சிறுவர் நூல்

நூல் : அமேசான் காடுகளும், சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?

ஆசிரியர்: பெ. கருணாகரன்

வெளியீடு: குன்றம் பதிப்பகம், 73/31, பிருந்தாவனம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.

பக்கங்கள்: 112 விலை: ரூ. 45/-

இன்றைய சூழ்நிலையில், ஓசோனின் தேவையினையும், ஓசோன் படலத்தின் நிலையி னையும் எடுத்துக்கூறி, வருங்கால விஞ்ஞானிகளை உருவாக் குவதற்கு வித்திட்டிருக்கும் முறை அருமை! மிருகங்களை வேட்டையாடக்கூடாது; மிருகக்காட்சி சாலைகளில்கூட மிருகங்களைச் சிறைப்படுத்தக்கூடாது என்ற கருத்து எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளது. மரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும், தேனீக்களின் சுறுசுறுப்பும் தித்திக்கும் விதத்தில் விளக்கப் பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவு களால், அருகிலுள்ள குளங் களுக்கும் அதில் வாழும் மீன் போன்ற உயிரினங்கள், அருகிலுள்ள மரங்கள், அதில் கூடுகட்டி வாழும் பறவைகள் பாதிக்கப்படுவது பாங்குறக் கூறப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் கெடுவதற்கான சூழ் நிலையை உருவாக்கும் இப்பிரச் சினையைத் தீர்க்கும் வழி முறையையும் கூறியுள்ள விதம் போற்றற்குரியது. மரங்களின் இன்றியமையாமையும், மரங்கள் இல்லாத இடம் நாளடைவில் பாலைவனமாக மாறும் நிகழ்வையும் எடுத்துக்கூறிப் பிஞ்சுகளின் மனதில் சிந்தனையைத்தூண்டி நல்வழிப்படுத்த முயன்றுள்ளார் நூலாசிரியர். பிஞ்சுகளின் கைவண்ணத்தில் ஒளிரும் ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தளிப்பவை!

சிறுவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் செய்திகளைச் சொல்வதற்காகக் கதை வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆயினும் கடந்த 50 ஆண்டுகளாக அறிவியல் செய்திகளைச் சிறுவர்களுக்கு வழங்கும் அவசியம் ஏற்பட்டபிறகு கற்பனையையும், புனைவுகளையும் தாண்டி அறிவியல் உண்மைகளைக் குழந்தை எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கினார்கள். எனவே, அறிவியல் ரீதியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் இன்னும் கற்பனையாகவே செய்திகளை வழங்கும் முறையை மாற்றவேண்டியது காலத்தின் தேவை. இந்நூலில் கூட சிங்கராஜாவின் ஆவி என்றும், அமேசான் காடுகள் மரங்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்த கதையும் கற்பனையாக இருப்பது கணினி யுகத்தில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஏற்றதா?

- செல்வா

Bookmark and Share

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/june/page14.php on line 104

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/june/page14.php on line 104