புவியை ஆளலாம்! | |||
|
காலை மாலை வேளைகளில் நடை நடக்கலாம்! காற்று வாங்கி கடற்கரையில் களைப்பைப் போக்கலாம்! நூலகத்தை நாடிப் படித்து அறிவில் உயரலாம்! நுண்ணறிவு வளர்ச்சியிலே மேன்மை அடையலாம்! வேளையோடு* எதையும் செய்தால் வெற்றியடையலாம்! காலத்தோடு கடமை செய்தால் தலைவராகலாம்! பொதுநலமே கொள்கையென்றால் புரட்சி நடக்கலாம்! புதிய விடியல் எழுச்சியிலே புவியை ஆளலாம்! மு.பாலசுப்பிரமணியன், புதுச்சேரி
|