வெள்ளி, 24 மார்ச் 2017

தற்போதைய இதழ்

Banner
உழைத்து வாழப் பழகு..,!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

காலை நேரம் எழுந்திடு
கடமை எல்லாம் முடித்திடு
பள்ளிப் பாடம் படித்திடு
படிப்பில் கவனம் செலுத்திடு!

பள்ளி நாளும் சென்றிடு
பண்பை நீயும் பெற்றிடு
நாளும் திருக்குறள் படித்திடு
நல்ல ஒழுக்கம் கற்றிடு!

அணியும் ஆடை என்றுமே
அழுக்கு இன்றி அணிந்திடு
பிணியே வராது புரிந்திடு
பெறுவாய் நலமே அறிந்திடு!

உண்மை பேசி உயர்ந்திடு
உழைத்து வாழப் பழகிடு
நன்மை செய்வாய் நாள்தோறும்
நாடே உன்னைப் போற்றிடும்!

- அழகுதாசன் சுந்தராபுரம், கோவை

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017