ஞாயிறு, 26 பிப்ரவரி 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பேசாதன பேசினால் 5 பேசாதன பேசினால் 5 “நிகரன்!... நிகரன்!’’ என அம்மா கூப்பிட்டதைக் கேட்டதும் தன் நண்பர்களோடு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிகரன் வீட்டிற்குள் ஓடோடி வந்தான். ... மேலும்
நலமான வாழ்விற்கு... நலமான வாழ்விற்கு... நலமான வாழ்விற்கு... -சிகரம் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் 15 வயது வரை குழந்தையாகவே, எண்ணி பெற்றோர் பிள்ளைகளை வளர்த்தனர். பிள்ளைகளுக்கு எது ... மேலும்
உலகம் சுற்றி - 6 உலகம் சுற்றி - 6 அனைவரும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டை இனிமையாகக் கொண்டாடினீர்களா? டிஸ்னி உலகத்தின் அய்ந்து பிரிவுகளில் முதல் பிரிவின் கடைசி இடத்தைப் பார்க... மேலும்
யார் என்று தெரிகிறதா? ஒரிஜினல் ‘தங்கல்’ நாயகி - சரா யார் என்று தெரிகிறதா? ஒரிஜினல் ‘தங்கல்’ நாயகி - சரா இரண்டு மல்யுத்த வீராங்கனைகளின் தந்தையாக இந்தி நடிகர் அமீர் கான் நடித்த ‘தங்கல்’ என்ற இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட படத்தைப் பார்த... மேலும்
பிரபஞ்ச ரகசியம் 43 பிரபஞ்ச ரகசியம் 43 இன்று நமது கைகளில் இருக்கும் நவீன அலைபேசி, பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவை இரண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு இல்லை.... மேலும்
17 வயது மாணவர் கட்டிய மரப் பாலம் 17 வயது மாணவர் கட்டிய மரப் பாலம் நாம் தினமும் மகிழ்ச்சியாக பேருந்து,ஆட்டோ போன்ற சிற்றுந்துகளில் பள்ளிக்குச் செல்கின்றோம். ஆனால் மும்பை சாதே நகர் என்ற சேரியிலிருந்து பிஞ்சு... மேலும்
கதை கேளு...கதை கேளு...
| Print |  E-mail

கறுப்பழகி என்ற அந்தக் குதிரை தன் நண்பன் கங்கனுக்காகக் காத்திருந்தது. கறுப்பழகியின் நிறம் கறுப்பு என்று சொல்லத் தேவையில்லை. கறுப்பழகியின் ஒரே வேலை காலை வீட்டில் இருந்து கங்கனை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மீண்டும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும்.

கேட்க எளிமையாக இருக்கலாம் ஆனால் கங்கனின் வீடு இருப்பது ஒரு மலையில். அதுவும் அது ஒரு அடர்ந்த காடு. சரியான பாதை இருக்காது. பெரியவர்கள் கொஞ்சம் சுலபமாக நடந்து வரலாம். ஆனால் கங்கன் சிறுவன் அல்லவா? கறுப்பழகி மீது கங்கனுக்கு மிகுந்த அன்பும் பாசமும் உண்டு. கறுப்பழகியும் கங்கனைப் பத்திரமாகப் பாதுகாக்கும்.

அன்று மழை வரும்போல இருந்தது. ஆனாலும் வகுப்புகள் சீக்கிரம் முடியவில்லை. முடிந்ததும் கங்கன் ஓடி வந்தான். அவனை மேலே ஏற்றிக்கொண்டு  வேகமாகக் காட்டினை அடைந்தது. காட்டை தொட்டதுமே அடர் மழை. ஒரு மரத்தின் கீழே நின்றார்கள். மழை நின்றபாடில்லை. பயங்கர மழை. அது ஒரு பெரிய மரம். இருவரும் மறைந்துகொள்ளும் அளவிற்கு பெரிய பொந்து இருந்தது. கறுப்பழகிக்கு தாகம் எடுத்தது ஆனாலும் வேறு வழி இல்லை. நடு இரவில் மழை நின்றது, ஆனால் பயங்கர இருட்டாக இருந்ததால் காலையில் தான் போக முடியும்.

திடீரென பேச்சுக்குரல் கேட்டது. கங்கன் சத்தம் போடாதே என்று கறுப்பழகிக்கு சைகைக் காட்டினான். இரண்டு ஒற்றர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எதிரி நாட்டு ஒற்றர்கள் என்று நன்றாகத் தெரிந்தது. விஷயம் என்னவென்றால் கங்கன் வசிக்கும் நாட்டின் மீது மறுநாள் படையெடுத்து வருவதாக எதிரி நாடு திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் போருக்குத் தயாராக இல்லை. அதனால் எளிதாக இந்த நாட்டினைக் கைப்பற்றிவிடலாம் என்பதுதான் திட்டம். அந்த இரண்டு ஒற்றர்களும் கொஞ்சம் விடிந்ததும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.

நன்றாக விடிந்தது. கங்கனுக்கு வீட்டிற்குச் செல்வதா, அரண்மனைக்குச் செல்வதா என்று குழப்பம். அந்த நாட்களில் போன், ஃபேஸ்புக் போன்ற வசதிகள் இல்லை. நேராகச் சென்றுதான் தகவலைக் கொடுக்க வேண்டும். கறுப்பழகி மீது அமர்ந்து “போ! அரண்மனையை நோக்கிப் போ!” என்றான் கங்கன். ஏற்கனவே இரவு உணவு சாப்பிடவில்லை, தண்ணீர் வேறு பருகவில்லை சோர்வாக இருந்தது கறுப்பழகி. ஆனாலும் தன் நண்பனின் கட்டளைக்காகவும் தன் நாட்டிற்காகவும் வேகமாகப் பறந்தது. ஆமாம்! அது ஓடவில்லை. அத்தனை வேகமாகப் பறந்தது.

வழியில் ஒரு நீர்தேக்கத்தில் சில நிமிடங்கள் நிறுத்தி தண்ணீர் பருகினார்கள். அந்த சில நிமிடத்தில் அரண்மனைக்கு எவ்வளவு தூரம் என்பதை கங்கன் விசாரித்துவிட்டான். ஆனால் யாரிடமும் என்ன செய்தி என்று பகிரவில்லை. யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்று தெரியவில்லை.

அரண்மனை வீதி என்ற வீதியை வந்தடைந்தார்கள். மன்னரை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று வாசலில் இருந்த காவலாளியிடம் கூறினான் கங்கன். மன்னரைப் பார்க்க முடியாது என மறுத்தான் காவலாளி. கறுப்பழகி சும்மா இருக்கவில்லை.

பயங்கர சத்தம் போட்டது. மன்னரின் அறைவரையில் சத்தம் கேட்டது. மன்னரோ என்ன ஏதோ விபரீதமான சத்தம் கேட்கின்றது என வாசலுக்கு வந்துவிட்டார். சிறுவன் கங்கன் மற்றும் கறுப்பழகி இருவரையும் பார்த்ததும் ஏதோ விபரீதம் எனப் புரிந்தது. தனி அறைக்கு அழைத்து என்ன செய்தி எனக் கேட்டார் மன்னர். சிறுவன் கங்கன் நடந்ததை விவரித்தான். பதட்டம் அடைந்தார் மன்னர்.

உடனே நெருங்கிய நம்பகமான அமைச்சர்களை வரவழைத்தார். கங்கன் வசிக்கும் பகுதி என்ன, அதனை அடுத்து என்ன அரசு இருக்கின்றது எனக் கேட்டு புரிந்துகொண்டார். அடுத்த சில நிமிடங்களில் படை திரட்டப்பட்டது. எதிரி நாடு எந்தப் பக்கம் தாக்க நினைத்ததோ அந்தப் பக்கம் படை சென்றது. உள்நாட்டின் பெரும் படையைக் கண்டதும் எதிரி நாட்டுப் படை பின்வாங்கியது. ஒரு துளி ரத்தம் யாரும் சிந்தவில்லை.

இடையில் கங்கனுக்கும் கறுப்பழகிக்கும் அரண்மனையில் ராஜ உபச்சாரம். அவன் வீட்டிற்கும் தகவல் சொல்லப்பட்டது. மாலை பத்திரமாக படைவீரர்களின் பாதுகாப்புடன் மலையில் இருக்கும் வீட்டில் விடப்பட்டான். மன்னர் பெரும் பரிசுப் பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.

மறுநாள் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றான் கங்கன். நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை என காச்மூச்சென கத்திவிட்டு வகுப்பிற்கு வெளியே நிற்குமாறு ஆசிரியர் சொல்லிவிட்டார்.  மரத்தின் நிழலின் அமர்ந்திருந்த கறுப்பழகி கங்கனைப் பார்த்து சிரித்தது, கங்கனும் கறுப்பழகியைப் பார்த்து சிரித்தான்.

Share