சனி, 29 ஏப்ரல் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
வண்ணங்கள் வண்ணங்கள் காலை ஒளியில் செந்நிறம் மாலை வெய்யில் மஞ்சளாய் சோலைப் பூக்கள் பன்னிறம் சுவைக்கும் வண்டு கருநிறம்   நீல மேகம் கருமையாய் நிறத்தை மாற்று... மேலும்
மலையேறிய மார்கோ மலையேறிய மார்கோ அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள போல்பர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் 19 வயது பெண் மார்கோ ஹேய்ஸ். சிறு வயது முதலே மலையேற்றம் விளையாட்டு... மேலும்
தொலைநோக்கி தொலைநோக்கி பிரபஞ்ச ரகசியம் - 45தொலைநோக்கி- சரவணா இராஜேந்திரன் மனித நாகரீகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களின் விழிகள்தான் தொ... மேலும்
எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும் எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும் - சிகரம் உள்ளங்கையில் உலகம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 30 வயதைக் கடந்தவர்கள்கூட உண்பது, உழைப்பது, உறங்குவது தவிர எந்த அறிவும் விவரமும் ... மேலும்
Banner
தேர்வுக்கான டிப்ஸ்
PDF  | Print |  E-mail
User Rating: / 1
PoorBest 

அய்யய்யோ.... இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்-களான்னு நினைச்சு பக்கத்தை மாத்திடாதிங்க!

இதுவும் உங்கள் பள்ளித் தேர்வை எதிர்கொள்வதற்கான சில அக்கறையான குறிப்புகள் தான். படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்

1. உங்கள் வழக்கத்துக்கு மாறாக மிகவும் விரைவாக அதிகாலை எழுந்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். அப்புறம் முழுமையாகப் படிக்கவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தேர்வு அறையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டிருக்க வேண்டி-யிருக்கும். முடிந்தவரை காலையில் விரைவாக எழுங்கள், போதும். உற்சாகமாக இருக்கும்.

2. அய்யய்யோ... இதைப் படிக்கவில்லையே என்று புதிதாக எதையும் மனனம் செய்யத் தொடங்காதீர்கள். ஏற்கெனவே படித்திருக்கும் முக்கியமான பாடங்களை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பாருங்கள்.

3. தேர்வுகள் எல்லாம் நாம் படித்தவற்றைப் புரிந்து வைத்திருக்கிறோமா என்பதை அளவிடுவதற்குத் தானே தவிர, நம் வாழ்க்கையை முடிவு செய்பவை அல்ல. புரிந்ததை, தெரிந்ததை வெளிப்படுத்துங்கள். போதும்!

4. தேர்வில் சரியாக செய்யவில்லை என்பதால் மனதைக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு தேர்வில் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. வாழ்க்கை  பெரியது. உலகம் மிகப்பெரியது. வாழ்வில் மகிழ ஏராளம் உண்டு. தேர்வு, மதிப்பெண் எல்லாம் நம்மை செழுமைப்-படுத்தவே தவிர, மூழ்கடிக்க அல்ல.

அப்புறம்... உள்ளே கதைகளும், புதிர்களும் இருக்கின்றன. பாடம் படித்து போர் அடிக்கும்போது பெரியார் பிஞ்சைப் புரட்டி அவற்றையெல்லாம் படித்து முடித்துவிடுங்கள். அடுத்த இதழில் இருந்து இன்னும் பல புதுமைகள் இருக்கின்றன. அப்புறம் இதைப் படிக்க நேரமிருக்காது.

வாழ்த்துகள்!

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017