திங்கள், 21 ஆகஸ்ட் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அந்த ஏழுநாட்களும்! இடுக்கிமலைகளும்! அந்த ஏழுநாட்களும்! இடுக்கிமலைகளும்! கோடை விடுமுறையில் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை என்பதால், “எங்காவது சுற்றுலா போகலாம்’’ என்று அம்மாவிடம் கேட்டேன். “எங்கே போகலாம்?’’ எ... மேலும்
  தந்தை பெரியாரின் கதை 5 தந்தை பெரியாரின் கதை 5 பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவி... மேலும்
பேசாதன பேசினால் 11 பேசாதன பேசினால் 11   நெல்லி.... சொல்லிய சேதி அரசுப் பள்ளி அய்ந்தாம் வகுப்பு ஆசிரியர் சுடரொளி சமூக அறிவியலில் உள்ள தமிழ் இலக்கியப் பாடத்தை சொல்லால் காட்சிப்... மேலும்
இதற்குத் தானா? இதற்குத் தானா? அரசி மாளவிகா தேவியாருக்குக் கோபம் கோபமாக வந்தது மாமன்னரின்மேல். எப்போது பார்த்தாலும் பேசு பேசு என்றால் எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? என... மேலும்
அசரவைத்த அறிவியல் கண்காட்சி நாங்களேதான் செய்தோம்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

“ச்சே! ஏன் நம்ம அறிவை யாருமே ஏத்துக்க மாட்டேங்கறாங்க-? எதைச் செஞ்சாலும், ஏப்பா... இது நீ எழுதுனதுதானா? இல்லை... மண்டபத்தில யாராவது எழுதிக் குடுத்தாங்களா? அப்படின்னு கேட்கறதே இவங்களுக்கு பொழப்பாப் போயிடுச்சு!’’

இது புழல் மத்திய சிறைக்கு நேர்எதிராக காந்தி முதன்மைச் சாலையிலுள்ள ‘அரசு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி’யில் பயிலும் ஹேமாசிறீயின் ஆதங்கம்! இல்லையில்லை, கோபம்! வீட்டில் என்றால்கூட பரவாயில்லை. பள்ளியிலும் அப்படித்தான் என்று நினைத்திருந்தாள். அன்று தனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் செய்தியாளர் என்று ஒருவர் வந்து தானும், தனது நண்பர்களும் சேர்ந்து ரொம்...பவும் மெனக்கெட்டு செய்திருந்த சூரியகுடும்பம், பருப்பொருளின் தன்மைகள், மனிதசெரிமான மண்டலம், மனிதநுரையீரல், நவதானியங்கள் போன்றவற்றை எல்லாருக்கும் புரியும் வண்ணம் உருவங்களை உருவாக்கியும், அழகாக எழுதியும் வைத்திருந்ததைப் பார்த்து, “அருமையாக இருக்கிறது. (ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி) இதை நீங்களாகவே செய்தீர்களா? இல்லை உங்கள் வகுப்பாசிரியர் உதவி செய்தாரா?’’ என்று எல்லோரையும் போல கேட்டுவிட்டார்.

எனக்கோ, கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. ஆனாலும் சிரித்துக் கொண்டே, எங்கள் ஆசிரியரை பக்கத்தில் வைத்துக்கொண்டே, “இல்லையில்லை சார்... நாங்களேதான் செய்தோம்.’’ என்றேன். அந்த செய்தியாளர் விடுவதாக இல்லை. “உண்மையாகவா சொல்கிறீர்கள்?’’ என்று மீண்டும் கேட்டுவிட்டார். எனக்கோ சுயமரியாதை பொங்கிவிட்டது பொங்கி! “வேணும்னா வீடியோ இருக்கு காட்டட்டுமா சார்.’’ என்று பொசுக்கென்று கேட்டுவிட்டேன். இப்படி யாராவது கேட்பார்கள் என்றுதான் நாங்கள் எல்லாவற்றையும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தோம். நான் எதிர்பார்த்தற்கு மாறாக அந்த செய்தியாளரின் கண்களில் மின்னல் தெரிந்தது. ஆம் அசந்தே போய்விட்டார். அந்த மின்னல் பார்வை என்னுடன் ஏதோ பேசியது. ஆம்! அவர் எங்களை முற்றிலுமாக அங்கீகரித்து விட்டார். அதுமட்டுமல்ல எங்களது அறிவியல் ஆசிரியருக்கும்கூட இது புது அனுபவம்தான். என்னதான் பெரியவர்கள் நம்மை அங்கீகரிப்பது போல இருந்தாலும், அவர்களது ஈகோ நம்மை மட்டம் தட்டிவிடுமே என்ற பயமும், அடுத்து என்ன சொல்லப்போகிறாரோ என்றும் எனக்குள்ளே பரபரப்பாக இருந்தது. ஆனால், அவரோ எங்களுக்கு வெட்கம் வரும்வகையில் தொடர்ந்து மனம்விட்டு பாராட்டினார். எங்களை மட்டுமல்ல, எல்லோரையும் இப்படியே பாராட்டி மகிழ்ந்தார்.

இந்த அறிவியல் கண்காட்சி நான் பயிலும் புழல் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றாலும், கண்ணம்பாளையம் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகரையைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கரையைச் சேர்ந்த ஊராட்சி தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளிலிருந்தும் மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இவையெல்லாம் எங்கள் பள்ளியில் நடப்பது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ம்... அப்புறம் இதை தொடங்கி வைக்க உதவி தொடக்கக்கல்வி அலுவலர் எப்சிமா, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசஃபின், புழல் மத்திய சிறை ஆசிரியர் இராஜேந்திரன் ஆகியோரும் வந்திருந்து எங்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். எங்கள் தலைமையாசிரியரான சரளா அவர்கள் சுற்றிச்சுழன்று ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருந்தார்.

இது மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது. இதன் இலக்கு அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் உயர்வு! என்பதுதான். நிச்சயமா நாங்க அறிவியல் மனப்பான்மையோட ஒரு உயர்வான நிலைக்கு வருவோம்!

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே... என்னை கேள்வி கேட்ட செய்தியாளர், ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழில் இருந்து வந்தவராம்.

- ஹூவாமை

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017