Home
சனி, 20 ஜூலை 2019
சிறார் பொறுப்பு
Print E-mail

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் - ஏப்ரல் 29

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும்

இனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!

- இன்று குழந்தைகள் நீங்கள்!

நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!

ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!

- இன்று குழந்தைகள் நீங்கள்!

குன்றி னைப்போல் உடல்வன்மை வேண்டும்!

கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!

தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்

அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்!

- இன்று குழந்தைகள் நீங்கள்!

பல்கலை ஆய்ந்து தொழில்பல கற்றும்

பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்

அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!

அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!

- இன்று குழந்தைகள் நீங்கள்!

(இசையமுது, முதற்பகுதி, ப.19, 1942)

Share