உன்னையே நீ அறிவாய்...

ஹலோ... வணக்கம்! இரைப்பை பேசுகிறேன்

- கவிஞர் செவ்வியன்

என்னை நோக்கி உணவு வந்து கொண்டிருக் கிறது என்று வேகஸ் செய்தி அனுப்பியது. இன்னும் உணவு வந்த பாடில்லையே. நான் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் தயாரா கவுள்ளேன். உணவு விரைவில் வந்தடைய வில்லையெனில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் என் சுவரை அழித்துவிடும்.

என்னுள் உணவு வந்தடைந்ததும், நான், என்னுடைய மேல், கீழ்ப் பகுதியில் இருக்கும் தசைகளைச் சுருக்கிச் சுற்றத் தொடங்குவேன். என்னுள் சிக்கிக் கொண்ட உணவுப் பொருள் களை அடித்து, உடைத்து நொறுக்கி, தூள் தூளாக்கி செரிமானத்தின் அடுத்த கட்டத்துக்குத் தள்ளி விடுவேன். உணவுப் பொருள்களை நுண் துகள்களாக ஆக்குவதற்கு இரைப்பைச் சுரப்பு (கேஸ்ட்ரிக் ஜுஸ்) உதவுகிறது.

இந்த வேலையை நான் செய்து முடிக்க மூன்று முதல் நான்கு மணி நேரம் பிடிக்கிறது. எனவே, நான்கு மணி நேரத்துக்குப் பின்னர் உணவை என்னுள் அனுப்புங்கள். நான் என் வேலையை முடிப்பதற்குள் நீங்கள் உணவை அனுப்பினால் அவசரக் கால மருத்துவர் போல், முன் வந்த உணவை செரிமானத்துக்குத் தயாராக்காமல், புதிய வரவான உணவை அடித்து, உடைத்து, நொறுக்கி தூள் தூளாக்கத் தொடங்கி விடுவேன். செரிமானக் கோளாறு ஏற்பட்டு, வயிற்று வலி, வயிற்றில் கரடு முரடான ஒலி, வயிற்றுப் போக்கு (டயோரியா) எனப்படும் பேதி ஏற்படும்.

இதைத் தடுக்க,

அற்றதறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவரப் பசித்து

என்னும் திருவள்ளுவர் வாழ்வியல் அறவுரை மிக்கப் பயன்தரவல்லதாகும். அதனைக் கற்றுத் தெளிவடையுங்கள். ஓய்வறியா துழைக்கும் உடலுறுப்புகளில் நானும் ஒருவன். நான் கடமையுணர்வு மிக்கவன்; தன்னல மறுப்பு என் வாழ்வியல் கொள்கை. ஆனால் நீங்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளின் மூலம் எனக்குத் தீங்கிழைத்து. என் இயக்கத் தைத் தடுக்கின்றீர்கள். உங்களின் தீய பழக்க வழக்கங்களால் பாதிக்கப்படுவது நான் அல்ல; நீங்கள் மட்டுமே!

1.புகைபிடிப்பது, புகையிலை கலந்த பொருள்களைப் பயன்படுத்துதல்.

2. மது அருந்துதல்

3. போதைப் பொருள்களைப் பயன் படுத்துதல்

4. அதிக மசாலா சேர்த்த உணவை உண்ணுதல்

5. அதிகக் காரமான உணவு

6. வயிறு நிறைய உண்ணுதல்

7. பசி ஏற்படும் போது உணவு உண்ணாமை

8. நன்றாக மென்று தின்னாமல், அவசர அவசரமாக உணவை உள்ளே தள்ளுதல்.

இவற்றால் என்னுள் அல்சர், புற்று நோய் போன்ற குடற்புண்கள் தோன்று கின்றன. நீங்கள் அறிவோடு செயற் பட்டால் நான் உங்களின் நண்பன் ஆவேன்; இல்லை யெனில் எதிரி ஆவேன்!

Archives

?பெரியார் பிஞ்சு

2008