ஞாயிறு, 26 பிப்ரவரி 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பேசாதன பேசினால் 5 பேசாதன பேசினால் 5 “நிகரன்!... நிகரன்!’’ என அம்மா கூப்பிட்டதைக் கேட்டதும் தன் நண்பர்களோடு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிகரன் வீட்டிற்குள் ஓடோடி வந்தான். ... மேலும்
நலமான வாழ்விற்கு... நலமான வாழ்விற்கு... நலமான வாழ்விற்கு... -சிகரம் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் 15 வயது வரை குழந்தையாகவே, எண்ணி பெற்றோர் பிள்ளைகளை வளர்த்தனர். பிள்ளைகளுக்கு எது ... மேலும்
உலகம் சுற்றி - 6 உலகம் சுற்றி - 6 அனைவரும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டை இனிமையாகக் கொண்டாடினீர்களா? டிஸ்னி உலகத்தின் அய்ந்து பிரிவுகளில் முதல் பிரிவின் கடைசி இடத்தைப் பார்க... மேலும்
யார் என்று தெரிகிறதா? ஒரிஜினல் ‘தங்கல்’ நாயகி - சரா யார் என்று தெரிகிறதா? ஒரிஜினல் ‘தங்கல்’ நாயகி - சரா இரண்டு மல்யுத்த வீராங்கனைகளின் தந்தையாக இந்தி நடிகர் அமீர் கான் நடித்த ‘தங்கல்’ என்ற இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட படத்தைப் பார்த... மேலும்
பிரபஞ்ச ரகசியம் 43 பிரபஞ்ச ரகசியம் 43 இன்று நமது கைகளில் இருக்கும் நவீன அலைபேசி, பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவை இரண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு இல்லை.... மேலும்
17 வயது மாணவர் கட்டிய மரப் பாலம் 17 வயது மாணவர் கட்டிய மரப் பாலம் நாம் தினமும் மகிழ்ச்சியாக பேருந்து,ஆட்டோ போன்ற சிற்றுந்துகளில் பள்ளிக்குச் செல்கின்றோம். ஆனால் மும்பை சாதே நகர் என்ற சேரியிலிருந்து பிஞ்சு... மேலும்
நாள்குறிப்பை நூலாக்கி வென்ற பிஞ்சுகள்
| Print |  E-mail

யாரென்று தெரிகிறதா?

நாள்குறிப்பை நூலாக்கி வென்ற பிஞ்சுகள்

-சரா

நான் அன்றாடம் தேவையில்லாதவை என்று ஒதுக்கிவிடும் ஒவ்வொரு நிகழ்வும் எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பில் பயிலும் நான்கு பேர் உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

அமெரிக்காவில் சிறுவர்களை எழுத்தாளர்களாக ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகளின் படைப்பாற்றலை வெளியிட்டு, அதில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “அமெரிக்காவின் இளம் எழுத்தாளர் விருது” வழங்குவார்கள்.

கின்லே பெம்பிரி (Kinleigh Bembry), ஜாக்சன் காம்பஸ் (Jackson Combass), பெல்லீ டிரிக்கர்ஸ் (Bailey Driggers), மற்றும் எமிலி பிக்காக் (Emily Peacock)  என்ற இந்த நான்கு பேரும் அமெரிக்காவில் உள்ள வடக்கு ஆமில்டன் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் தங்களின் நாட்குறிப்பில் அன்றாடம் நடக்கும் சிறிய நிகழ்ச்சிகளைக்கூட எழுதிவைக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

தங்கள் நாட்குறிப்பை புத்தகமாக வெளியிட விருப்பப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தனர். பள்ளி நிர்வாகமும் அதை நூலாக தொகுத்திருந்தது, இந்த நிலையில் அமெரிக்க இளம் எழுத்தாளர் விருதிற்காக இவர்களது நாட்குறிப்பு நூலும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நூலை அனுப்பும்போதே பெல்லீயின் பெற்றோர், நாட்குறிப்பு நூலின் முக்கிய பக்கங்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தங்களது வலைதளத்தில் பதிவேற்றி கருத்து தெரிவிக்கும்படி அனுப்பி இருந்தனர். இதற்கு உலகெங்கிலுமிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான கருத்துப் பரிமாற்றங்களும், ஆலோசனைகளும், பாராட்டுகளும் வந்திருந்தன.

அதேநேரத்தில் அமெரிக்கக் குழந்தை எழுத்தாளர் தேர்விற்கான குழுவினர் இவர்களின் நாட்குறிப்பையே இந்த ஆண்டின் சிறந்த நூலாக தேர்ந்தெடுத்து நூலாசிரியர்களான நால்வருக்கும் அமெரிக்க இளம் எழுத்தாளர்கள் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
எம்லி பிக்காக், கோடை விடுமுறையின்போது தனது நாட்குறிப்பில்  எழுதிய சிறு கவிதை ஒன்றின் தமிழாக்கம் இதோ:

“இந்த உலகை நான் பார்க்கிறேன்.

இந்த உலகம் என்னைப் பார்க்கிறது.

எனது குடும்பம் இந்த உலகம்,
இந்த உலகமே ஒரு குடும்பம்.

அதில் நானும் ஒருவர் என்பதில்,
எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.”

ஜான்சன் காம்பாஸ் கடைவீதியில், தான் கண்டதாக எழுதியதாவது,

“அதிக அளவு ரூபாயைக் கொடுத்தும் பெரியவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை, எனது தங்கை கையில் ஒரு செண்ட் (ஒரு ரூபாய்) கொடுத்தேன். அவளின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை என்னால் அளவிட முடியவில்லை.”

“இந்த விருது எங்களுக்குக் கிடைத்ததுபற்றிக் கூறியவுடன் எங்களால் நம்பவே முடியவில்லை. எங்களது அன்றாட நாட்குறிப்பு நூல் எங்களுக்கு விருது கொடுக்கும் அளவிற்கு அனைவருக்கும் பிடித்துள்ளதா” என்று வியப்புடன் கேட்டு வருகின்றனர்.

அப்புறமென்ன-...? புதிய ஆண்டு தொடங்குகிறது. வீட்டில் பெற்றோரிடம் கேட்டால் புதிய நாள்குறிப்பு கிடைக்கும். நீங்களும் எழுத ஆரம்பிக்கலாமே! அப்போ பரிசு யார் தருவான்னு கேட்கிறீங்களா?

“பெரியார் பிஞ்சு” தரும்.

விளையாட்டல்ல... போட்டி! சிறந்த நாள்குறிப்புப் பதிவுகளுக்கு இவ்வாண்டு (2017) இறுதியில் பரிசு உண்டூஊஊஊஊ! (போட்டி நடைமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.)

Share