Home இரண்டாம் உலகப்போர்
திங்கள், 19 பிப்ரவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
மறையாத உண்மைகள்! மறையாத உண்மைகள்! ¨             இல்லாத ஒன்றை இருப்பதாய்ப் பேசும் மாயைகளுக்கு இங்கே பஞ்சமில்லை!   பகுத்தறிவை மறந்து பட்டம் பெறினும் படித்தவன் என்பதில் அர... மேலும்
அரசியின் கோபம் அரசியின் கோபம் --கலவை சண்முகம் ஏனிந்த அரசி இந்தக் குதி குதிக்கிறாள்? நான் என்னவோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதுபோல. அரண்மனையில்தான் குதித்தாள் என்றால் ... மேலும்
மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து கணினியும் இணையமும் அவசியம்தான் -                     அதுவே கதியென்று கிடக்காதே தினம்தினம்தான்! அலைபேசி பயன்பாடும் முக்கியம்தான் -       ... மேலும்
மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்? மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்? பொதுவாக மழைக்காலங்களில் மெட்ராஸ்-_ஐ என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கண்நோய் பரவலாகத் தொற்ற ஆரம்பிக்கும். அப்போது கண் உறுத்தல் அதிகம் இருக்கும்... மேலும்
இறந்தவர் உயிர் உடலைவிட்டு  வெளியே போகிறது? இறந்தவர் உயிர் உடலைவிட்டு வெளியே போகிறது?   இறந்தவரின் உயிர் அவர் உடலைவிட்டு வெளியே செல்கிறது என்று பலரும் எண்ணுகின்றனர். இது அறியாமை மட்டுமல்ல, அசல் தவறும் ஆகும். உயிர் என்பது உ... மேலும்
இரண்டாம் உலகப்போர்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

மக்கள் முதல் உலகப் போரைப் போர்களை முடிவுக்குக் கொண்டுவரும் போர் என அழைத்தனர். ஆனால், முதல் உலக யுத்தம் முடிந்து 1928 _ இல் வர்சேர்ஸ் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி யுத்தத்தில் வெற்றிப்பெற்ற நேச நாடுகளுக்கு ஜெர்மனி பெரிய அளவில் யுத்த இழப்பிற்காக ஈடுசெய்ய வேண்டியதாயிற்று. ஜெர்மனியின் வளம் குன்றியது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிற்று. வறுமையும் பெருகிற்று. எனவே தொழிலாளிகளும், குடியானவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தேசிய சோஷலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தேசிய சோஷலிஸ்ட் கட்சியின் (Nazi) தலைவர் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler), 1938 - இல் ஜெர்மனியின் சர்வாதிகாரியானார். அவர் 1939, செம்டம்பர் 1-இல் போலந்துமீது படையெடுத்தார். செப்டம்பர் 3 - இல் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிமீது படையெடுத்தன. 1940, ஜூன் மாதத்திற்குள்ளாக ஜெர்மனி பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகளைத் தன் ஆளுகைக்குள் உட்படுத்தியது. இந்த இரண்டாம் உலகப் போர், உலகம் முழுவதும் நடந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காடுகளிலும், பசுபிக் தீவுக் கூட்டங்களிலும், வட ஆப்ரிக்காவின் பாலைவனத்திலும், கடல் பகுதிகளிலும் போர் நிகழ்ந்தது. அய்ரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. கட்டடங்கள் அழிந்தன. மக்கள் கொல்லப்பட்டனர். நேச நாடுகளின் படைகள், ஜூன் 6, 1944 - இல் பிரான்சின் நார்மன் டி துறைமுகத்தில் வந்து இறங்கின. 1945, ஏப்ரலில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். 1941, டிசம்பரில் போரில் ஈடுபட்ட ஜப்பான், இறுதிவரை போரிட்டது.

1945, ஆகஸ்ட் 6 - இல் ஹிரோஷிமா என்ற ஜப்பானிய நகரத்தின் மீது அமெரிக்கா முதல் அணுகுண்டைப் போட்டது. இதனால் 78 ஆயிரத்து 150 பேர் மறைந்தனர். ஆகஸ்ட் 9-இல் நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. ஜப்பானியர் நிபந்தனையின்றி அடிபணிய முன் வந்தனர். ஆறு வருடங்களாக நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் 1945 , செப்டம்பர் 2_இல் முடிவுற்றது.

போரில் இழப்புகள் இரண்டாம் உலகப் போரில் 72 மில்லியன் மக்கள் மடிந்தனர்.

அய்ரோப்பாவின் பெரும்பாலான இடங்களை நாசம் செய்தது. புதிய போர் ஆயுதங்கள், அணுகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். 1945, அக்டோபர் 24-இல் அய்க்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது.

- மு.நீ.சிவராசன்

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்