மந்திரமா? தந்திரமா?
கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

சாமியார்கள் ஆன்மிகக் குப்பைகளை அறிவிய-லோடு இணைத்து மக்களை மென்-மேலும் அறியாமை இருளில்தள்ள ஊடகங்கள் வியாபார நோக்கில் போட்டி போடுகின்றன.
சாமியார்களிடம் போகும் பக்தர்களை உங்களுக்கு நேரம் சரியில்லை, உங்களது குடும்-பத்திற்குக் கெட்டகாலம், உங்கள் குடும்பத்தில் விரயச் செலவு வரப்போகுது, உங்களில் ஒருவருக்குத் தப்பவே முடியாத சரியான கண்டம் எனக் கூற, பக்தர்கள் நடுங்கிப் போவார்கள், இந்த நடுக்கத்தைச் சாமியார்-கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, சரி சரி இதற்கெல்லாம் ஒரு பரிகார பூஜை செய்து கழிப்புக் கழிச்சா எல்லாம் சரியாகிவிடும் என்று சாமியார்கள் கூறியதும், பக்தர்களும் சரி சாமி இதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்க, பூஜைப் பொருள்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயார் செய்து தருவார். குறைந்த பட்சம் ஆயிரம், இரண்டாயிரம்வரைச் செலவாகும். இவை இல்லாமல் சாமியாருக்குக் காணிக்கையாக அய்ந்தாயிரம், பத்தாயிரம் என, சாமியார்களின் தரத்திற்கு ஏற்றபடி வசூலிப்பார்கள். இது போன்ற பூஜைகளில்தான் கத்தியில் இருந்து இரத்தத்தைப் பூசாரிகளும், சாமியார்களும் வரவழைப்பார்கள்.
இந்தத் தந்திரம் எப்படி என்று விளக்கமாகக் காண்போம். நம் வீட்டில், காய் வெட்டப் பயன்-படுத்தும் சிறிய அளவிலான கத்தியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் செம்பருத்திப் பூவைக் கசக்கிக், கத்தியின் இரண்டு பக்கங்களிலும் தேய்த்து, வெயிலில் நன்றாகக் காய வைத்து விடுவார்கள். இப்படிக் காய வைத்து விட்டால் கத்தியில் எந்த-தொரு மாற்றமும் இருக்காது. பின்னர் இது-போன்ற பூஜைகளுக்கு வரும் போது, பூசாரிகள் இப்படித் தயாரித்து வைக்கப்பட்ட கத்தியுடன் வருவார்கள். பூஜை-களில் எலுமிச்சைப் பழத்தைக் காவு கொடுப்-பதாகக் கூறி, இந்தக் கத்தியால் வெட்டு-வார்கள். அப்படி வெட்டும் போது இரத்தம் ஒழுகும். இதற்குக் காரணம், கத்தியில் ஏற்கெனவே தடவப்-பட்ட செம்பருத்திப் பூவின் தன்மையும், எலுமிச்-சைச் சாற்றின் தன்மையும்தான். செம்-பருத்திப் பூவைத் தேய்த்த இடத்தில், எலுமிச்சைச் சாறு பட்டால் இரத்தம் போல மாறும். இத்தகைய அறிவியல் ரீதியான மாற்றத்தை, அறிவியல் கண்ணோட்டத்-தோடு பாராமல், பக்தி நோக்கத்-தோடு சாமியார்கள் பாமர மக்களை ஏமாற்றிப் பணம் குவிக்கின்றனர். பக்தியில் மூழ்கிய அப்பாவி மக்களும், இது போன்றவற்றிற்கு இரையாகின்றனர், அன்புக் குழந்தைகளே! இது போன்ற சதிகாரச் செயல்களுக்கு ஆளாகாமல் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க, உங்களது பெற்றோர்களைத் தயார் செய்வீர்களா? _வெங்கட.இராசா, ம.பொடையூர்.
|