ஞாயிறு, 22 அக்டோபர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உணவைக் காப்போம்! உணவைக் காப்போம்! தட்டில் வைத்த உணவினையே தரையில் சிந்திக் களையாதே; கொட்டிப் பரப்பி உண்ணாமல் குறைவாய் உண்ணப் பழகிடுக:   கிட்டும் உணவை ஏழையர்க்குக் கேட்... மேலும்
செய்து அசத்தலாம் செய்து அசத்தலாம் அழகிய அன்னம் தேவைப்படும் பொருள்கள்: 1.            சதுர வடிவ சிறிது தடிமனான வெளிர் நீல பேப்பர் ஒன்று. 2.            கருப்பு நிற ஸ்கெட்ச்... மேலும்
குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல் குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல் - உமாநாத் செல்வன் நீண்ட பயணங்கள் சாத்தியமில்லாத, உடனடியாக வெளியூர்களுக்குச் சென்று வரமுடியாத இந்த ஒருவாரம் - பத்து நாள் வரையிலான விடுமுறை... மேலும்
வாழையின் வாய்மொழி வாழையின் வாய்மொழி பேசாதன பேசினால் - 13வாழையின் வாய்மொழி- மு.கலைவாணன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் சுட்டிப் பெண் இனியா வீட்டில் தேர்வுக்காகப் படி... மேலும்
சிறு கை அளாவிய ஜுவல் சிறு கை அளாவிய ஜுவல் சின்னக் குழந்தைகளின் கிறுக்கல்களைக் கண்டிப்போர் உண்டு... கழுத்திலேயே அணிவோர் உண்டா? உண்டு என்கிறது அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம் சார்ல... மேலும்
பிஞ்சு மனம் பிஞ்சு மனம் தங்கம்மா பாட்டியை அந்த பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் நன்கு தெரியும். பாட்டி இந்த பள்ளியில் வேலை செய்யவில்லை. ஆனால், தினமும் ம... மேலும்
இந்தியா மட்டும் தான் நல்ல நாடா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஓர் இரவு நேர உணவுக்குப் பின் நடந்த உரையாடல்

நிறைமொழி: அப்பா, உலகத்திலேயே இந்தியர்கள் தானே சிறந்தவங்க? இந்தியாதானே பெருசு?

நான்: ஏம்மா, யாரு சொன்னாங்க?

நிறைமொழி: நம்மதானே இந்தியா, அதுனால நம்மதானே பெருசு? பாகிஸ்தான், சீனா, அமெரிக்காகாரங்க எல்லாம் கெட்டவங்க இல்லையா?

நான்: அப்படி யாரும்மா சொன்னாங்க?

நிறைமொழி: நேஹா சொன்னா, டீச்சர் எல்லாருமே சொன்னாங்க....

நான்: அப்படியெல்லாம் இல்லம்மா, எல்லா நாட்லயும் நம்மள மாதிரி குட்டிப் பிள்ளைங்க, அப்பா, அம்மா, அய்யா, அப்பத்தான்னு மனுசங்க தான் நிறைஞ்சு இருக்கிறாங்க, முக்கால்வாசிப் பேர் வேலைக்குப் போறாங்க, உழைக்கிறாங்க, சாப்பிடுறாங்க, யாரும், யாரையும் விடப் பெரியவங்க இல்லம்மா! பாகிஸ்தானை விட இந்தியா பெருசும் இல்ல, இந்தியாவை விடப் பாகிஸ்தான் பெருசும் இல்ல....

நிறைமொழி: ஒலிம்பிக்ஸ்ல மட்டும் இந்தியா ஜெயிக்கும்போது நீங்க கை தட்டுனீங்க?

நான்: உசைன் போல்ட் ஜெயிச்சப்பக் கூட நான் கைதட்டினேனே, அந்த ஸ்பானிஷ் அக்கா சிந்துவுக்கு எதிரா நல்ல ஷாட் அடிச்சப்பக் கூட அப்பா கை தட்டினேனே? திறமையோடு விளையாடுற எல்லாருக்கும் அப்பா கை தட்டுவேன், அதேமாதிரி நீயும் செய்யணும்.

விளையாட்டு மனுசங்கள நாடுகளையெல்லாம் தாண்டி ஒரே இடத்துல கூடி இருக்கச் செய்யுறது, ஜெயிக்கிறப்ப சேர்ந்து கொண்டாடுறது, தோக்குறப்ப தட்டிக் கொடுத்து இன்னும் தீவிரமா முயற்சி செய்யக் கத்துக் கொடுக்குறதும்மா... எந்த நாடும், எந்த மாநிலமும், எந்த மனுஷனும், எந்த மொழிக்காரனும் பெரியவனும் கிடையாது, சின்னவனும் கிடையாதும்மா...

மகள் அநேகமாக இந்திய தேசத்தின் பொதுப்புத்தியில் திணிக்கப்படும் நம்பிக்கைகளை உள்வாங்கும் வயதில் இருக்கிறாள். இனி கன்னட மொழி உயர்ந்தது, இந்தி உயர்ந்தது, தமிழ் உயர்ந்தது, அய்ரோப்பியன் அறிவாளி, வெள்ளைக்காரன் நல்லவன், இந்தியா நல்லது, பாகிஸ்தான் கெட்டது, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், இந்துக்கள் புனிதமானவர்கள், ஆண்கள் பாதுகாவலர்கள், பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்,

மோடி உலகின் தலைசிறந்த உத்தமர், சைவம் ஒழுக்கம், அசைவம் குற்றம் என்றெல்லாம் சமூகத்தில் பலரும் புரிதலின்றி சொல்லிக் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கைகள் தேசபக்தியின் பெயரில் எல்லா இடங்களிலும் ஒரு நுட்பமான கண்ணுக்குத் தெரியாத பார்ப்பனீய ஊசியின் மூலம் ஏற்றப்படும். அந்த விஷம் இந்த தேசமெங்கும் வெற்றிகரமாகச் செலுத்தப்-பட்டிருக்கிறது. அதைப் பற்றி எதுவும் தெரியாமலேயே மக்களும் திரும்பச் சொல்கிறார்கள். எதிர்ப்பவர்களை ஏளனமாகப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.

திரும்ப ஒருமுறை மகளைப் பார்த்து இப்படிச் சொன்னேன்,

நான்: பூமி மனுஷங்களுக்கு மட்டுமில்லம்மா! எல்லா உயிர்களுக்கும் அம்மா மாதிரி. இங்கே யாரும் யாருக்கும் பெரியவங்களும் இல்ல, சின்னவங்களும் இல்ல, இனிமே யாராவது, டீச்சர் கூட - இந்தியா பெரியது, பாகிஸ்தான் சின்னதுன்னு சொன்னா, அப்பா சொன்னது மாதிரியே தைரியமா சொல்லு!

"அங்கேயும் நம்மள மாதிரிக் குட்டிப் பிள்ளைங்க, அப்பா, அம்மா, அய்யா, அப்பத்தா எல்லாரும் இருக்குற வீடும், பள்ளிக் கூடங்களும் தானே இருக்குனு."

பக்கத்தில் வந்து அணைத்துக் கொண்டு முத்தம் கொடுத்த மகளுக்கு நான் சொன்னவற்றில் கால்வாசி புரிந்திருக்கும், முழுவதும் புரிய வெகுநாட்கள் ஆகாது.

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017