செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

உலகில் புதுசு - கண்ணாடி மட்டும் தானா?

 

ஆமாம்.. பிஞ்சுகளே...!
இந்தப் பெண் அணிந்திருப்பது சாதாரண கண்ணாடி அல்ல... திரை! ஆம். காட்சிகளைக் காண்பதற்கும், கேட்கவும், பேசவும் வாய்ப்புள்ள புதிய வகை கண்ணாடித் திரை.
பெரிய பெரிய தொலைக்காட்சிகளைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?
வடிவமைப்பு: பிரான்ஸ்டெய்னர்

முன்பொரு முறை அய்ந்து பேனாக்களின் இணைப்பில் ஒரு கணினியைக் கண்டோம். இது சற்று வித்தியாசமானது. இதில் உள்ள நேப்கின்களில் (பேப்பர் துண்டுகளில்) பேனாக்கள் ஒளியைப்பாய்ச்சும் போது, அந்தப் பேப்பர்கள் கணினித் திரை போன்று செயலாற்ற ஆரம்பித்துவிடும். எழுதுவதோ, வரைவதோ பேனாக்களின் மூலம் செய்யப்படும்போது, இந்தத் தகவல்கள் அருகிலிருக்கும் நேப்கின்கள் அடுக்கப்பட்டிருக்கும் மய்ய செயலகத்திற்கு தகவல் அனுப்பி, கணினியாகச் செயல்படும். திடீர் திடீரென்று பால் சாப்பிடும்போதெல்லாம் தோன்றும் சிந்தனைகளை இனிக் கவலையில்லாமல் கணினியில் வடிக்கலாம் இல்லையா?

அளவுகோல் மாதிரியில் அழகுற அமைக்கப்பட்டுள்ள
பண்பலை வானொலி!

தொட்டுத் தொட்டு போகும் செல்லே!

நோக்கியா ஏயான் நிறுவனம் தயாரிக்கவுள்ள முழுவதும்
தொடு உணர்வுள்ள
(Touch screen)
நவீன செல்பேசி!

கொரிய வடிவமைப்பாளர் வோன்- சோக் லீ வடிவமைத்துள்ள புதிய கணினி வடிவம். கணினித் திரைக்கு பதிலாக ஒளிவீசும் கருவி (Projector) இடம்பெற்றுள்ளது.
விசைப்பலகையும் (KeyBoard) அதே போன்று ஒளியிலேயே இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கட்டில் இணையம்
கைக்கடிகார வடிவில் இருக்கும் இந்தக் கருவி இணையத்துடன் தொடர்பு கொள்ளவும், மின்னஞ்சல், பாடல்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் போன்றவற்றை உடனுக்குடன் ஒருங்கிணைக்கவும், தகவல் பரிமாறவும் பயன்படுகிறது.

ஹேப்டிக் செல்பேசி
டாவின்சி கோட் திரைப்படத்தில் பார்த்திருப்போம் அல்லவா? அதைப்போன்ற ஹேப்டிக் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசி வந்தால் எவ்வளவு ரசனையாக இருக்கும்.
நாமும் ஏதோ ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்துவது போன்று சுவாரசியமாக இருக்கும்தானே!

மாத்திரைக் கடிகாரம்
அறிவியலின் அற்புதம் என்று இதைச் சொல்வதற்கில்லை என்றாலும், அழகுணர்ச்சியின் விளைவாக உருவான குட்டிக் கடிகாரம் இது!