Home Walt Disney World எதிர்கால மாதிரி நகரம்
திங்கள், 28 மே 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
Walt Disney World எதிர்கால மாதிரி நகரம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

மிகச் சிறந்த கற்பனைகளை நினைத்து அவற்றை நனவாக்கிச் செயல்படுத்துவதில் தலைசிறந்தவர் வால்ட் டிஸ்னி! அவர் கற்பனை என்ன தெரியுமா? 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு நகரத்தைப் படைப்பது. மேலே வீடுகள், மற்றவை. நிலத்திற்குக் கீழே பேருந்துகள், கார்கள் போக்குவரத்து போன்றவை இருக்கும். அறிவுலகத்தின் அத்தனைப் படைப்புக்களையும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தி மகிழ்வுடன் வாழ்வார்கள். உலகின் பல பகுதியிலிருந்தும் இந்த நகரத்தில் வாழ்வார்கள். "எதிர்கால மாதிரி நகரம்EPCOT  ( Experimental Proto Type Community of Tomorrow) என்று பெயரிட்டார். புகை பிடித்ததால் வந்த நுரையீரல் புற்று நோயால் அவர் இறந்துவிட, அவரில்லாமல் நம்மால் இந்த நகரத்தை உருவாக்க முடியாது என்று கைவிட்டு விட்டனர். ஆனால் பெயரை மட்டும் அப்படியே வைத்துள்ளனர்.

 

இப்போது அங்கே இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று உலகில் எங்குமே இல்லாத எட்டு கட்டிடங்கள், அவற்றைக் கட்டிடங்கள் என்று சொல்ல முடியாது படைப்புக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றொரு பகுதியில் உலகின் பதினொரு நாடுகளின் சிறப்புப் படைப்புகளும், பண்பாட்டின் வெளிப்பாடுகளும் ஒரு பெரிய ஏரியைச் சுற்றி அமைந்துள்ளன.

முதல் பிரிவின் சில படைப்புகளைப் பார்ப்போமா?

அழகான பூச்செடிகள் அமைக்கப்பட்ட பூங்கா போன்ற பெரிய இடம். அதன் நுழைவாயிலில் ஒரு பெரிய கோல்ப்ஃ பந்து போன்ற ஒரு படைப்பு! அதன் முழு அமைப்புமே பெரிய அற்புதந்தான். அது படைக்கப்பட்டுள்ள பொருளுமே தனித்தன்மை வாய்ந்தது. 18 மாடிகள் உயரம். அதன் உள்ளே கற்காலத்திலிருந்து இப்போது வரை மனிதர்கள் எப்படிச் செய்தி பரிமாறிக் கொண்டார்கள் என்பதை அப்படியே காட்டும் அமைப்புக்கள். நாம் ஓர் ஊர்தியிலே அமர்ந்து இருட்டிலே மேலும் கீழும், வளைந்தும், உருண்டும், சாய்ந்தும் செல்வோம். தலைக்கு மேலே வின்மீன்கள், கீழே மக்கள். பலவகை கற்கள், ஓசை எழுப்பும் கருவிகள், காகிதம், செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, கணினி என்று படிப்படியான முன்னேற்றத்தைக் கண்முன்னே காண்போம். முடிந்து கீழே இறங்கும் போது சில மணித்துளிகளில் பல்லாயிரம் ஆண்டுப் பயணத்தை முடித்த பெருமை தோன்றும்.

அதற்குப் பெயர் "வானத்தில் பூமி உருண்டை!’

அடுத்து மக்கள் கூட்டம் அலைமோதுவது ‘வாழுங் கடல்’ என்ற அரங்கத்திற்கு. ஆம். மிகப்பெரிய கடல் நீர் தொட்டி தான் அந்த அரங்கம். 5.7 மில்லியன் அமெரிக்க கேலன் கடல் நீரால் நிரப்பப்பட்ட கடல் உலகத்திற்குச் செல்வோம். அங்கே நம்மைக் கடலுக்கு அடியில் போகும் மாதிரி உணரச் செய்வார்கள். நாம் இருந்த இடத்தில்தான் இருப்போம். ஆனால் சுற்றிலுமுள்ளவை குலுங்குவதும், காற்றுக் குமிழிகள் மேலே எழும்புவதும் நாம் கடலுக்குள் போவது போன்ற உணர்ச்சியை உண்டாக்கி விடும். அங்கு சுறா உள்ளிட்ட பலவகைக் கடல் வாழ் மீன்கள் என்று எல்லாம் நம் அருகில் உயிருடன் நீந்திச் செல்லும். மிக அழகான கடற்பாறைகளையும், பாசிகளையும் அப்படியே இயற்கையாக இருக்கும்படி (ஆனால் செயற்கை தான்) பார்ப்போம். இதையெல்லாம் நேரே பார்த்தால் இன்னும் வியப்பு பன்மடங்காக இருக்கும். பார்ப்போம் உங்களில் எத்தனை பேர் இதையெல்லாம் நேரே பார்க்கப் போகின்றீர்கள் என்று! எங்கோ பிச்சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் தந்தை பெரியார், கல்விவள்ளல் காமராசர் முயற்சிகளால் வந்து பார்த்துள்ளபோது அறிவிற் சிறந்த நீங்களெல்லாம் நன்கு படித்து முன்னேறி சுற்றுப்பயணம் வந்து கட்டாயம் பார்ப்பீர்கள்தானே?

-டாக்டர் சோம.இளங்கோவன்

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்