Home விடுமுறையை இனிமையாக்க....
வெள்ளி, 19 அக்டோபர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அவர் வழி செல்வோம்! சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்   வ... மேலும்
சின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்
வடகிழக்குப் பருவமழை வடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்
விடுமுறையை இனிமையாக்க....
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கோடையைக் குளிவிக்க

பிஞ்சுகளே... நலமா?

தேர்வுகள் முடிந்து ஓய்வில் இருக்கிறீர்கள் தானே. ஓய்வு தேவைதான்.ஆனால், அது வெட்டி அரட்டையாக இருக்கக்கூடாது அல்லவா. ஓய்வு என்பதற்கு உலகில் யாரும் சொல்லாத புதுக் கருத்து ஒன்றை நம் பெரியார் தாத்தா சொன்னார்.அது என்ன தெரியுமா? ஓய்வு என்பது இன்னொரு வேலையைச் செய்வது என்று பெரியார் தாத்தா சொன்னார்.அதாவது நாம் வழக்கமாகப் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு பயனுள்ள வேலைகளைச் செய்வது என்பது அதற்குப் பொருள். சரி அப்படிப் பயனுள்ள வகையில் விடுமுறையைக் கழிக்க சில ஆலோசனைகளை பெரியார் பிஞ்சு வழங்குகிறது. கேளுங்கள். பெரும்பாலும் நகரங்களில் இருப்பவர்கள் நமது பெற்றோர்கள் வாழ்ந்த சொந்த கிராமங்களுக்குச் சென்றதில்லை.அந்தக் குறையைப்போக்க இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்லலாம். கிராமங்களில் என்ன இருக்கிறது? அங்கு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

கிராமங்கள், அங்கு நடைபெறும் விவசாயம் இல்லையெனில் நாம் உயிர் வாழத் தேவையானவைகளுள் முக்கிய இடம்பெறும் உணவினை எப்படிப் பெறமுடியும்? உலகிற்கு அச்சாணியாக விளங்கும் உழவுத்தொழிலை - கிராமங்களை - கிராம மக்களைச் சென்று பார்த்து வரலாமே! மேலும், அந்த ஊரின் அருகிலுள்ள அணைக்கட்டு, ஆறு, பார்க்க வேண்டிய இடங்கள் வேறு ஏதாவது இருப்பின் சென்று பார்த்து வரலாம்.

 

 

கிராமங்களில் வசிப்பவர்கள் நகரங்களில் இருக்கும் உறவினர்கள் வீட்டிற்குச் செல்லலாம். சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வருவோர் - வசிப்போர், கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், வள்ளுவர் கோட்டம், அருங்காட்சியகம் (மியூசியம்), மிருகக்காட்சி சாலை (zoo), கிண்டியிலுள்ள சிறுவர் பூங்கா, செம்மொழிப் பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று பார்த்து வரலாம்.

படிப்பிற்கு இடையூறாக இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்திருப்பீர்கள். தவிர்த்த தொலைக்காட்சியில், டிஸ்கவரி, நேசனல் ஜியாகிரபி, அனிமல் பிளானெட், செய்தி அலைவரிசைகளைப் பார்த்து பொது அறிவினைக் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளலாம்.

கோடை வெயிலைச் சமாளித்து உடலைக் கொஞ்சமாவது குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? தாகத்திற்கு - உடல் சூட்டைத் தணிப்பதற்குப் பெரும்பாலோர் பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் குளிர்பானங்களையே விரும்பிப் பருகுகின்றனர். இவற்றில் கலந்துள்ள வேதிப் பொருள்கள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை; நச்சுத்தன்மை உடையவை. எனவே, முடிந்தவரை இவற்றைப் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்களைப் பருகுவதற்குப் பதிலாக, வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் குறைக்க நிறைய தண்ணீர் குடிக்கலாம். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, வியர்வையாக வெளியேற்றும் ஆற்றலும் தண்ணீருக்கு உள்ளதே. குளிர்சாதனப் பெட்டியில் (fridge) வைத்த தண்ணீரைப் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். இது, உடலிற்கு மேலும் வெப்பத்தையே தரக்கூடியது. எனவே, மண்பானைகளில் ஊற்றிவைத்த தண்ணீரைப் பருகலாம் அல்லது சாதாரணமான தண்ணீரையே (தண்மை+நீர் = குளிர்ச்சி பொருந்தியது நீர்) பருகலாம்.

இயற்கை நமக்கு வழங்கியுள்ள இளநீர், தர்பூசணி, கிர்ணிப் பழம், வெள்ளரிக்காய், நுங்கு போன்றவற்றைச் சாப்பிட்டு, வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். தயிர், மோர் ஆகியவற்றையும் அதிகம் சேர்த்து உடலைக் குளுமையாக்கலாம்.

விடுமுறைக்கு எங்குமே செல்லவில்லை, வீட்டில்தான் இருப்போம், என்ன செய்வது என்று நினைப்பவர்கள், அருகிலுள்ள நூலகங்களுக்குச் சென்று வரலாம். புத்தகங்களைவிடச் சிறந்த நண்பர்கள் - வழிகாட்டுபவர்கள் வேறு யாரும் இல்லை. எனவே, அறிவுசார் புத்தகங்களைப் படித்து, புத்துலகம் படைக்க முன்வாருங்கள்!

 

Share
 

முந்தைய மாத இதழ்

தொடர் வண்டி ! தொடர் வண்டி !   குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி   நீண்டு வளைந்து பாம்பை... மேலும்
செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை   அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த  பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்  சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்   மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்
தங்க மங்கை ஹிமாதாஸ் தங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்