உலக நாடுகள் - தென்கொரியா

வை.கலை

அமைவிடம்:

இது கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத் தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சியோல். இங்கு பேசப்படும் மொழி கொரிய மொழியாகும். பௌத்த மதமும், கிறித்தவ மதமும் இங்கு பின்பற்றப்படுகிறது. நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,00,032 சதுர கிலோ மீட்டர்கள். மக்கள் தொகை 50 மில்லியன்கள். இதற்கு, மேற்குப் பக்கம் சீனாவும், கிழக்கே ஜப்பானும், வடக்குப் பக்கம் வட கொரியாவும் உள்ளன. இது பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதியாகும். கி.மு.2333 இல் கோஜோசியோன் அரசுதான் கொரியாவின் மூலம். 1910 ஆம் வருடம் இறுதிவரைக் கொரியாவை, கொரியோ டைனாசிட்டி (Goryeo Dynasity); ஜோசியன் டைனாசிட்டி (Joseon Dynasity) ஆகிய இரண்டு குலங்கள் ஆண்டு வந்துள்ளன. இந்தக் கால கட்டத்தில் ஜப்பானோடு இணைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு சோவியத் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஆக்ரமித்திருந்த நாடு வடகொரியா, தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது.

தென்கொரியா 1948-_ஆம் ஆண்டு ஜனநாயக நாடாக அமைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு வட கொரியாவின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை எட்டி முழு ஜனநாயக நாடாக மாறியது. தென்கொரியா, அதிபர் ஆட்சி முறையைக் கொண்டது. இது 16 நிருவாகத்துறைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இது வளர்ந்த நாடு. ஆசியாவில் நான்காவதும், உலகில் 15-_ஆவதுமான பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது. இதன் பெரும்பாலான பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டது. மின்னணுச் சாதனங்கள், வாகனங்கள், கப்பல்கள், இயந்திரங்கள், பெட்ரோலியப் பொருட்கள், இயந்திர மனிதர்கள் ஆகியவற்றைத் தயாரித்தது.

இந்நாடு -ஐ.நா. சபை, உலக வர்த்தக நிறுவனம் ஜி_20 ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கிறது.

அமைப்பு முறை:

1. நிருவாகத்துறை

2. நீதித்துறை

3. சட்டத்துறை _ என்று பிரிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு இதன் அரசியலமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. முதல் தேர்தல் 1948இல் நடந்தது.

கல்வி: உலகில் முதல் முறையாக அதிவிரைவு கண்ணாடி இழைக்கற்றை இணைய வசதி (BroadBand Internet) முதல் நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் கொடுக்கப்பட்டது. இதே பள்ளி மாணவியர்களுக்கு மின் புத்தகத்தை இந்த அரசு கொடுத்திருக்கிறது.

இதன் முக்கிய நகரங்கள்:

சியோல், பூடான், இன்ச்சியயன், டியாகு உட்பட இருபது பெரிய நகரங்கள் உள்ளன.

இந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் நாத்திகர்கள், மீதி மக்கள் கிறித்தவ, பவுத்தத்தின்மீது நம்பிக்கையுள்ளவர்கள்.

இது ஒரு மதசார்பற்ற நாடு.

யுனெஸ்கோவின் பாரம்பரியமிக்க வரலாற்று இடங்களில் ஒன்பது இங்கு உள்ளது. டேக் வான்டோ என்கிற தற்காப்புக் கலையே இங்குதான் உருவானது.

1988_ ஒலிம்பிக், 2002 _ கால்பந்துப் போட்டி இங்கு நடைபெற்றுள்ளது.

Bookmark and Share

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/june/page04.php on line 118

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/june/page04.php on line 118