இது கின்னஸ் பக்கம்
உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி

செல் பேசிகள் என்றால் கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்று தானே எதிர்பார்ப்போம்! அதிலும் முன்பு வந்த மாதிரியை விட இது மெல்லியது.. சிறியது.. என்று சொல்லுவதில் கூட நமக்குப் பெருமை உண்டு. ஒரு பொத்தானை அமுக்குவதற்கே ஒரு கை வேண்டும் என்னும் அளவிற்கு செல்பேசி இருந்தால் எப்படி இருக்கும்.

ஆம். உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி ஒன்றும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. நீங்கள் பார்க்கும் படம்.. ஏதோ விளம்பரத்திற்கான பலகை அல்ல.. மாதிரி வடிவமும் அல்ல.. உண்மையிலேயே ஒரு பெரிய செல்பேசிதான் இது.

செல்பேசிக் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்-கும், செல்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனமான கிரிக்கெட் கம்யூனிகேசன்சும் இணைந்து அமெரிக்காவின் சிக்காகோ நகரின் பயோனீர் சதுக்கத்தில் இந்த மிகப்பெரிய செல்பேசியை இயங்கச் செய்தார்கள்.

சாம்சங் தயாரிப்பான குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு வசதியான -450 என்ற மாதிரி செல்பேசியை 15 அடி நீளமும், 11.2 அடி உயரமும், 2.5 அடி தடிமனும் உள்ள அளவிற்கு பெரிதாக உருவாக்கி, அதற்கு இணைப்பும் வழங்கப்பட்டு பொது மக்களின் இலவச பயன்பாட்டுக்கும் அனுமதித்திருக்கிறார்கள்! கின்னசின் சாதனைப் பட்டியலில் 2009 மார்ச் 11-ஆம் தேதி இணைக்கப்பட்டது. கமெண்ட் கட்டத்துரை:

இந்த செல்லை எடுத்துப் பாக்கெட்டில சொருக முடியுமா? காதில வச்சுப் பேச முடியுமா? காதுப் பக்கம் நின்று கேட்டு, வாய்ப் பக்கம் போயி பேசிட்டு வரவே 10 நொடி ஆகுமே! நொடிக்கு 1 காசு-ன்னா இதுக்கே பாதி போயிடுமே! உஸ்... யப்பா...!

Bookmark and Share

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/june/page15.php on line 99

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/june/page15.php on line 99