Home
புதன், 08 ஏப்ரல் 2020
உலக நாடுகள் : போர்ச்சுக்கல்(Portugal)
Print E-mail

அமைவிடமும் எல்லையும்:

*           அய்ரோப்பா கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாடு.

*           வடகிழக்கில் ஸ்பெயினும், மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன.

*           அய்பீரிய தீபகற்பத்தின் கரைப்பகுதியில் அமைந்துள்ள நாடு.

*           தலைநகரம்: லிஸ்பன்

*           பரப்பளவு: 92,345 கி.மீ.2 (35,580 சதுர மைல்)

வரலாறு:

*           கி.மு.1000இல் செல்டிக் மக்கள் இங்கு குடியேறினர்.

*           கி.மு.140 வாக்கில் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டு கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை அவர்களால் ஆளப்பட்டது.

*           பின்னர் ஜெர்மானியப் பழங்குடியினர் படையெடுத்தனர்.

*           கி.பி.711இல் நடந்த முஸ்லிம் படையெடுப்பினால் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டது.

*           வடக்குப் பகுதி மட்டும் கிறித்துவர்களின் வசம் இருந்தது.

*           கி.பி.1179இல் போர்ச்சுக்கல் அரசு உருவாகி, பின்னர் முஸ்லிம் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இடங்களைக் கைப்பற்றி நாட்டை விரிவடையச் செய்தனர்.

*           கி.பி. 1270இல் மூன்றாம் அல்ஃபோன்ஸோ அரசால் நவீன போர்ச்சுக்கல்லின் எல்லைகள் இறுதி செய்யப்பட்டன.

*           கி.பி. 1580 முதல் கி.பி. 1640 வரை ஸ்பெயினுடன் இணைக்கப்பட்டிருந்தது.

*           15, 16ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு மன்னர்களின் முடியாட்சிக்கு உட்பட்டிருந்தது.

*           1932 முதல் 1968 வரை அன்டோனியோ டி ஒலிவீரா சலஸார் போர்ச்சுக்கல்லின்  சர்வாதிகாரியாக இருந்தார்.

*           1974இல் கார்னேஷன்ஸ் புரட்சியால் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டது.

*           1976இல் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்-பட்டது.

மொழியும் மக்களும்:

*           போர்ச்சுகீசியர்கள் 95.3% மற்றவர்கள் 4.7%

*           மக்கள் பேசும் மொழி போர்ச்சுக்கீசிய மொழி. நாட்டின் மொழியாகவும் இதுவே உள்ளது.

*           லிஸ்பன் கிளை மொழியே போர்ச்சுக்கீசிய மொழியின் அடிப்படையாகும்.

*           மக்கள் போர்ச்சுகீசியர் என அழைக்கப்படுகின்றனர்.

*           மக்கள் தொகை 10,848,692.

பொருளாதாரம்:

*           நாணயம்: யூரோ

*           புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்று மிக வேகமாக முன்னேறி வரும் நாடு. தனியார் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய பங்காற்றுகிறது.

*           துணிகள், காலணிகள், ஆடைகள் துறையில் ஏற்றுமதி அதிகமாகச் செய்யப்படுகிறது.

*             விவசாயத் துறையில் பெரும்பான்மை மக்கள் பங்கேற்று வருகின்றனர்.

*           ஏற்றுமதியில் வேளாண் விளைபொருளாக தாவர எண்ணெய்கள், கோதுமை, காய்கறிகள், காளான், பால் பொருள்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

*           மீன் ஏற்றுமதியில் அய்ரோப்பிய கண்டத்தில் சிறந்து விளங்கும் நாடு.

*           செம்பு, டங்ஸ்டன், யுரேனியம், டின், அலுமினியம், நிலக்கரி ஆகிய கனிமங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அரசு முறைகள்:

மார்செலோ ரெபலோ டி சோசா

ஆண்டனியோ காஸ்டா

*           தலைவர்: மார்செலோ ரெபலோ டி சோசா

*           பிரதமர்: ஆண்டனியோ காஸ்டா

*           மக்கள் குடியரசு ஆட்சி முறை

*           நாட்டின் தலைவரை அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் மக்கள்  தேர்ந்தெடுக்கின்றனர்.

*           பாராளுமன்றத்திற்கு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை 230 நபர்கள் தேர்ந்தெடுக்கப்-படுகின்றனர்.

*           பிரதமரே, அரசாங்கத்தை தலைமை ஏற்று நடத்தும் அதிகாரம் படைத்தவர் ஆவார்.

*           உச்சநீதிமன்றங்கள் சுதந்திரம் கொண்ட அமைப்பாகச் செயல்படுகின்றன.

*           உள்ளாட்சி அமைப்புகளை சிறப்பாகச் செயல்படுத்தும் முறையையும் கொண்டுள்ளது.

புவியியல்:

*           கோடைக் காலத்தில் அதிகபட்சமான வெப்பநிலையாக 400C (1040F)

*           குறைந்தபட்சமான வெப்பநிலையாக 280C (820F) உள்ளது.

*           330 மற்றும் 430N அட்சக் கோட்டிலும், 320 மற்றும் 60W தீர்க்கக் கோட்டிலும் உள்ளது.

*           ஆறுகள்: டூரோ (Douro), டாகஸ் (Tagus), கோஅ (Coa), மன்டிஹோ (Mondego), மிரா (Mira).

உணவு முறை:

*           மீன் உணவினை அதிகளவில் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

*           சார்டினெஸ் (Sardines) எனப்படும் கடல் உணவு சுற்றுலா பயணிக்கு புதிய உணவாகும்.

*           சாண்ட்விச், பிஃபானஸ் சாண்ட்விச் போர்ச்சுகீசியரின் பாரம்பரிய உணவாக கொள்ளப்படுகிறது.

*           சிக்கன் பிரி-_பிரி (Piri-piri) மக்களின் விருப்பமான உணவாகும்.

விளையாட்டுகள்:

*           கால்பந்தாட்டம் மக்கள் விரும்பி விளையாடும் விளையாட்டு.

*           நாட்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ, 10 முறைக்கு மேல் விருது பெற்றுள்ளார்.

*           உலக அளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் மூன்று முறை தேர்வு பெற்ற பெருமை ரொனால்டோவைச் சாரும்.

*       கூடைப்பந்து, நீச்சல், தடகளம், கைப்பந்து, ரக்ஃபி போன்ற விளையாட்டுகள் மக்களால் அதிகமாக விளையாடப்படுகின்றன.

சுற்றுலாத் தலங்கள்:

*           உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக லிஸ்பன் நகரம் தேர்வாகி உள்ளது.

*           போர்டோ (Porto) போர்ச்சுகலில் இரண்டாவது பெரிய நகரம். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான அழகிய வணிக வளாகங்கள் உள்ளன.

*           பிரஜா டா மேரின்ஹா (Praja da marinha) இயற்கையில் உருவான அழகிய கடற்கரை. சுற்றுலா பயணிகள் நீராட ஏற்ற இடமாகும்.

*            லிஸ்பனில் உள்ள மோஸ்டிரோ டாஸ் (Mosteiro dos) எனும் பழைய கட்டடம் காண்போரைக் கவரக்கூடியது.

*         டோமரில் (Tomar) உள்ள மிகவும்  பழமையான கட்டடம் வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டு, காட்சிப்படுத்தி வருகின்றனர்.

 

Share