புதன், 17 ஜனவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
திறமை திறமை உயர்ந்த பனைமரம். அதன் ஓலை நுனியில் கூடுகட்டிக் கொண்டிருந்தது ஒரு தூக்கணாங்குருவி. தன் சின்ன அலகால் ஓலையின் ஓரத்திலிருந்து இழை எடுத்து பி... மேலும்
சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி உடுமலைப்பேட்டை மாணவரின் கண்டுபிடிப்பு! உடுமலைப்பேட்டையைச் சார்ந்த மாணவர் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி சிந்திப... மேலும்
அறிஞர்களின் வாழ்வில்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சட்டத்தைப் பணிய வைத்த சார்லஸ் பிராட்லா

பகுத்தறிந்து சிந்தித்த தனது கொள்கையிலிருந்து மாறாமல் அரசியல் சட்டத்துறை வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர் சார்லஸ் பிராட்லா.

இங்கிலாந்தின் நார்த்தாம்டன் பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். இங்கிலாந்தின் சட்ட விதிகளின்படி, பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு, கடவுளே என்னைக் காப்பாற்று என்று பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும்.

ஆனால், தான் ஒரு நாத்திகர் என பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு, கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுக்க மறுத்தார் பிராட்லா. இதனால், பிராட்லா நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று இங்கிலாந்து அரசு அறிவித்தது. பிராட்லா நாடாளுமன்றத்திற்கு மக்களால் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பதால், மக்கள் சபையில் அமர வேண்டும் என வாதிட்டார்.

அரசாங்கம் ஒத்துக் கொள்ளாததால் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது முறையாக பிராட்லாவே மீண்டும் வெற்றி பெற்றார். இம்முறையும் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுக்க மறுத்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவராக மீண்டும் அறிவிக்கப்பட்டார்.

அடுத்து தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலிலும் பிராட்லாவே வெற்றி வாகை சூடினார். நாத்திகர் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் மக்கள் அவரையே தேர்ந்தெடுத் தனர். அவர் மனிதாபிமானியாக இருந்து மக்களுக்குச் செய்த - செய்ய இருக்கின்ற சேவையைத்தான் மக்கள் பார்த்தனர்; பிராட்லாவை வெற்றி பெறச் செய்தனர்.

உலகில் நடைபெறாத மக்களின் தீர்ப்பினைக் கண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கிளாட்ஸ்டோன் செய்வதறியாது திகைத்தார். இம்முறையும் பைபிள் இல்லாமல் பதவிப் பிரமாணம் எடுத்தார்.

நாடாளுமன்ற விதிகளை உடைத்தெறிந்தார் என்ற குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றார். பிராட்லாவைச் சிறையில் அடைத்ததற்காக மக்கள் கிளர்ச்சி செய்தனர். 36 மணி நேரம் சிறைவாசத்தை அனுபவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைபிளை வைத்துக் கொண்டு கடவுளின் பெயரால் எடுத்த உறுதிமொழியினை, உளமாற என்று மாற்றி சட்டத்தைத் திருத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினராக அவையில் அமர்ந்தார் பிராட்லா.

இதனைப் பின்பற்றி இந்திய அரசியல் சட்டமும் திருத்தி அமைக்கப்பட்டது. பாரதப் பிரதமர் நேரு உளமாற என்று உறுதிமொழி எடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தி.மு.க. அமைச்சரவையும் இந்த உரிமையினடிப்படையில் பதவிப் பிரமாணம் எடுத்தது நினைவுகூரத்தக்கது.


காலம் உள்ளவரை நிலைபெற்றிருப்பன நூல்களே

மு.வரதராசனார் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவர் எழுதிய நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. தங்கள் பேராசிரியர் பரிசுபெற்றதை அறிந்த மாணவர்கள் பாராட்டி, வாழ்த்தி மகிழ்ந்தனர். பின்பு, பாராட்டு விழா நடத்த இருப்பதாகத் தெரிவித்து அனுமதி கேட்டனர்.

அதற்கு மு.வ., இத்தனைபேர் வந்து பாராட்டுகிறீர்களே அது போதாதா என்றார். மாணவர்கள் வலியுறுத் தவே, விழா நடத்த எவ்வளவு நேரமாகும் எனக் கேட்டார். 1லுமணி நேரம் என்றனர் மாணவர்கள்.

நீங்கள் கேட்கும் 1லு மணி நேரத்தில் எனது நூலுக்கு 32 பக்கங்கள் எழுதிவிடுவேன் என்று கூறியதோடு, நமது பேச்செல்லாம் காற்றோடு கரைந்துவிடும்; ஆனால், நமது கருத்துகளை நூலாக்கினால் அது காலம் உள்ளவரை நிலை பெற்றிருக்கும் என்று அறிவுரைகூறி மாணவர்களை அனுப்பி வைத்தார்.

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017