| மீன்சாரத்தால் மீன் பிடிப்போமா? | |||
|
|
தேவையான பொருள்கள் : பெரிய ஆணியின் மேல் பூக்காகிதச் சுருளைச் சுற்றுவதுபோல் ஜரிகை அல்லது காப்பிட்ட கம்பியை ஒரு சுருள் மற்றொரு சுருளைத்தொடாமல் நெருக்கமாகச் சுற்றுங்கள். சுற்றிய இரு நுனிகளையும் மின்கலத்தோடு மேலும் கீழுமாக இணையுங்கள். ஆணியின் தலைப்பகுதியை தண்ணீர் மட்டத்தில் பிடியுங்கள். தகர மீன்கள் தண்ணீரை விட்டு வெளியே துள்ளிவந்து ஆணியின் தலைப்பைக் கவ்விக்கொள்ளும். ஏன்? எப்படி? காந்தம் இரும்பை இழுக்கும் தன்மை கொண்டது. மின்கலத்திலிருந்து வரும் மின்சாரம் கம்பிச் சுருள்களின் வழியே வரும்பொழுது மின்சக்தி காந்த சக்தியாக மாறி ஆணியைத் தற்காலிகக் காந்தமாக மாற்றுகிறது. ஆகவே, இரும்பு மீன்துண்டுகள் ஆணியில் ஒட்டுகின்றன. ஆக்கம் : அணு கலைமகள், சிவகங்கை
|



