அரசுப் பள்ளிலிருந்து அமெரிக்காவுக்கு!
Print

புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும் ஆதனக்கோட்டை அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமி, விளையாட்டாக ஆன்லைன் தேர்வு எழுத, அமெரிக்காவின் நாசாவிலிருந்து அங்கே வருமாறு அழைப்பு வந்துள்ளது. அங்கு விண்வெளி வீரர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆண்டுதோறும் இந்திய மாணவர்கள் வருகை தர நடத்தப்படும் போட்டியில், ஜெயலட்சுமி வெற்றி பெற்று அந்தப் பள்ளிக்கே பெருமை சேர்த்துள்ளார்.

ஜெயலட்சுமி, தன் குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தை எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துப் பெறுவதோடு மட்டுமின்றி, தன் லட்சியத்தையும் வென்று இருக்கிறார். தனியார் பள்ளி மாணவர்கள்தாம் இதுபோன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் என்னும் நிலையைத் தகர்த்தெறிந்து உள்ளார் ஜெயலட்சுமி. பலரின் உதவியால் பாஸ்போர்ட் எடுத்துள்ளார். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியிலும் சேர்ந்து நன்கு தயாராகி வருகிறார். பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, நாசா செல்லும் ஜெயலட்சுமியை வாழ்த்துவோம், பிஞ்சுகளே!

Share