அழைக்கப்பட்ட நைஜீரியால் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இடுகாடு ஒன்று 2000 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு முழு அறிக்கை அளிக்கும் அளவுக்குத் தேவையான முழு விவரங்களை இந்த ஆய்வுக் குழு இப்போதுதான் சேகரித்துள்ளது. சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செரினோ என்ற பேராசிரியர் இதனைத் தெரிவிக்கிறார்.

டினோசர் விலங்கின் படிமங்களை தேடித் திரிந்த இந்த ஆய்வுக் குழு, மனிதர்கள் மற்றும் விலங்குகளில் எலும்புகள் மற்றும் கலைப் பொருள்கள் நிறைந்த ஒரு பகுதியினைத் தற்செயலாகக் கண்டனர்.

நேஷனல் ஜியாகரஃபிகல் பத்திரிகைக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது இந்த இடத்தைக் கண்டுபிடித்த செரிநோ, நாங்கள் பசுமை நிறைந்த சஹாரா பகுதியில் இருப்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன் என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1000 ஆண்டுகள் இடைவெளியில் வாழ்ந்த இரண்டு பெரிய குடியிருப்புகளின் எச்சம் போன்று காணப்படும் இந்த இடத்தில் குறைந்தது 200 சவக்குழிகள் இருக்கின்றன.

இதில் மிகவும் வியக்கத் தகுந்த ஒன்று என்னவென்றால், 5000 ஆண்டுகளுக்கு முன் ஒரு படுக்கையின் மீது படுக்கவைக்கப் பட்டிருந்த ஒரு பெண்ணும் மற்றும் இரண்டு குழந்தைகளும், அவர்களின் கைகள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டிருக்கும் நிலையில் காணப்பட்டதுதான்.

இப் பழங்குழுவினர் உயரமாகவும், நல்ல உடல் திண்மை கொண்டவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். கிஃபியான்கள் என்று அறியப்பட்ட இம் மக்கள் 8,000 ஆண்டு களுக்கு முன்பு இந்த ஏரி வறண்டு போனபின் அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அறிவியலுக்கான பொது நூலகம் என்ற பத்திரிகையில் செரினோ குழுவினரின் அறிக்கை வெளியிடப்பட்டது.

இப் பழங்குடியினர் புலம் பெயர்ந்து சென்ற பின்னர், இரண்டாவது குழுவினர் 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4,500 ஆண்டு களுக்கு முன்புக்குள் இந்தப் பகுதியில் குடியேறி உள்ளனர். குள்ளமான, சிறிய உருவம் கொண்ட இவர்கள் டெனேரியன்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வேட்டை யாடி, கால்நடை வளர்த்து, மீன் பிடித்து வாழ்ந்துள்ளனர்.

இந்த இரு குழுவினருமே தளவாடப் பொருள்கள், மீன்தூண்டில்கள், பீங்கான் பொருள்கள், நகைகள், உள்ளிட்ட பல கலைப் பொருள்களை இந்த இரு குழுவினருமே விட்டுச் சென்றுள்ளனர் என இந்த ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரியல் ரீதியில் மாறுபட்ட இரு வேறு இனத்தைச் சேர்ந்த, இரு வேறு குழு மக்கள் ஒரே இடத்தில் தங்களின் இறந்த மக்களைப் புதைத்த இந்த மற்றொரு நிகழ்வு முதலில் கண்டபோது நம்ப இயலாததாக இருந்தது என்று இப் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அரிசோனா மாநிலப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிறிஸ் ஸ்டோஜானோவ்ஸ்கி கூறுகிறார். உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் சஹாரா பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளதாகும். ஆனால் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மாறுதலுக்கு உள்பட்ட பூமியில் சுழற்சி ஒரு சில காலத்துக்கு வடக்கு பக்கத்தினுள் பருவக் காற்று மழையை பெய்வித்து இருக்கிறது.

எலும்புக் கூடுகள், பற்களில் இருந்த எனாமல், அப்பகுதியில் இருந்த மகரந்தத் தூள்கள், அப்பகுதியின் மண் மற்றும் அங்கு கிடைத்த தளவாடங்கள் ஆகியவற்றை இக்குழுவினர் அவற்றின் காலத்தை நிர்ணயிப் பதற்காகச் சோதித்துப்பார்த்தனர்

இப்பகுதியில் கிடைத்த புள்ளி விவரங்களை தற்போதுள்ள வட ஆஃபிரிக்க பகுதிகளின் விவரங்களுடன் இணைத்துப் பார்த்தால், சஹாரா பாலைவனப் பகுதியில் நிலவி வந்த கடுமையான தட்பவெப்ப மாறுதல் களினூடே உயிரியல் மற்றும் சமூகவியல் தோற்றம் எவ்வாறு உருவானது என்ற சிக்கல் நிறைந்த வரலாற்றை நம்மால் புரிந்து கொள்ளத் தொடங்க முடிந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று இந்த ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்..