Home தெளிந்த மனம்
புதன், 19 டிசம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் லண்டனில்  10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே சுக்குநூறாக கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் உள்ள ப... மேலும்
கின்னஸ் கின்னஸ் சாதனையின் அடையாளம்! இயற்கையின் தோற்றத்தில் மனித சமூகம் என்றைக்குமே வித்தியாசமானதுதான். புதுமைகள் செய்வதில் மனித சமூகத்திற்கு இருக்கும் ஆர... மேலும்
வாழவைக்கும் வாழ்வியல் மாலை வாழவைக்கும் வாழ்வியல் மாலை ஊக்கம் பயிரினை வளஞ்செயும் பயன்தரு நிலமென உயிரினைக் கல்வியால் ஊக்கலாம் ஓர்கவே! அறிவொளி அறிவொளி நெறியினால் ஆளுமை அடையலாம் முறிவொளி மர... மேலும்
கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) படக்கதை எழுத்து: உடுமலை படங்கள்: லாங் வாக் டூ ஃபீரீடம் படத்திலிருந்து… மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மன்னிச்சூ… மன்னிச்சூ… நவம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 9 முதல் பத்தியில் அரியனை என்பது அரியணை என்றும், 12ஆம் பக்கத்தில் 2ஆம் வரியில் உறக்கத்திலிந்து என்... மேலும்
தெளிந்த மனம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அதிகாலை நேரம். பூஞ்சோலையில் பலவகை வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்போர் மனதைக் கவர்ந்து கொண்டிருந்தன. வண்டுகள் ரீங்காரமிட்டுப் பறந்து வந்து தேனருந்தி மகிழ்ந்து சென்றன.

வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டமும் தேனருந்த வந்து பூக்களின்மீது அமர்ந்தன. ஒரே ஒரு வண்ணத்துப் பூச்சி மட்டும் சோலையைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வந்தது.

இதனைப் பார்த்த ரோஜா மலர் ஒன்று, வண்ணத்துப் பூச்சி தன்னருகில் வந்தபோது, வண்ணத்துப் பூச்சியே! ஏன் இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறாய்? உனக்குப் பசிக்கவில்லையா அல்லது தேனருந்த விருப்பமில்லையா? அல்லது இச்சோலையில் உள்ள பூக்களில் எந்தப் பூவையும் உனக்குப் பிடிக்கவில்லையா என்று கேட்டது.

இதனைக் கேட்ட வண்ணத்துப் பூச்சி, ரோஜா மலரே, எனக்குப் பசி இருப்பதால்தான் இந்தப் பூஞ்சோலையைத் தேடி வந்தேன் என்றது.

பின் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறாயாம் என்றது ரோஜா மலர். இச்சோலையில் பூத்துக் குலுங்கும் பூக்களுள் எந்தப் பூவின்மீது அமர்ந்து தேனருந்தலாம் என யோசித்துப் பறந்து கொண்டிருக்கிறேன் என்றது வண்ணத்துப் பூச்சி.

இவ்வளவுதானா உனது அறிவாற்றல்? பசிக்குத் தேனருந்த பூக்களைத் தேர்வு செய்து அமர்வதில் உனக்கு இவ்வளவு குழப்பம் என்றால் வாழ்க்கையின் பிற பிரச்சினைகளை நீ எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவாய்? என்று கேட்டது ரோஜா மலர்.

அதற்கு வண்ணத்துப் பூச்சி, நீ உடனடியாக உனக்கு ஏற்படும் பிரச்சினைகளில் முடிவு எடுத்துவிடுவாயாக்கும்? அடுத்தவருக்கு அறிவுரை சொல்வது எளிது. தனக்கென்று வரும்போதுதானே குழப்பமாக இருக்கும் என்று கூறியது. ரோஜா மலர் புன்னகையுடன், மாலை நேரம் நீ பூஞ்சோலைக்கு வா. அப்போது என்னருகிலிருந்து நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதனைச் சமாளிக்கும் முறையினையும் தெரிந்துவிட்டுப் பிறகு பேசு என்றது.
மாலை நேரமும் வந்தது. ரோஜா மலரின் அருகில் பெரிய வண்டு ஒன்று தேனருந்தப் பறந்து வந்தது. அப்போது அடித்த காற்றுக்கு அசைந்தது ரோஜா செடி. மலரின் கீழே தண்டிலிருந்த முள் வண்டின்மீது குத்தியது. வேறு பூவில் சென்று அமர்ந்தது பெரிய வண்டு.

மாலை நேரம் என்பதால் காற்றும் நன்றாக வீசிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் இன்னொரு வண்டு வந்தது. காற்றின் அசைவுகளில் தானும் சிறிது வளைந்து கொடுத்தது ரோஜா செடி. வண்டு ஏமாற்றம் அடைந்தது. இப்படியே அடுத்தடுத்து வண்டு முயற்சி செய்யும் போதெல்லாம் வளைந்து கொடுத்து வண்டிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ரோஜா மலர்.

அடுத்த பூவிற்குத் தாவியது வண்டு.

ரோஜா மலரின் புத்திசாலித்தனத்தை - சாதுரியத்தைப் பாராட்டியது வண்ணத்துப் பூச்சி. அப்போது ரோஜா மலர், தான் குழப்பம் இல்லாமல் இருந்ததால்தான் வண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது. குழப்பத்தில் இருந்திருந்தால், என்னால் என்னைக் காப்பாற்றியிருக்க முடியுமா? எனவே, பலவற்றை நினைத்து மனதைப் போட்டுக் குழப்பாமல், விரைவில் தெளிவான முடிவினை எடுக்கப் பழக வேண்டும். மேலும், இந்த வண்டிடமும் ஒரு குறை உள்ளது என்றது. வண்டிடம் என்ன குறையைக் கண்டாய் என்றது வண்ணத்துப் பூச்சி.

வண்டிடம் விடாமுயற்சி இல்லை என்றது ரோஜா மலர். எப்படி என்று கேட்டது வண்ணத்துப் பூச்சி. மூன்று முறை முயற்சி செய்த வண்டு மீண்டும் ஓரிருமுறை முயற்சி செய்திருக்கலாம். அப்போது, காற்றின் வேகம் குறைந்திருந்தால் என்னால் வளைந்து கொடுத்து என்னைக் காப்பாற்றியிருக்க முடியாது.

ஒவ்வொரு உயிரினத்திற்கும், வரும் ஆபத்திலிருந்து தப்பித்து வெற்றிபெற கண்டிப்பாக ஒரு வழி இருக்கும். நாம்தான் ஆராய்ந்து தேடி தடைகளிலிருந்தும் _ துன்பங்களிலிருந்தும் மீள வேண்டும் என்றது.

மனிதர்களாகிய நாமும் நம்மிடம் உள்ள குழப்பத்தன்மை, முயற்சியின்மை போன்ற குறைகளைச் சிந்தித்து - ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி மீது வெற்றி வந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

- செல்வா

Share
 

முந்தைய மாத இதழ்

அன்பு அன்பு அன்பு என்பது அனைவரின் மனதிலும் அடியினில் சுரந்திடல் தெளிவாகும்! இன்பம் கனிவுடன் இரக்கமும் கருணையும் இணைந்தலை* புரண்டது வெளியாகும்!   ... மேலும்
பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெயருக்குப் பொருந்தச் சீரோடு அறியா மையினை வேரோடு அகற்றிடப் பிறந்த மாநாடு! உலகம் இதுவரை காணாத ஒப்பற்ற முதலாம... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் -சரவணா இராஜேந்திரன் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி என்று ஒருதரப... மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் சிறிய இருக்கை தேவையான பொருட்கள்: 1. 3ஜ்3 செ.மீ. அளவுள்ள தடிமனான வண்ண அட்டை. 2. 12 தீக்குச்சிகள், 3. பெவிகால் பசை. செய்முறை 1.     முதல... மேலும்