உலக நாடுகள் - "காங்கோ" மக்களாட்சிக் குடியரசு
- வை.கலை
அமைவிடமும் பரப்பளவும்
* காங்கோ மக்களாட்சி குடியரசு மத்திய ஆப்ரிக்காவில் அமைந்துள்ள ஆப்ரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும்.
* 1971-ஆம் ஆண்டுக்கு முன் இந்நாட்டின் பெயர் சயீர்.
* மத்திய ஆப்ரிக்க குடியரசு, சூடான், உகாண்டா, ருவாண்டா, புருண்டி, சாம்பியா, அங்கோலா, காங்கோ குடியரசு ஆகிய நாடுகள் எல்லைகளாக அமைந்துள்ளன.
* இந்நாட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங் கடல் அமைந்துள்ளது.
* இதன் பரப்பளவு 2,345, 410 சதுர கீ.மீ.
* (உலகின் பரப்பளவில் 12-ஆவது பெரிய நாடு)
* தாங்கனிகா ஏரி தான்சானி யாவையும் காங்கோ மக்களாட்சி குடியரசையும் பிரிக்கிறது.
மொழியும் - மக்கள் தொகையும்
* இந்நாட்டின் ஆட்சி மொழி பிரெஞ்சு மற்றும் லிங்காலா, கொங்கோ, கிட்டூபா போன்ற மொழிகள் பேசப்படுகின்றன.
* 2007-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 62,636,000 பேர்.
(உலக அளவில் மக்கள் தொகையில் 21-ஆவது இடம்)
இவர்களில் 84 சதவீதம் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
பொருளாதாரம்
* இந்நாட்டின் நாணயம் கொங்கோ பிராங்க்,
* அதிகம் உற்பத்தி செய்யப்படும் வேளாண் சார் முக்கியப் பொருட்கள் அரிசி, சர்க்கரை, சோளம், புகையிலை, காப்பி, காய்கறிகள்.
* முக்கியத் தொழில்கள் பெட்ரோலிய சுத்திகரிப்பு, சிமெண்ட், பனை எண்ணெய்,
* இயற்கை வளங்கள், பெட்ரோலியம், டிம்பர், பொட்டாஷ், காரீயம், துத்தநாதம், யுரேனியம், தாமிரம், பாஸ்பேட், இயற்கை எரிவாயு, நீர் மின் சக்தி
* முக்கிய ஏற்றுமதிகள் பெட்ரோலியம் மரக்கட்டைகள், சர்க்கரை, காப்பி, வைரம்
* முக்கிய இறக்குமதி பொருட்கள், கட்டுமான பொருட்கள், மூலதன பொருள்கள்.
அரசு அமைப்பு முறை
* ஜனாதிபதி தலைநகர் இன்ஷாசா ஆட்சி முறை அமலில் உள்ளது (தற்போதைய ஜனாதிபதி ஜோசப் கபிலா (Josaph kabila)
* பிரதமர் அன்டோன் கி செங்கா (Adolphe Muzito)
* சுதந்திர தினம் ஜூன் 30 (பெல்ஜியத் திடமிருந்து 1960-இல் விடுதலைப் பெற்றது). |