Home இஞ்சி இடுப்பழகு என்றால் என்ன?
திங்கள், 18 ஜூன் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
இஞ்சி இடுப்பழகு என்றால் என்ன?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

திரைப்படங்களில்கூட அடிக்கடி சொல்லப்படும் செய்தி இது. இஞ்சி இடுப்பழகு.... என்ற பாடலும் உண்டு. ஆனால், இதற்கு என்ன பொருள்?

இடுப்பு இஞ்சி போன்று இருக்குமா? அப்படியென்றால் கிளை கிளையாக அல்லவா இடுப்பு கிளைத்திருக்க வேண்டும்! பின் ஏன் இஞ்சியிடுப்பழகு என்கின்றனர்?

காலஞ்சென்ற தென்கச்சி சாமிநாதன் அவர்கள்கூட, எனது விளக்கத்தைப் படித்தபின்புதான் தனக்கே அதன் உண்மைப் பொருள் புரிந்தது என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். எனவே, பிஞ்சுகளுக்கு இஞ்சியைப்பற்றிச் சொல்வது பொருத்தமாய் இருக்கும் என்பதால் உங்களுக்கும் அதன் உண்மையை இங்குக் கூற விரும்புகின்றேன்.

இஞ்சி நம் உடல் நலம் காக்கும் உன்னத உணவுப் பொருள். இஞ்சிச்சாற்றை, காலையில் தினந்தோறும் பருகிவந்தால் வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சதையைக் குறைத்துவிடும். இடுப்பிலுள்ள தேவையற்ற சதைகள் குறையும்போது இடுப்பு அழகாக இருக்கும். தோள்பகுதி அகன்றும் இடுப்புப் பகுதி சுருங்கியும் இருப்பதுதான் உடல் நலத்தின் அடையாளம்; உடல் அழகின் அடையாளம். அதை இஞ்சி செய்வதால், இஞ்சி இடுப்பழகு என்றனர்.

இஞ்சி உண்ணும்போது, அதன் மேல் தோலை நன்கு அகற்றிவிட்டு அதன்பின் அதன் சாற்றையெடுத்துப் பருக வேண்டும். அல்லது தோல்நீக்கிய இஞ்சியை மென்றும் சாப்பிடலாம். பெரியவர்கள் ஒரு நெல்லிக்காய் அளவிற்கும், சிறியவர்கள் அதில் பாதியளவிற்கும் சாப்பிடவேண்டும்.

காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் தின்றால்
கோலை யெறிந்து
குலாவி நடப்பர்

என்கிறது சித்தர் பாடல். கோல் ஊன்றி, குனிந்து நடந்த முதியவர்கூட காலை இஞ்சியும், பகலில் சுக்கும், மாலையில் கடுக்காய்த் தோலும் சாப்பிட்டால், கோலை எறிந்துவிட்டு வாலிபன்போல் நடப்பர் என்கிறது இப்பாடல். அப்படியாயின், சிறுவயதுமுதல் இப்படிச் சாப்பிட்டால் என்றும் இளமையாகவும் வளமையாகவும் இருக்கலாம் அல்லவா?

அதேபோல், நெல்லிக்காய், மாதுளை, பப்பாளி, அன்னாசி, கொய்யா போன்ற பழங்களையும், தாமரைப் பூ, செம்பருத்திப் பூ , ஆவாரம் பூ போன்ற பூக்களையும், பொன்னாங்கண்ணி,, கரிசலாங்கண்ணி, தூதுவளை, முடக்கற்றான், மணத்தக்காளி போன்ற கீரைகளையும், மிளகு, பூண்டு, வெங்காயம், சீரகம், வெந்தயம் போன்றவற்றையும் நாள்தோறும் உணவில் சேர்த்தால் மருத்துவமனைக்கே செல்லத் தேவையில்லை. உடல், வலுவாகவும் வளமாகவும் இருக்கும்.

செயற்கை உணவுகள் எதையும் தீண்டாது, நமது பாரம்பரிய உணவுகளை உண்டால் உடலும் உள்ளமும் சிறப்பாக இருக்கும். அறிவும் பளிச்சிடும்.

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்