வியாழன், 19 அக்டோபர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உணவைக் காப்போம்! உணவைக் காப்போம்! தட்டில் வைத்த உணவினையே தரையில் சிந்திக் களையாதே; கொட்டிப் பரப்பி உண்ணாமல் குறைவாய் உண்ணப் பழகிடுக:   கிட்டும் உணவை ஏழையர்க்குக் கேட்... மேலும்
செய்து அசத்தலாம் செய்து அசத்தலாம் அழகிய அன்னம் தேவைப்படும் பொருள்கள்: 1.            சதுர வடிவ சிறிது தடிமனான வெளிர் நீல பேப்பர் ஒன்று. 2.            கருப்பு நிற ஸ்கெட்ச்... மேலும்
குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல் குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல் - உமாநாத் செல்வன் நீண்ட பயணங்கள் சாத்தியமில்லாத, உடனடியாக வெளியூர்களுக்குச் சென்று வரமுடியாத இந்த ஒருவாரம் - பத்து நாள் வரையிலான விடுமுறை... மேலும்
வாழையின் வாய்மொழி வாழையின் வாய்மொழி பேசாதன பேசினால் - 13வாழையின் வாய்மொழி- மு.கலைவாணன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் சுட்டிப் பெண் இனியா வீட்டில் தேர்வுக்காகப் படி... மேலும்
சிறு கை அளாவிய ஜுவல் சிறு கை அளாவிய ஜுவல் சின்னக் குழந்தைகளின் கிறுக்கல்களைக் கண்டிப்போர் உண்டு... கழுத்திலேயே அணிவோர் உண்டா? உண்டு என்கிறது அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம் சார்ல... மேலும்
பிஞ்சு மனம் பிஞ்சு மனம் தங்கம்மா பாட்டியை அந்த பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் நன்கு தெரியும். பாட்டி இந்த பள்ளியில் வேலை செய்யவில்லை. ஆனால், தினமும் ம... மேலும்
உயிர்நேயம் கொண்ட துணிச்சல் சிறுமி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

யாரென்று தெரிகிறதா?

உயிர்நேயம் கொண்ட துணிச்சல் சிறுமி

-சரா

 

இன்று துருக்கி மற்றும் அய்ரோப்பிய நாடுகளால் 2016-ஆம் ஆண்டின் நாயகி என்று இந்தப் பெண் அழைக்கப்படுகிறார்.  பொதுவாக நாம் துணிச்சலான சில செயல்களைச் செய்பவர்களை வீர தீரச்செயல் செய்பவர்கள் என்று கூறுகிறோம். ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படைவீரர்கள், காவல்துறையினர் போன்றோர்களை இந்த வரிசையில் சேர்ப்போம். நாம் படிக்கும் சித்திரக் கதைகளில் மேலே கூறியவர்களைத்தான் சூப்பர் ஹீரோ என்று சித்தரிப்பார்கள்.

ஆனால் அபூர்வமாக நிகழ் உலகில் சில சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளாக இருந்தால் மிகவும் வியப்பாக இருக்குமல்லவா? அப்படி ஒருவர்தான் அமது சேனா பெல்கின் (hamdu sena bilgin) என்ற 11 வயது சிறுமி.

துருக்கி நாட்டின் வடமேற்குப் பகுதியில் பனிப்பொழிவு நிறைந்த காட்டுப் பகுதியில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் அமது சேனா பெல்கின்.

இவர் ஒரு மணிநேர நடைபயண தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் சென்று வருவார். இவருடன் இவரது நன்பனாகப் பழகும் டோமி என்ற நாயும் தினசரி பள்ளிக்குச் செல்லும். ஒருமுறை இவர் பள்ளி சென்றுவிட்டு திரும்பும் போது அங்கிருந்த பாறையின் மறைவில் ஆடு ஒன்றின் முனகல் சத்தம் கேட்டுள்ளது, முழங்கால் வரை மூடிவிடும் பனிபடர்ந்த அந்த பகுதியில் வேறு எங்குமே பாதுகாப்பான இடம் இல்லை, அந்த ஆடு படுத்து இருந்த பாறையும் பாதிஅளவு பனியால் மூடப்பட்டிருந்தது.

அந்தக் கடுங்குளிரில் ஆடு ஒன்று குட்டியை ஈன்று கொண்டிருந்தது, இதைப் பார்த்த பெல்கினுக்கு அந்த ஆட்டை அப்படியே விட்டுச்செல்ல மனமில்லை. ஒரு கையில் புத்தகப் பைச்சுமை, பாதையில் கடுமையான பனிப்பொழிவு, அந்த ஆட்டை அப்படியே விட்டுவிட்டால் ஆடும் அதன் குட்டியும் இரவுப் பனியில் கண்டிப்பாக மரணமடைந்துவிடக்கூடும். உடனே தான் அணிந்திருந்த ஸ்வெட்டரைக் கழற்றி தாய் ஆட்டை அந்த ஸ்வெட்டரில் போர்த்திக் கொண்டு தனது உடலோடு கட்டிக்கொண்டார், குட்டி ஆட்டைத் தனது புத்தகப் பையில் வைத்து தனது நாயோடு கட்டிக்கொண்டார். பிறகு முழங்கால் அளவு பனியில் இரண்டு மணிநேரம் கடந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

வீட்டிற்கு வந்த பிறகு தனது பெற்றோரிடம் இதைக் கூறினார். இவர் பனியிலிருந்து ஆட்டையும் அதன் குட்டியையும் காப்பாற்றிய விவிரம் பிரபல ஆங்கில செய்தி நிறுவனமாகிய

ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ராய்ட்டர்ஸ் நிறுவன புகைப்படக்கலைஞர் இங்கிலாந்தில் இருந்து துருக்கியின் அங்கரா நகரத்திற்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து சுமார் 1 நாள் சாலைப் பயணமாகச் சென்று அந்த சிறுமி தங்கியிருக்கும் பண்ணைவீட்டைச் சென்றடைந்து அந்தச் சிறுமியிடம் பேட்டி கண்டார்.

அந்தப் பேட்டியில் சிறுமி கூறியதாவது, “எங்களிடம் பல ஆடுகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கும். ஒரு நாள் நானும் எனது நாயும் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருக்கும்போது பாறை ஒன்றில் ஆடும் அப்போது பிறந்த அதன் குட்டியும் குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்தன. இரவு வேளை நெருங்கிக் கொண்டிருந்ததால் நான் விரைவாக வீடுபோய்ச் சேரவேண்டும். ஆனால், இந்த ஆட்டையும் அதன் குட்டியையும் தனியே விட்டுச்சென்றால் இரண்டுமே செத்துப் போகும். அதேநேரத்தில் நான் இரண்டையும் கொண்டு செல்ல முடியாது. இந்த நிலையில் எனக்கு ஒரு யோசனை வந்தது. எனது புத்தகப் பையில் குட்டி ஆட்டை வைத்து எனது டோமியின் முதுகில் கட்டிவிட்டேன். பெரிய ஆட்டை எனது ஸ்வெட்டரில் சுற்றி என்னுடலுடன் கட்டிக்-கொண்டேன். இதனால் குட்டியும் ஆடும் குளிர் படாமல் பாதுகாப்பாக இருந்தன. எனது உடல் குளிரில் நடுங்கினாலும் நானும் டோமியும் ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்” என்று கூறினார்.

அந்தச் செய்தியாளர் கேட்டுக் கொண்ட-தற்கிணங்க எப்படி ஆட்டையும் அதன் குட்டியையும் காப்பாற்றிக் கொண்டுவந்தேன் என்று அவர்களிடம் செயல்முறையில் செய்து காட்டினார். இந்தப் படங்கள் ராய்ட்டர்ஸ் இணையத்தில் வெளியான பிறகு பெல்கின் இங்கிலாந்து முதல் துருக்கிவரை சூப்பர் ஹீரோயினாகப் பார்க்கப்-படுகிறார்.

இந்தச் செய்தி நமது பெரியார் பிஞ்சில் வெளியாவதன் மூலம் நமக்கும் இவர் ஒரு சூப்பர் ஹீரோயினாகிவிட்டார்.

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017