மனித இனவரலாறு - 62
அமெரிக்காவின் வளர்ச்சி
மு.நீ.சிவராசன்

16 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பியக் குடியேற்ற நாடுகள் வட அமெரிக்காவை அடைந்தன. அவர்கள் கிழக்குக் கடற்கரை நெடுகிலும் தங்கள் வாழுமிடங்களை அமைத்துக் கொண்டனர்.
ஆனால் ஏழாண்டுப் போருக்குப் பின் (1756 _ 63) அவர்கள் அப்பலாச்சியன் மலைகளுக்கு மேற்கே குடியேறத் தொடங்கினர். அவர்களில் சிலர் மென்மயிர் (Fuê) வாணிபத்தில் ஈடுபட்டனர். வேறு சிலர் வேளாண்மை செய்ய புதிய நிலங்களை நாடிச் சென்றனர்.
மேற்கு நோக்கிய பயணம் பல ஆண்டுகள் நடந்தது. 1803 இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜெபஃர்சன் (Jefferson) பிரான்சு ஆளுகைக்குட்பட்ட லூசியானாவின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினார். அப்பகுதி மிசிசிபி நதியிலிருந்து ராக்கி மலைத் தொடர்வரை பரந்து விரிந்திருந்தது.

ஆரிகான் தடம் (The oregon Trail) மிசவுரி நதியில் தொடங்கி அடர்ந்து செழித்து வளர்ந்த தாவரங்கள் உள்ள வில்லமெட் பள்ளத்தாக்கில் (Willamette Valley) முடிவது இவ்வழித்தடம். இத்தடத்தில் பயணம் செய்வது மிக மிகக் கடுமையானது. மெக்சிகோவின் ஒரு பகுதி போரில் வெல்லப்பட்டது. மேற்கில் குடியேறுவதை மக்கள் விரும்பினர். பலர் ஆரிகான் தடத்தைப் பயன்படுத்தினர். வழியில் பலர் இறந்தனர் எனினும் புதிய குடியிருப்பை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

|