சின்னக்கதை - சொல்லும் செயலும்?

தாதா

ஒரு ஊரிலே சந்தேகம் என்ற பெயருடைய ஒரு அறிவாளி இருந்தான். அவன் தன் பெயருக்-குத் தகுந்தபடி எதைக் கண்டாலும், கேட்டாலும் சந்தேகப்பட்டு ஆராய்ந்து உண்மையை உணரும் குணம் உடையவனாக இருந்தான். சந்தேகத்திற்கு ஒரு தோழன் இருந்தான். அவன் பெயர் நம்பிக்கை. நம்பிக்கையோ சந்தேகத்-திற்கு நேர்மாறாமான குணம் உடையவன்; எதைக் கண்டாலும், கேட்டாலும் அப்படியே நம்பிவிடுவான். பிறகு, நம்பி நம்பித்தானே நாசமாய்ப்போனேன் என்று சந்தேகத்திடம் வந்து சொல்லி அழுவான்.

தன் தோழன் நம்பிக்கையின் மீது சந்தேகத்திற்கு அதிக அனுதாபம் இருந்தது. எப்படியாவது நம்பிக்-கைக்குச் சரியான புத்தி கற்பிக்கவேண்டும் என்று சந்தேகம் தீர்மானித்துக் கொண்டிருந்தான்.

நம்பிக்கைக்கு வேதம் என்ற ஒரு மனைவியும், பிற்போக்கு என்ற ஒரு மகனும் இருந்தனர். பிற்-போக்கு, பிறந்ததிலிருந்தே சதா நோயுண்டு மெலிந்து-கொண்டே வந்தான். வேதத்தின் மீது நம்பிக்கைக்கு விருப்பம் இருந்தாலும், அவளை அவன் சரியாகக் கவனிப்பதுகூட இல்லை; ஏனென்றால், அவள் வயிற்றில் பிறந்த பிள்ளை-யாகிய பிற்போக்குவின் கவலை, நம்பிக்கையை நாளுக்குநாள் வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது.

சந்தேகத்திற்கு விஞ்ஞானம் என்ற ஒரு மனைவியும், முற்போக்கு என்ற ஒரு மகனும் இருந்தனர். முற்போக்கு, பிறந்ததிலிருந்து நாள் ஒரு மேனியும், பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து, வானில் விளையாடி மகிழும் வல்லமை உடையவனாகவும் விளங்கினான்.

இப்படிச் சந்தேகத்தின் குடும்பம் சதா இன்பமயமாக இருப்பதைக்கண்டு நம்பிக்கைக்குக் கொஞ்சம் பொறாமைகூடப் பிறந்தது; ஆனால், அவர்கள் நட்புமட்டும் கெடவில்லை. ஒரு நாள் வழக்கம்போல் நம்பிக்கை நம்பி நம்பித்தானே நாசமாய்ப் போனேன் என்று அழுது கொண்டே சந்தேகத்திடம் ஓடி வந்தான். சந்தேகத்திற்கு அந்தத் தடவை இரக்கத்தோடு சற்றுக் கோபமும் உண்டாகிவிட்டது. உனக்கு அறிவிருக்கிறதா இல்லையா? ஒரு தடவை நம்பி மோசம் போனால், மறுதடவையும் நம்பலாமா? என்று கேட்டான்.

அதற்கு நம்பிக்கை, அடச் சந்தேகமே! நான் சாதாரண மனிதனையா நம்பினேன்? கடவு-ளையே அல்லவா நம்பினேன்! கடவுளை நம்பினோர் கைவிடப்படாரே....? என்று அழுதான்.

அட மூடநம்பிக்கையே! கடவுளை நம்பி என்ன கேடு செய்துவிட்டாயோ!! விவரமாகத்தான் சொல்லி அழேன்!!! என்றான் சந்தேகம்.

அய்யோ! அந்தப் பாழாய்ப் போன கடவுளுக்குக் கண்ணில்லையா? உள்ளமும் கல்லா? ஏழை மீது இரக்கம் இல்லையா? அதை நம்பிக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த மார்க்கண்-டேயனைக் காப்பாற்றவில்லையா? என் மகனை மட்டும் எப்படிக் கைவிட்டுவிடலாம்? சிவலிங்கத்-தைக் கட்டிப் பிடித்துக்கொண்டே என் மகன் செத்துவிட்டானே! என்று அலறி அழுதான் நம்பிக்கை.

ஓ.....! உன் மனைவி வேதத்தின் மகன் பிற்போக்கு இறந்து விட்டானா? சரிசரி அது நான் எதிர்பார்த்த செய்திதான்! உன் மகன் பிறந்த உடனேயே இறந்து போகாமல், இவ்வளவு காலம் உயிரோடு இருந்ததே பெரிய காரியம்! என்று சொன்னான் சந்தேகம்.

ஏம்பா அப்படிச் சொல்கிறாய்? என் மனைவி வேதம் கடவுளுக்கு மிகவும் வேண்டியவள்; பக்த-கோடிகளின் விசுவாசத்தைப் பெற்றவள் அல்லவா? என்றான் நம்பிக்கை.

எத்தனையோ கடவுள்களும், எத்தனையோ விதவிதமான பக்தர்களும் உண்டென்கிறார்களே! உன் வேதத்துக்கு, வேண்டிய கடவுள் யாரோ? உன் மகன் பிற்போக்கு எந்தக் கடவுளைக் கட்டிப்-பிடித்துக் கொண்டிருந்தானோ? என்று விசாரித்தான் சந்தேகம்.

எத்தனை கடவுள்கள் இருந்தாலும் எல்லா-வற்றிற்கும் ஆதிமூலமான கடவுள் ஒன்றே ஒன்றுதானே! என்றான் நம்பிக்கை.

சொல்லிலா? செயலிலா? என்று கேட்டான் சந்தேகம். அதற்கு சொல் வேறு செயல் வேறா? என்று கோபமாகக் கேட்டுவிட்டுச் சந்தேகத்தை முறைத்துப்பார்த்தான் நம்பிக்கை.

அட மூட நம்பிக்கையே! உன் மூளைக்குச் சற்று வேலை கொடுத்துப் பார்க்கக் கூடாதா? ஒரு மூலக் கடவுள், ஒரு மூல மதம், ஒரு மூலப்-புராணம் என்றிருந்தால், உலகில் மக்களுக்குள் இத்தனை பேதங்களும், பித்தலாட்டங்களும் உண்டாகி இருக்கமுடியுமா? ஒரே ஒரு மூலக் கடவுளாவது இருக்கலாம் என்று நம்புவதற்குக்கூட என்ன ஆதாரம் இருக்கிறது?

மேலும், அந்தக்காலத்திலேயே அவ்வளவு பெரிய மகான் ஏசுநாதரையும், இந்தக் காலத்திலும் அற்புதமாக அந்தராத்மாவோடு பேசிக்-கொண்டிருந்த மகாத்மாவையுங்கூட, கடவுள் கைவிட்டு விட்டா-ரென்றால், உன் மகன் மட்டும் அவருக்கென்ன பெரிதா?

ஏதோ மார்க்கண்டேயனை மட்டும் காப்-பாற்றினாரே! என்று பிரலாபிக்கிறாயே! இப்போது அந்த மார்க்கண்டேயன் எந்த ஊரிலிருக்கிறான்? விலாசம் என்ன என்பதாவது உனக்குத் தெரியுமா? என்று கேட்டான் சந்தேகம்.

அதற்கு, ஆதிகாலத்தில் உள்ள மக்கள் தம் அறிவுக்குத் தகுந்த அளவில் மட்டும் கடவுளை அறிந்து சொன்னதினால், ஆயிரத்திநானூறு ஆண்டு-களுக்கு முன்பு தோன்றிய புராணங்-களில்தான் ஏதாவது முரண்பாடுகள் இருந்தாலும் இருக்கலாம்! ஆனால், கடைசியாகத் தோன்றிய இஸ்லாம் மதத்தில் ஒரு முரண்பாடேனும் உண்டா? என்று கர்ச்சனை புரிந்தான் நம்பிக்கை.

சந்தேகம் சிரித்துக்கொண்டே அளித்த பதில், ஏ மூட நம்பிக்கையே! முழுக்கவனமாகக் கேள்!! அல்லாஹுத்-தாலா இல்லாத இடமே இல்லை என்று சொன்ன முஹமது நபியின் குர்_ஆனில், கடவுளைப்-பற்றிச் சொல்லும் போது கடவுள் ஒவ்வொரு-வருடைய பிரடி நரம்பைவிடச் சமீபத்தி-லிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது; ஆனால், முஹம்மது நபியோ, ஒரு நாள் இரவு கடவுளைக் கண்டு பேசுவதற்காக மக்காவைவிட்டு (மிஃராஜ்) வானலோகத்திற்குப் போய்விட்டு வந்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! எப்படி இருக்கிறது சொல்லும், செயலும்? என்று கேட்டான்.

அதைக் கேட்கவும் நம்பிக்கைக்குத் தூக்கி வாரிப்போட்டது போலிருந்தது. பதில் பேச நாவெழவில்லை; ஆனால், ப-குத்தறிவு உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக உதயமாவதைக் கண்ட சந்தேகம், மகிழ்ச்சியோடு நம்பிக்கைக்கு விடை கொடுத்து அனுப்பிவைத்தான்.

- குடிஅரசு 25.09.1948

Bookmark and Share

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/june/page09.php on line 115

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/june/page09.php on line 115